திருப்புகழ் 294 முத்துத் தெறிக்க  (திருத்தணிகை)
Thiruppugazh 294 muththuththeRikka  (thiruththaNigai)
Thiruppugazh - 294 muththuththeRikka - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன
     தத்தத் தனத்ததன ...... தனதான

......... பாடல் .........

முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்
     முட்டத்தொ டுத்த ...... மலராலே

முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென
     முற்பட்டெ றிக்கு ......நிலவாலே

எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி
     இப்பொற்கொ டிச்சி ...... தளராதே

எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியில்
     இற்றைத்தி னத்தில் ...... வரவேணும்

மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர
     வெற்பைத்தொ ளைத்த ...... கதிர்வேலா

மெச்சிக்கு றத்திதன மிச்சித் தணைத்துருகி
     மிக்குப்ப ணைத்த ...... மணிமார்பா

மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்
     சித்தத்தில் வைத்த ...... கழலோனே

வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை
     வெட்டித்து ணித்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முத்துத்தெறிக்க வளர் இக்குச் சிலைக்கைமதன் ... தன்னுள்
இருக்கும் முத்து தெறிக்கும்படியாக முற்றி வளர்ந்த கரும்பை வில்லாகக்
கையில் வைத்துள்ள மன்மதன்

முட்டத்தொ டுத்த மலராலே ... நன்றாகச் செலுத்திய
மலர்க்கணையாலும்,

முத்தத்திருச்சலதி முற்றத்து உதித் தியென ... முத்துக்களை
தன்னுள் கொண்டுள்ள அழகிய கடலின் மேற்பரப்பில் உதித்து,
தீயைப் போல் சூடாக

முற்பட்டெறிக்கு நிலவாலே ... எதிர்ப்பட்டு வீசும் நிலா
ஒளியாலும்,

எத் தத்தையர்க்கும் இதமிக்குப் பெருக்கம் அணி ... கிளி
போலப் பேசும் எந்தப் பெண்களும் இவளைப்பற்றி வசை பேசி
அவர்கள் அதிக இன்பம் அடையும் துன்பத்தைத் தான் அணிகின்ற

இப்பொற்கொடிச்சி தளராதே ... இந்த அழகிய கொடி
போன்ற நாயகி தளர்ச்சி அடையாமல்,

எத்திக்கும் உற்றபுகழ் வெற்றித்திருத்தணியில் ... எல்லாத்
திசைகளிலும் புகழ் பரந்துள்ள வெற்றியுடன் விளங்கும் இந்தத்
திருத்தணிகைப்பதியில்

இற்றைத்தி னத்தில் வரவேணும் ... இன்றைய தினத்தில்
நீ வந்தருள வேண்டும்.

மெத்தச் சினத்துவட திக்குக் குலச்சிகர வெற்பை ... மிகுந்த
கோபத்துடன் வடதிசையில் இருந்த சிறந்த சிகரங்களைக் கொண்ட
கிரெளஞ்சமலையை

தொளைத்த கதிர்வேலா ... தொளைத்துப் பொடியாக்கிய
ஒளிமிகுந்த வேலாயுதனே,

மெச்சிக் குறத்திதனம் இச்சித்து அணைத்துருகி ... புகழ்ச்சி
கூறி, குறத்தி வள்ளியின் மார்பினை விருப்பத்துடன்
தழுவி உள்ளம் உருகி,

மிக்குப்பணைத்த மணிமார்பா ... மிகவும் பெருமை அடைந்த
மணி மார்பனே,

மத்தப்ரமத்தர் அணி மத்தச்சடைப்பரமர் ... மிகுந்த பித்தரானவரும்,
அழகிய ஊமத்தம் பூவைச் சடையில் சூடியவருமான சிவபெருமான்

சித்தத்தில் வைத்த கழலோனே ... தம் மனத்திலே வைத்துப்
போற்றும் திருவடிகளை உடையவனே,

வட்டத்திரைக்கடலில் மட்டித்து எதிர்த்தவரை ... வட்ட வடிவான
அலைகளை வீசும் கடலில் (அசுரர்களை) முறித்து அழித்து, எதிர்த்து
வந்தவர்களை

வெட்டித்துணித்த பெருமாளே. ... வெட்டி வீழ்த்திய பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த
தலைவிக்காக பாடியது. கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள்,
மாதர்களின் வசை முதலியவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.741  pg 1.742  pg 1.743  pg 1.744 
 WIKI_urai Song number: 306 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 294 - muththuth theRikka (thiruththaNigai)

muththuth theRikka vaLar ikku silaikkai madhan
     muttath thoduththa ...... malarAlE

muththa thiru caladhi mutrath thudhiththi ena
     muRpat teRikku ...... nilavAlE

eththaththai yarkkum idha mikkup perukkamaNi
     ippoR kodichchi ...... thaLarAdhE

edhdhikkum utra pugazh vetrith thiruththaNiyil
     itrai dhinaththil ...... varavENum

meththa sinaththu vada dhikkuk kulach sikara
     veRpaith thoLaiththa ...... kadhir vElA

mechchik kuRaththi thanam ichchith thaNaiththurugi
     mikkup paNaiththa ...... maNi mArbA

maththa bramaththar aNi maththach chadaip paramar
     chiththaththil vaiththa ...... kazhalOnE

vattath thiraik kadalil mattith thedhirth thavarai
     vettith thuNiththa ...... perumALE.

......... Meaning .........

muththuth theRikka vaLar ikku silaikkai madhan: Manmathan, the Love God, is holding the bow of sugarcane, the pearl within which is about to split open;

muttath thoduththa malarAlE: and the flowery arrows expertly flung from that bow are haunting her.

muththa thiru caladhi mutraththudhith thiena: From the surface of the beautiful sea that contains many pearls, the moon rises and burns (her) like fire

muRpat teRikku nilavAlE: with its light.

eththaththai yarkkum idha mikkup perukkamaNi: She wears the misery of slander-mongering by parrot-like women who revel in gossipping repeatedly about her.

ippoR kodichchi thaLarAdhE: Lest this lovely creeper-like damsel suffer any further,

edhdhikkum utra pugazh vetrith thiruththaNiyil itrai dhinaththil varavENum: You must appear before her right this day in this place, ThiruththaNigai, famously known in all directions for its victorious glory.

meththa sinaththu vada dhikkuk kulach sikara: With extreme anger (You shattered) the Mount Krouncha in the North, famous for its high peaks,

veRpaith thoLaiththa kadhir vElA: by piercing them with Your dazzling Spear, Oh Lord!

mechchik kuRaththi thanam ichchith thaNaiththurugi: Heaping praises on VaLLi, the damsel of the KuRavAs, You hugged her bosom ardently and passionately

mikkup paNaiththa maNi mArbA: with Your highly decorated chest, Oh Lord!

maththa bramaththar aNi maththach chadaip paramar: He is said to be extremely eccentric; he adorns His tresses with the lovely flower Umaththai; He is Lord SivA;

chiththaththil vaiththa kazhalOnE: that SivA cherishes Your holy feet in His heart!

vattath thiraik kadalil mattith thedhirth thavarai: In the seas throwing waves in circles, the hostile demons who came to fight with You were all destroyed and

vettith thuNiththa perumALE.: cut into pieces by You, Oh Great One!


This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan.
The sea, the moon, Love God, the flowery arrows and the scandal-mongering women are some of the sources which aggravate the agony of her separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 294 muththuth theRikka - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]