திருப்புகழ் 237 விரித்த பைங்குழல்  (சுவாமிமலை)
Thiruppugazh 237 viriththapaingkuzhal  (swAmimalai)
Thiruppugazh - 237 viriththapaingkuzhal - swAmimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன
     தனத்த னந்தன தனதன வெனவொலி
          விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு ...... மலைபாய

மிகுத்த வண்சிலை நுதல்மிசை திலதமொ
     டசைத்த பொன்குழை யழகெழ முகவொளி
          வெயிற்ப ரந்திட நகையிதழ் முருகலர் ...... வரிபோதத்

தரித்த தந்திரி மறிபுய மிசைபல
     பணிக்கி லங்கிய பரிமள குவடிணை
          தனக்கொ ழுந்துகள் ததைபட கொடியிடை ...... படுசேலை

தரித்து சுந்தர மெனஅடர் பரிபுர
     பதச்சி லம்பொடு நடமிடு கணிகையர்
          சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவ ...... தொழியாதோ

உரித்த வெங்கய மறியொடு புலிகலை
     தரித்த சங்கரர் மதிநதி சடையினர்
          ஒருத்தி பங்கின ரவர்பணி குருபர ...... முருகோனே

உவட்டி வந்திடு மவுணரொ டெழுகடல்
     குவட்டை யும்பொடி படசத முடிவுற
          வுழைத்த இந்திரர் பிரமனு மகிழ்வுற ...... விடும்வேலா

வரித்த ரந்துள வணிதிரு மருவிய
     வுரத்த பங்கயர் மரகத மழகிய
          வணத்த ரம்பர முறவிடு கணையினர் ...... மருகோனே

வனத்தில் வந்தொரு பழையவ னெனவொரு
     குறத்தி மென்புன மருவிய கிளிதனை
          மயக்கி மந்திர குருமலை தனிலமர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

விரித்த பைம் குழல் ஒளிர் மலர் அளி ... விரிந்த செழுமை வாய்ந்த
கூந்தலில் விளங்கும் மலர்களில் உள்ள வண்டுகள்

தன தனத்த னந்தன தனதன என ஒலி விரிப்ப ... தன தனத்த
னந்தன தனதன இவ்வாறான ஒலிகளை விரித்து எழுப்ப,

வண் கயல் விழி உறை குழையொடும் அலை பாய ... வளமை
வாய்ந்த கயல் மீன்கள் போன்ற கண்கள் காதில் பொருந்திய
குண்டலங்களோடு மோதி அலைச்சல் உற,

மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன்
குழை அழகு எழ
... மேம்பட்டு விளங்கும் வலிமை பொருந்திய
வில்லைப் போன்ற நெற்றியின் மேல் அமைந்த பொட்டும், அசைவுறும்
பொன் குண்டலங்களும் அழகு வீச,

முக ஒளி வெயில் பரந்திட நகை இதழ் முருகு அலர் வரி
போத
... முகத்து ஒளியின் ஜோதி பரந்து விளங்க, பற்களோடும்
இதழோடும் கூடிய வாசனை உள்ள (செங்குமுத) மலரை ஒத்த
(வாயினின்றும்) இசைப் பாட்டுக்கள் எழ,

தரித்த தந்திரி மறி புய(ம்) மிசை பல பணிக்கு இலங்கிய ...
ஏந்தியுள்ள தந்திகளுடன் கூடிய வீணை சார்ந்துள்ள தோள்களின்
மேல் பலவிதமான ஆபரணங்கள் விளங்க,

பரிமள குவடு இணை தனக் கொழுந் துகள் ததை பட
கொடி இடை படு சேலை தரித்து
... மணமுள்ள, மலைக்கு நிகரான
மார்பகங்களின் மீது செழுமையுள்ள (வாசனைப்) பொடிகள் நெருங்கி
பூசப்பட்டிருக்க, (வஞ்சிக்) கொடி போன்ற இடையில் புடைவையை
அணிந்து,

சுந்தரம் என அடர் பரிபுர பதச் சிலம்போடு நடம் இடு
கணிகையர்
... அழகியது என்று சொல்லும்படி பொருத்தமாயுள்ள சிலம்பு
அணிந்த பாதக் கிண்கிணியுடன் நடனம் செய்யும் விலைமாதராகிய

சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவது ஒழியாதோ ...
தீயவர்களின், வித்தைக்காரர்களின், மோக மயக்கங்களில் நான் முழுகி
இருக்கும் பழக்கம் என்னை விட்டு விலகாதோ?

