திருப்புகழ் 304 எழுதிகழ் புவன  (குன்றுதோறாடல்)
Thiruppugazh 304 ezhudhigazhbuvana  (kundRudhORAdal)
Thiruppugazh - 304 ezhudhigazhbuvana - kundRudhORAdalSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனன தனதன தனன
     தனதன தனன ...... தனதான

......... பாடல் .........

எழுதிகழ் புவன நொடியள வதனி
     லியல்பெற மயிலில் ...... வருவோனே

இமையவர் பரவி யடிதொழ அவுணர்
     மடிவுற விடுவ ...... தொருவேலா

வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
     வழிபட மொழியு ...... முருகேசா

மலரடி பணியு மடமகள் பசலை
     மயல்கொடு தளர்வ ...... தழகோதான்

முழுகிய புனலி லினமணி தரள
     முறுகிடு பவள ...... மிகவாரி

முறையொடு குறவர் மடமகள் சொரியு
     முதுமலை யழக ...... குருநாதா

பழகிய வினைகள் பொடிபட அருளில்
     படிபவ ரிதய ...... முறுகோவே

பருவரை துணிய வொருகணை தெரிவ
     பலமலை யுடைய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எழுதிகழ் புவன ... ஏழு உலகங்கள் எனவிளங்கும் புவனத்தை

நொடியள வதனில் ... ஒரு நொடிப் பொழுதினில்

இயல்பெற ... அழகு விளங்க

மயிலில் வருவோனே ... மயிலில் வலம் வந்தவனே

இமையவர் பரவி அடிதொழ ... தேவர்கள் போற்றி உன்
திருவடிகளைத் தொழ

அவுணர் மடிவுற விடுவது ... அசுரர்கள் மடியும்படியாக செலுத்திய

ஒருவேலா ... ஒப்பற்ற வேலாயுதனே

வழுதியர் தமிழின் ... பாண்டிய மன்னர்களால் விருத்தி
செய்யப்பட்ட தமிழில்

ஒருபொரு ளதனை ... ஒப்பற்ற அகப்பொருள் இலக்கணத்தை

வழிபட மொழியு ... வணங்கி வேண்ட விளக்கிய (திருவிளையாடற்
புராணத்தில் வரும் உருத்திரசன்மன் [முருக அம்சம்] - கதை)

முருகேசா ... முருகேசனே

மலரடி பணியு மடமகள் ... உன் மலர்ப்பதங்களை வணங்கும் இந்த
அறியாமகள்

பசலை மயல்கொடு தளர்வ(து) ... காமத்தால் வரும் பசலை நோய்
கொண்டு மோகத்தால் தளர்ந்து போவது (இது தாய் மகளுக்காகச்
சொல்வது)

அழகோதான்? ... நியாயமாகுமா?

முழுகிய புனலில் இனமணி ... நீரில் மூழ்கி அதனின்று பல
மணிகளும்

தரள முறுகிடு பவள மிகவாரி ... முத்துக்களும், பின்னிய
பவளங்களும் நிரம்ப வாரி

முறையொடு குறவர் மடமகள் சொரியு ... விற்கக் கூவும்
குறப்பெண்கள் நிறைந்த

முதுமலை அழக குருநாதா ... முதுமலையின் (விருத்தாசலம்)
அழகா, குருநாதனே

பழகிய வினைகள் பொடிபட ... என்னுடன் வந்து பழகிய வினைகள்
பொடியாக

அருளில் படிபவர் இதய முறுகோவே ... நின்னருளில் தோய்பவர்
இதயத்தில் வீற்றிருக்கும் அரசனே

பருவரை துணிய ... பெருத்த கிரெளஞ்சமலை பிளந்து போகும்படி

ஒருகணை தெரிவ ... ஒப்பற்ற ஆயுதத்தை தேர்ந்தெடுத்துச்
செலுத்தியவனே

பலமலை உடைய பெருமாளே. ... பல மலைகளுக்கும் அதிபனான
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.559  pg 1.560  pg 1.561  pg 1.562 
 WIKI_urai Song number: 234 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 304 - ezhudhigazh buvana (kundRudhORAdal)

ezhuthigazh buvana nodiyaLa vadhanil
     iyal peRa mayilil ...... varuvOnE

imaiyavar paravi adithozha avuNar
     madivuRa viduva ...... dhoruvElA

vazhudhiyar thamizhin oruporuLadhanai
     vazhipada mozhiyu ...... murugEsA

malaradi paNiyu madamagaL pasalai
     mayalkodu thaLarva ...... dhazhagOthAn

muzhugiya punalil inamaNi tharaLa
     muRugidu pavaLa ...... migavAri

muRaiyodu kuRavar madamagaL soriyu
     mudhumalai azhaga ...... gurunAthA

pazhagiya vinaigaL podipada aruLil
     padibavar idhaya ...... muRukOvE

paruvarai thuNiya orukaNai theriva
     palamalai udaiya ...... perumALE.

......... Meaning .........

ezhuthigazh buvana: Around the Universe comprising seven worlds

nodiyaLa vadhanil: in a matter of a second

iyal peRa mayilil varuvOnE: You flew elegantly on Your peacock!

imaiyavar paravi adithozha: While the DEvAs praised and prostrated at Your holy feet,

avuNar madivuRa viduva dhoruvElA: You flung Your unique spear to kill the asuras.

vazhudhiyar thamizhin: In Tamil which flourished under the patronage of Pandya kings

oruporuLadhanai vazhipada mozhiyu: You explained the significance of agapporuL grammar at the request of learned ones (in the form of Rudrasanman - refer to ThiruviLaiyAdal)

murugEsA: Oh, MurugA, my Lord!

malaradi paNiyu madamagaL: This naive girl of mine who worships Your lotus feet

pasalai mayalkodu thaLarva dhu: is consumed by her love for You and is suffering from an infection weakening her.

azhagOthAn: Is it fair? (This is composed as if the girl's mother is singing)

muzhugiya punalil inamaNi tharaLa: In the river, the gypsy girls dip and collect a variety of pearls

muRugidu pavaLa migavAri: and corals, nicely collated;

muRaiyodu kuRavar madamagaL soriyu: to sell them these young girls gang up shouting their wares

mudhumalai azhaga gurunAthA: at Mudhumalai (Vriddhachalam), Your favourite place, my Master!

pazhagiya vinaigaL podipada: Destroy my Karma, which I am quite used to by now.

aruLil padibavar idhaya muRukOvE: You reside in the hearts of people who are the recipients of Your compassion.

paruvarai thuNiya orukaNai theriva: You sent a choice weapon to destroy the huge mount of Krouncha.

palamalai udaiya perumALE.: Oh Great One, You are the Lord of several mountains!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 304 ezhudhigazh buvana - kundRudhORAdal

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]