திருப்புகழ் 251 ஏது புத்தி  (திருத்தணிகை)
Thiruppugazh 251 Edhubudhdhi  (thiruththaNigai)
Thiruppugazh - 251 Edhubudhdhi - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தத்தன தான தத்தன
     தான தத்தன தான தத்தன
          தான தத்தன தான தத்தன ...... தந்ததான

......... பாடல் .........

ஏது புத்திஐ யாஎ னக்கினி
     யாரை நத்திடு வேன வத்தினி
          லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்

றேயி ருக்கவு நானு மிப்படி
     யேத வித்திட வோச கத்தவ
          ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்

பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
     தாளில் வைக்கநி யேம றுத்திடில்
          பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்

பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
     யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
          பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ

ஓத முற்றெழு பால்கொ தித்தது
     போல எட்டிகை நீசமுட்டரை
          யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
     மான்ம ழுக்கர மாட பொற்கழ
          லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே

மாதி னைப்புன மீதி ருக்குமை
     வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
          மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
     லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
          வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

ஏது புத்திஐ யாஎனக்கு ... எனக்கு புத்தி ஏது ஐயனே?

இனி யாரை நத்திடுவேன் ... இனிமேல் நான் யாரைச் சென்று
விரும்பி நாடுவேன்?

அவத்தினிலே யிறத்தல்கொலோ ... வீணாக இறப்பதுதான் என்
தலைவிதியோ?

எனக்குனி. தந்தைதாயென்றேயி ருக்கவு ... எனக்கு நீயே தாயும்
தந்தையுமாக இருந்தும்

நானு மிப்படியே தவித்திடவோ ... நான் இந்த விதமாகவே
தவித்திடலாமா?

சகத்தவரேசலிற்படவோ ... உலகத்தவரின் இகழ்ச்சி மொழிக்கு நான்
ஆளாகலாமா?

நகைத்தவர் கண்கள்காணப் பாதம் வைத்திடு ஐயா ... என்னை
இகழ்ந்து சிரிப்பவர்களின் கண்ணெதிரே என்னை உன் திருவடிகளில்
சேர்த்துக்கொள் ஐயனே*,

தெரித்தெனை தாளில் வைக்கநியேம றுத்திடில் ... என் நிலை
தெரிந்தும் என்னை உன் திருவடிகளில் சேர்க்க நீயே மறுப்பாயாகில்,

பார்நகைக்குமையா ... உலகோர் நகைப்பார்கள் ஐயனே,

தகப்பன்முன் மைந்தனோடி ... தந்தையின் முன் குழந்தை
ஓடிச்சென்று,

பால்மொழிக் குரல் ஓல மிட்டிடில் ... பால் மணம் மாறாத வாயால்
குரலெழுப்பி அழுதால்,

யாரெ டுப்பதெனாவெ றுத்தழ ... இந்தக் குழந்தையை யார்
எடுப்பதென்று வெறுத்து, அழும்படியாக

பார்வி டுப்பர்களோ ... இப்பூமியிலே விட்டு விடுவார்களோ?

எ னக்கிது சிந்தியாதோ ... எனக்கு இந்த உண்மை சிந்தையிலே
தோன்றலாகாதோ?

ஓத முற்றெழு பால்கொதித்தது போல ... வெள்ளமாய்ப் பெருகி
எழும் பாற்கடல் பொங்கியது போல

எட்டிகை நீசமுட்டரை ... எட்டுத் திசைகளிலும் உள்ள இழிந்த
மூடர்களான அசுரர்களை

ஓட வெட்டிய பாநு சத்திகை யெங்கள்கோவே ... ஓடும்படி
வெட்டியழித்த சூரிய ஒளி கொண்ட சக்திவேலைக் கரத்திலே
கொண்ட எங்கள் அரசனே,

ஓத மொய்ச்சடையாட ... கங்கை வெள்ளம் பெருகும் அடர்ந்த
சடாமுடி ஆடவும்,

உற்றமர் மான்மழுக்கர மாட ... பொருந்தி அமர்ந்த மானும், மழுவும்
ஏந்திய கரங்கள் ஆடவும்,

பொற்கழலோசை பெற்றிடவே நடித்தவர் தந்தவாழ்வே ...
அழகிய கால்களில் கழல் ஒலிசெய்யவும், நடனம் புரிந்த சிவனார்
தந்தளித்த செல்வமே,

மாதினைப்புன மீதிருக்கு ... பெரிய தினைப்புனத்தின் மீது
இருந்தவளும்,

மைவாள்விழிக்குற மாதினை ... மை பூசிய, ஒளி மிகுந்த கண்களை
உடையவளுமான குறப்பெண் வள்ளியை,

திருமார்ப ணைத்த மயூர அற்புத கந்தவேளே ... உன் அழகிய
மார்புறத் தழுவிய மயில்வாகனனே, அற்புத மூர்த்தியாம்
கந்த வேளே,

மாரன் வெற்றிகொள் பூமுடிக்குழலார்வியப்புற ... மன்மதன்
வெற்றி பெறும்படியான அழகிய பூமுடித்த கூந்தலை உடைய
மாதர்கள் ஆச்சரியப்படும்படியான

நீடு மெய்த்தவர் வாழ்திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே. ...
பெரிய மெய்த்தவசிகள் வாழும் திருத்தணிகை என்ற சிறந்த
மலைத்தலத்தில் வாழும் தம்பிரானே.