உரித்த வெம் கய(ம்) மறியோடு புலி கலை தரித்த சங்கரர்
மதி நதி சடையினர்
... உரித்த கொடிய யானை, மான், புலி
(இவைகளின்) தோலைத் தரித்த சங்கரர், சந்திரன் கங்கை ஆறு
(இவைகளைத் தரித்த) சடையை உடையவரும்,

ஒருத்தி பங்கினர் அவர் பணி குருபர முருகோனே ... ஒப்பற்ற
(பார்வதியை) ஒரு பாகத்தில் கொண்டவருமான சிவபெருமான்
வணங்கும் குருபரனே, முருகனே,

உவட்டி வந்திடும் அவுணரோடு எழு கடல் குவட்டையும்
பொடி பட
... வெறுப்புற்று வந்த அசுரர்களும், ஏழு கடல்களும்,
கிரவுஞ்ச மலையும் பொடியாகும்படி,

சத(ம்) முடிவுற உழைத்த இந்திரர் பிரமனும் மகிழ்வு உற
விடும் வேலா
... நூறு (அசுவமேத யாகம்) முடியும்படி உழைத்த
இந்திரரும் பிரமனும் மகிழ்ச்சி அடையச் செலுத்திய வேலாயுதனே,

வரித் தரம் துளவு அணி திரு மருவிய உரத்த பங்கயர்
மரகதம் அழகிய வ(ண்)ணத்தர் அம்பரம் உற விடு
கணையினர் மருகோனே
... வண்டுகள் வரிசையாக மொய்க்கும்
துளசி மாலை அணிந்தவரும், லக்ஷ்மி பொருந்திய மார்பில் தாமரை
மலரை உடையவரும், மரகதப் பச்சையின் அழகிய நிறத்தினரும்,
கடல் மீது செலுத்திய (கோதண்ட) பாணத்தை உடையவரும்
ஆகிய திருமாலின் மருகனே,

வனத்தில் வந்து ஒரு பழையவன் என ஒரு குறத்தி மென்
புனம் மருவிய கிளி தனை மயக்கி
... (வள்ளி மலைக்) காட்டில்
வந்து, ஒரு கிழவன் என வேடம் பூண்டு, ஒப்பற்ற குறத்தியின் அழகிய
(தினைப்) புனத்திலிருந்த கிளி போன்ற வள்ளியை மயக்கியவனே,

மந்திர குரு மலை தனில் அமர் பெருமாளே. ... மந்திர
உபதேசத் தலமாகிய சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.555  pg 1.556  pg 1.557  pg 1.558 
 WIKI_urai Song number: 232 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 237 - viriththa paingkuzhal (SwAmimalai)

viriththa paingkuzha loLirmala raLithana
     thanaththa nanthana thanathana venavoli
          virippa vaNkayal vizhiyuRai kuzhaiyodu ...... malaipAya

mikuththa vaNsilai nuthalmisai thilathamo
     dasaiththa ponkuzhai yazhakezha mukavoLi
          veyiRpa ranthida nakaiyithazh murukalar ...... varipOthath

thariththa thanthiri maRipuya misaipala
     paNikki langiya parimaLa kuvadiNai
          thanakko zhunthukaL thathaipada kodiyidai ...... padusElai

thariththu sunthara menAdar paripura
     pathacchi lampodu nadamidu kaNikaiyar
          sazhakkar vinjaiyar mayalkaLin muzhukuva ...... thozhiyAthO

uriththa venkaya maRiyodu pulikalai
     thariththa sankarar mathinathi sadaiyinar
          oruththi pangina ravarpaNi gurupara ...... murukOnE

