திருப்புகழ் 307 அலைகடல் நிகராகிய  (ஆறு திருப்பதி)
Thiruppugazh 307 alaikadalnigarAgiya  (AaRu thiruppadhi)
Thiruppugazh - 307 alaikadalnigarAgiya - AaRuthiruppadhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதானன தனதன தனதானன
     தனதன தனதானன ...... தனதான

......... பாடல் .........

அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்
     அபகட மகபாவிகள் ...... விரகாலே

அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள்
     அசடரொ டுறவாடிகள் ...... அநியாயக்

கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்
     கருதிடு கொடியாருட ...... னினிதாகக்

கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
     கழலிணை பெறவேயினி ...... யருள்வாயே

அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய
     அறுமுக வடிவேஅருள் ...... குருநாதா

அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற
     அதிரிடும் வடிவேல்விடு ...... மதிசூரா

தலையய னறியாவொரு சிவகுரு பரனேயென
     தரணியி லடியார்கண ...... நினைவாகா

சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய
     தடமயில் தனிலேறிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள்
அபகடம் மக(கா) பாவிகள்
... அலை கடலுக்கு ஒப்பாகிய
கண்களைக் கொண்டு காம வலையை வீசுபவர்கள், வஞ்சக
எண்ணமுடைய மகா பாபிகள்,

விரகாலே அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் ...
தமது தந்திரத்தாலே பலவிதமான செருக்குடன் தாழ்வான, அநியாயமான
பேச்சு பல பேசுபவர்கள்,

அசடரொடு உறவாடிகள் அநியாயக் கலை பகர்
விலைமாதர்கள் இளைஞர்கள் குடி கேடிகள்
... அசட்டு
மனிதரோடு உறவு செய்பவர்கள், அநியாயமான வழியில் உடலை
விற்கின்ற வேசியர்கள், இளைஞர்களுடைய குடியைக் கெடுப்பவர்கள்,

கருதிடு கொடியாருடன் இனிதாகக் கன தன முலை மேல்
விழு கபடனை நிரு மூடனை
... (நான்) மனத்தில் விரும்பிய கொடி
போன்ற பொதுமகளிருடன் இன்பகரமாகக் கூடி, அவர்களுடைய
பாரமான மார்பகங்கள் மேல் விழும் வஞ்சகனும் முழு மூடனுமான
என்னை,

கழல் இணை பெறவே இனி அருள்வாயே ... உனது
திருவடியிணையைப் பெறுமாறு இனி அருள்வாயாக.

அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே
அருள் குரு நாதா
... அலை வீசும் கங்கை நீரைத் தலையில்
தரித்துள்ள, உயிர்களுக்கு எல்லாம் தலைவனாகிய, சிவபெருமானது
மகனான ஆறு முக உருவத்தனே, அருள் பாலிக்கும் குரு நாதனே,

அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும்
வடிவேல் விடும் அதி சூரா
... அசுரர்கள் குடி அழியும்படியாகவும்,
தேவர்கள் தமது பொன்னுலகுக்குச் செல்வதற்காகவும், முழங்கும்
கூரிய வேலைச் செலுத்திய அதி சூரனே,

தலை அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில்
அடியார் கண(ம்) நினை வாகா
... சிறந்த பிரமன் அறிய மாட்டாத
ஒப்பற்ற சிவனுக்குக் குருபரனே என்று பூமியில் அடியார்கள் கூட்டம்
நினைக்கின்ற அழகனே,

சகலமும் முதலாகிய அறுபதி நிலைமேவிய தட மயில் தனில்
ஏறிய பெருமாளே.
... சகல தலங்களுக்கும் முதலாக விளங்கும்
ஆறு திருப்பதியில்* வீற்றிருக்கும், பெரிய மயில் மேல் ஏறிய, பெருமாளே.


* ஆறு திருப்பதிகள் (படை வீடுகள்):

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி,
திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்பன. இத்தலங்கள்
திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்ட முருகவேளின் ஆறு படை வீடுகள்.
ஆற்றுப்படை வீடு என்பது ஆறுபடை வீடு என மருவி நின்றது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1117  pg 1.1118  pg 1.1119  pg 1.1120 
 WIKI_urai Song number: 449 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 307 - alaikadal nigarAgiya (AaRu thiruppathi)

alaikadal nikarAkiya vizhikodu valaiveesikaL
     apakada makapAvikaL ...... virakAlE

athivitha matharAyatha nithamozhi palakURikaL
     asadaro duRavAdikaL ...... aniyAyak

kalaipakar vilaimAtharkaL iLainjarkaL kudikEdikaL
     karuthidu kodiyAruda ...... ninithAkak

kanathana mulaimElvizhu kapadanai nirumUdanai
     kazhaliNai peRavEyini ...... yaruLvAyE

alaipunal thalaicUdiya pasupathi makanAkiya
     aRumuka vadivEaruL ...... gurunAthA

asurarkaL kudiyEkeda amararkaL pathiyEpeRa
     athiridum vadivElvidu ...... mathicUrA

thalaiyaya naRiyAvoru sivaguru paranEyena
     tharaNiyi ladiyAarkaNa ...... ninaivAkA

sakalamu muthalAkiya aRupathi nilaimEviya
     thadamayil thanilERiya ...... perumALE.

......... Meaning .........

alai kadal nikar Akiya vizhi kodu valai veesikaL apakadam maka(a) pAvikaL: They have wide eyes like the wavy sea, spreading the ensnaring net of provocation; they are the worst sinners with deceitful thoughts;

virakAlE athi vitha matharA atham anitha mozhi pala kURikaL: deviously and with many an arrogant posture, they speak several mean and unjust words;

asadarodu uRavAdikaL aniyAyak kalai pakar vilai mAtharkaL iLainjarkaL kudi kEdikaL: they flirt with fools; these whores sell their bodies at exorbitant prices; they spoil the lives of young men;

karuthidu kodiyArudan inithAkak kana thana mulai mEl vizhu kapadanai niru mUdanai: I hanker after these creeper-like women and fall gleefully on their heavy bosom; I am such a treacherous person and an absolute fool.

kazhal iNai peRavE ini aruLvAyE: henceforth, kindly bless me to attain Your hallowed feet!

alai punal thalai cUdiya pasupathi makanAkiya aRumuka vadivE aruL guru nAthA: He holds the wavy river Gangai on His matted hair; He is the Lord of all lives; You are the six-faced Lord, the son of that SivA! You are His compassionate Master!

asurarkaL kudiyE keda amararkaL pathiyE peRa athiridum vadivEl vidum athi cUrA: To destroy the clan of the demons and to restore the homeland of the celestials to them, You wielded the roaring and sharp spear, Oh Brave One!

thalai ayan aRiyA oru siva kuru paranE ena tharaNiyil adiyAr kaNa(m) ninai vAkA: The entire crowd of the devotees think that You are the Great master of the matchless Lord SivA who could not be comprehended even by the primordial Lord BrahmA, Oh Handsome One!

sakalamum muthalAkiya aRupathi nilaimEviya thada mayil thanil ERiya perumALE.: These Six Shrines* are the foremost ones among all holy places where You are seated, mounted on the large peacock, Oh Great One!


* Six shrines (fortresses-padaiveedu) of Murugan are as follows:

ThirupparangkundRam, ThiruchchendhUr, ThiruvAvinankudi (Pazhani), ThiruvEragam (SwAmimalai), kundRudhORAdal (several mounts) and PazhamuthirsOlai. (as described in ThirumurugAtRuppadai, an ancient literature of the Sangam Age).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 307 alaikadal nigarAgiya - AaRu thiruppadhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]