திருப்புகழ் 255 கரிக்குழல் விரித்தும்  (திருத்தணிகை)
Thiruppugazh 255 karikkuzhalviriththum  (thiruththaNigai)
Thiruppugazh - 255 karikkuzhalviriththum - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
     தனத்தன தனத்தம் ...... தனதான

......... பாடல் .........

கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்
     கரிக்குவ டிணைக்குந் ...... தனபாரக்

கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்
     கலைத்துகில் மினுக்யும் ...... பணிவாரைத்

தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்
     தவிர்த்துன துசித்தங் ...... களிகூரத்

தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்
     தலத்தினி லிருக்கும் ...... படிபாராய்

புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்
     பொடிப்பணி யெனப்பன் ...... குருநாதா

புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின்
     புகழ்ச்சிய முதத்திண் ...... புலவோனே

திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்
     தெறிப்புற விடுக்குங் ...... கதிர்வேலா

சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென்
     திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கரிக் குழல் விரித்தும் புறக் கயல் விழித்தும் ... கரிய நிறம் உள்ள
கூந்தலை விரித்தும், வெளித் தோன்றும் கயல் மீனை ஒத்த கண்களை
விழித்தும்,

கரிக் குவடு இணைக்கும் தன பாரக் கரத்து இடு வளைச்
சங்கிலிச் சரம் ஒலித்தும்
... யானை போன்றும் மலை போன்றும்
உள்ள மார்பகங்களை உடையவராக, கைகளில் அணிந்துள்ள
வளையல்களையும் பொன் சங்கிலி மாலைகளையும் ஒலி செய்தும்,

கலைத் துகில் மினுக்(கி)யும் பணிவாரைத் தரித்து உளம்
அழிக்கும்
... மேகலை அணிந்துள்ள புடவையை பள பளப்புடன்
உடுத்தும், தம்மைப் பணிந்து ஒழுகும் ஆடவர்களை ஏற்று அவர்களின்
மனத்தை அழிக்கும்

கவட்டர்கள் இணக்கம் தவிர்த்து ... வஞ்சகர்களாகிய
விலைமாதர்களின் தொடர்பை விலக்கி,

உனது சித்தம் களி கூரத் தவக் கடல் குளித்து இங்கு உனக்கு
அடிமை உற்று
... உனது மனம் மகிழ்ச்சி அடைய, தவக் கடலில் மூழ்கிக்
குளித்து இப்பொழுது உனக்கு அடிமை பூண்டு,

உன் தலத்தினில் இருக்கும்படி பாராய் ... உன் தலமாகிய
திருத்தணிகையில் இருக்கும்படியான பாக்கியத்தைக் கண் பார்த்து
அருளுக.

புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடிப்
பணி என் அப்பன் குருநாதா
... திரி புரங்களையும் எரித்து, அழகிய
யானையையும் தோல் உரித்து, ஒளி வீசும் திருநீற்றை ஆபரணமாகக்
கொண்ட என் தந்தையாகிய சிவ பெருமானின் குரு நாதனே,

புயப் பணி கடப்பம் தொடைச் சிகரம் உற்று இன் புகழ்ச்சி
அமுதத் திண் புலவோனே
... தோளில் ஆபரணமாக கடப்ப
மாலையை அணிந்து, மேலான தன்மையை உற்று இனிய புகழ்
அமுதத்தைக் கொண்ட திண்ணிய புலவனே,

திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும் தெறிப்பு உற
விடுக்கும் கதிர் வேலா
... கூட்டமான குதிரைகளும், யானைகளும்
பொடிபடவும், அசுரர்கள் சிதறுண்ணவும் வேலைச் செலுத்திய ஒளி
வேலனே,

சிறப்பொடு குறப் பெண் களிக்கும் விசயத் தென் திருத்தணி
இருக்கும் பெருமாளே.
... சிறப்புடனே குறப் பெண்ணாகிய வள்ளி
மகிழ்கின்ற வெற்றியும் அழகும் கொண்ட திருத்தணிகையில்
வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.627  pg 1.628  pg 1.629  pg 1.630 
 WIKI_urai Song number: 262 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 255 - karikkuzhal viriththum (ThiruthaNigai)

karikkuzhal viriththum puRakkayal vizhiththum
     karikkuva diNaikkun ...... thanapArak

karaththidu vaLaicchang kilicchara moliththum
     kalaiththukil minukyum ...... paNivAraith

thariththuLa mazhikkung kavattarka LiNakkan
     thavirththuna thusiththang ...... kaLikUrath

thavakkadal kuLiththin gunakkadi maiyutRun
     thalaththini lirukkum ...... padipArAy

puraththaiyu meriththang kayaththaiyu muriththoN
     podippaNi yenappan ...... gurunAthA

puyappaNi kadappan thodaicchika ramutRin
     pukazhcchiya muthaththiN ...... pulavOnE

thiratpari karikkum podippada vuNarkkun
     theRippuRa vidukkung ...... kathirvElA

siRappodu kuRappeN kaLikkumvi sayaththen
     thiruththaNi yirukkum ...... perumALE.

......... Meaning .........

karik kuzhal viriththum puRak kayal vizhiththum: They spread out their dark hair and stare with wide open eyes that look like kayal fish;

karik kuvadu iNaikkum thana pArak karaththu idu vaLaic changkilic charam oliththum: they display their huge bosom that look like elephants and hills; they deliberately make sounds with bangles on their forearms and golden chains (around their neck);

kalaith thukil minuk(ki)yum paNivAraith thariththu uLam azhikkum: they show off their shiny sari bound by golden waist-band; they condescendingly accept those men who prostrate at their feet and blow their mind away;

kavattarkaL iNakkam thavirththu: I wish to shun the company of such treacherous whores;

unathu siththam kaLi kUrath thavak kadal kuLiththu ingu unakku adimai utRu: In order to elate You, I wish to dip in the sea of penance, become Your slave and

un thalaththinil irukkumpadi pArAy: settle at Your abode, ThiruththaNigai; kindly ensure that I am blessed with that good fortune!

puraththaiyum eriththu am kayaththaiyum uriththu oN podip paNi en appan gurunAthA: He burnt down Thiripuram, peeled off the skin of a beautiful elephant and wore the bright holy ash as a jewel; He is my Father, Lord SivA; and You are His Master, Oh Lord!

puyap paNi kadappam thodaic chikaram utRu in pukazhcchi amuthath thiN pulavOnE: You wear on Your shoulders the kadappa garland as an ornament; You have attained the peak of glory that is like the sweet nectar, Oh Learned One!

thiraL pari karikkum podippada avuNarkkum theRippu uRa vidukkum kathir vElA: Herds of horses and elephants were smashed to pieces on the battlefield and the demons were scattered as You wielded the dazzling spear, Oh Lord!

siRappodu kuRap peN kaLikkum visayath then thiruththaNi irukkum perumALE.: The damsel of the KuRavAs, VaLLi, is happily settled in the victorious and beautiful place ThiruththaNigai where You are seated with relish, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 255 karikkuzhal viriththum - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]