uvatti vanthidu mavuNaro dezhukadal
     kuvattai yumpodi padasatha mudivuRa
          vuzhaiththa inthirar piramanu makizhvuRa ...... vidumvElA

variththa ranthuLa vaNithiru maruviya
     vuraththa pangayar marakatha mazhakiya
          vaNaththa rampara muRavidu kaNaiyinar ...... marukOnE

vanaththil vanthoru pazhaiyava nenavoru
     kuRaththi menpuna maruviya kiLithanai
          mayakki manthira kurumalai thanilamar ...... perumALE.

......... Meaning .........

viriththa paim kuzhal oLir malar aLi thana thanaththa nanthana thanathana ena oli virippa: The beetles around the flowers adorning the abundant and spread out hair of the women raise music to the tune of "thana thanaththa nanthana thanathana";

vaN kayal vizhi uRai kuzhaiyodum alai pAya: their healthy kayal-fish-like eyes move sideways, colliding with the dangling ear-studs;

mikuththa vaN silai nuthal misai thilathamodu asaiththa pon kuzhai azhaku ezha: the vermillion dot on their forehead, looking like a strong and well-built bow, and the swinging golden ear-studs radiate beauty;

muka oLi veyil paranthida nakai ithazh muruku alar vari pOtha: the glow from their face spreads everywhere; musical lyrics emanate from their fragrant flower-like mouth, containing beautiful teeth and lips;

thariththa thanthiri maRi puya(m) misai pala paNikku ilangiya: their shoulders bearing the wired musical instrument (veeNai) are adorned with a variety of ornaments;

parimaLa kuvadu iNai thanak kozhun thukaL thathai pada kodi idai padu sElai thariththu: on their fragrant mountain-like bosom, rich and aromatic powders are closely splattered; they dress in sari, wrapping their creeper-like waist;

suntharam ena adar paripura pathac chilampOdu nadam idu kaNikaiyar: they wear dainty anklets, embedded with jingling kiNkiNis, which fit them beautifully, and these dancing whores

sazhakkar vinjaiyar mayalkaLin muzhukuvathu ozhiyAthO: are evil conjurers; will I never be able to shake off the habit of sinking in their provocative delusion?

uriththa vem kaya(m) maRiyOdu puli kalai thariththa sankarar mathi nathi sadaiyinar: The peeled hides of a wild elephant, deer and tiger are worn by this Lord Sankarar; on His matted hair, He wears the crescent moon and River Gangai;

oruththi panginar avar paNi gurupara murukOnE: the matchless DEvi PArvathi is concorporate on His side; that Lord SivA worships You, Oh Great Master MurugA!

uvatti vanthidum avuNarOdu ezhu kadal kuvattaiyum podi pada: Shattering the hateful demons, the seven seas and Mount Krouncha to pieces,

satha(m) mudivuRa uzhaiththa inthirar piramanum makizhvu uRa vidum vElA: and to the elation of the IndrAs, who strenuously completed a hundred (aswamEtha) sacrifices, and BrahmA, You wielded Your spear, Oh Lord!

varith tharam thuLavu aNi thiru maruviya uraththa pangayar marakatham azhakiya va(N)Naththar amparam uRa vidu kaNaiyinar marukOnE: On His thuLasi garland, the beetles abound in a row; on His chest where Goddess Lakshmi is concorporate, He wears the lotus; He is of an emerald-green complexion; He holds in His hand the bow (kOthaNdam) which He wielded upon the sea; and You are the nephew of that Lord VishNu!

vanaththil vanthu oru pazhaiyavan ena oru kuRaththi men punam maruviya kiLi thanai mayakki: You came to the forest in Mount VaLLimalai in the disguise of an old man; You met VaLLi, the parrot-like damsel of the KuRavAs, who lived in her lovely millet field; and You enticed her;

manthira kuru malai thanil amar perumALE.: You are seated in SwAmimalai, the shrine where You preached the ManthrA, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 237 viriththa paingkuzhal - swAmimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]