* தான் கேட்ட வரத்தின்படியே முருகனின் திருவடி தீட்சையை
அருணகிரிநாதர் அவரது வாழ்வில் பெற்றார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.667  pg 1.668  pg 1.669  pg 1.670 
 WIKI_urai Song number: 277 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 251 - Edhu budhdhi (thiruththaNigai)

Edhu budhdhi aiyA enakkini
     yArai naththidu vEn avaththinil
          Eyi Raththal kolO enakku ni ...... thandhai thAy en

drE irukkavu nAnum ippadi
     yE thaviththidavO jagaththavar
          EsaliR padavO nagaiththavar ...... kaNkaL kANa

pAdham vaiththidai yAthe riththenai
     thALil vaikka niyE maRuththidil
          pAr nagaikkum aiyA thagappan mun ...... maindhanOdi

pAl mozhikural Ola mittidil
     yAr eduppadhe nAve Ruththazha
          pAr viduppargaLO enakkidhu ...... chindhiyAdhO

Odha mutrezhu pAl kodhiththadhu
     pOla ettigai neesa muttarai
          Oda vettiya bAnu saththikai ...... engaLkOvE

Odha moycchadai Ada utramar
     mAn mazhukkara mAda poRkazhal
          Osai petridavE nadiththavar ...... thandhavAzhvE

mA thinaipuna meedhi rukkumai
     vALvi zhikkuRa mAdhinai thiru
          mArba Naiththa mayUra aRbudha ...... kandhavELE

mAran vetrikoL pU mudi kuzhal
     Ar viyappuRa needu meyththavar
          vAzh thiruththaNi mA malaipadhi ...... thambirAnE.

......... Meaning .........

Edhu budhdhi aiyA: Do I have any intellect, my Lord?

enakkini yArai naththiduvEn: Whom will I seek with desire from now on?

avaththinilE yiRaththal kolO: Am I destined to die in vain?

enakku ni thandhai thAy endrE irukkavu: With You as my Father and Mother,

nAnum ippadiyE thaviththidavO: how can I suffer like this?

jagaththavar EsaliR padavO: Should I become the object of ridicule in this world?

nagaiththavar kaNkaL kANa: Right before the eyes of all those laughing at me,

pAdham vaiththidaiyA: You must agree to place me at Your hallowed feet, Oh Lord!*

theriththenai thALil vaikka niyE maRuththidil: Knowing my condition, should You refuse to place me at Your feet,

pAr nagaikkum aiyA: the entire world will laugh at us, Oh Lord!

thagappan mun maindhanOdi pAl mozhikural Ola mittidil: When the child runs to his father and screams aloud, with the aroma of milk still fresh in his mouth,

yAr eduppadhe nAve Ruththazha pAr viduppargaLO: will the father despisingly question as to who would pick him up, leaving the crying child on the floor?

enakkidhu chindhiyAdhO: Why does this thought never strike me?

Odha mutrezhu pAl kodhiththadhu pOla: The milky ocean simmered like the boiling milk;

ettigai neesa muttarai Oda vettiya: and the wicked and foolish demons were driven away in all the eight directions and slaughtered by the

bAnu saththikai engaLkOvE: powerful Spear (SakthivEl), bright like the Sun, held in Your hand, Oh our Lord!

Odha moycchadai Ada: The tresses, in which River Ganga is held tightly, swayed;

utramar mAn mazhukkaramAda: His hands in which the deer and the pick-axe are sitting snugly, also swayed;

poRkazhal Osai petridavE nadiththavar thandhavAzhvE: and the anklets on His holy feet made lilting sounds while He danced; that Cosmic Dancer, Lord SivA, delivered You to us!

mA thinaipuna meedhirukku: She lives in the big millet field;

maivALvi zhikkuRa mAdhinai: She is VaLLi, the damsel of the KuRavAs, with dark and sparkling eyes;

thiru mArba Naiththa mayUra aRbudha kandhavELE: and You hugged that VaLLi with Your broad chest, Oh rider on the Peacock! Lord KandhA!

mAran vetrikoL pU mudi kuzhalAr viyappuRa: The women who adorn their hair with lovely flowers for the success of the mission of Manmathan (God of Love) are amazed

needu meyththavar vAzh thiruththaNi mA malaipadhi thambirAnE.: at the greatness of the sages who have performed long and true penance; those sages live in this distinguished hill station at ThiruththaNigai, which is Your abode, Oh Great One!


* In accordance with the boon sought by AruNagirinAthar, he was blessed with the touch of Murugan's holy feet during his life.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 251 Edhu budhdhi - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]