திருப்புகழ் 208 கடாவினிடை  (சுவாமிமலை)
Thiruppugazh 208 kadAvinidai  (swAmimalai)
Thiruppugazh - 208 kadAvinidai - swAmimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனாதனன தானம் தனாதனன தானம்
     தனாதனன தானம் ...... தனதான

......... பாடல் .........

கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்
     கடாவினிக ராகுஞ் ...... சமனாருங்

கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்
     கனாவில்விளை யாடுங் ...... கதைபோலும்

இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்
     கிராமலுயிர் கோலிங் ...... கிதமாகும்

இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்
     றியானுமுனை யோதும் ...... படிபாராய்

விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்
     வியாகரண ஈசன் ...... பெருவாழ்வே

விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்
     விநாசமுற வேலங் ...... கெறிவோனே

தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்
     சுவாசமது தானைம் ...... புலனோடுஞ்

சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
     சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கடாவினிடை வீரங் கெடாமல் ... எருமைக்கடா வாகனத்தின் மேல்
தனது வீரம் குன்றாமல்

இனிது ஏறுங் கடாவின் நிகராகுஞ் சமனாரும் ... விரும்பி ஏறும்,
கடாவைப் போன்ற முரட்டு யமனும்

கடாவிவிடு தூதன் ... கட்டளை இட்டு ஏவிவிட்ட யமதூதன்

கெடாதவழி போலும் ... தவறாமல் சரியான வழியில் வந்து உயிரைப்
பற்றுதல் போலும்,

கனாவில் விளையாடுங் கதைபோலும் ... கனவில் தோன்றிய
விளையாட்டு விழித்தால் மறப்பது போலும்,

இடாதுபல தேடுங் கிராதர்பொருள்போல் ... கொடுக்காமல்
பலப்பல தேடும் கொடியவர் பொருள் போலும்,

இங்கிராமல் உயிர் கோலிங்கு ... இவ்வுலகில் நிலைத்து
நிற்காதவண்ணம் உயிர் பறி போகிற

இதமாகும் இதாம் என ... சுகம்தான் இந்த வாழ்க்கையென்று
உணர்ந்து,

இரு போதுஞ் சதா இன்மொழியால் ... காலையும் மாலையும்
மற்றும் எப்போதும் நல்வார்த்தைகளால்

இன்று யானும் உனை ஓதும்படி பாராய் ... இன்று அடியேனும்
உன்னைத் துதிக்க கண்பார்த்தருள்வாய்.

விடாதுநட நாளும் பிடாரியுட னாடும் ... எந்நாளும் விடாமல்
நடனத்தை காளியுடன் ஆடுகின்ற

வியாகரண ஈசன்பெருவாழ்வே ... நாட்டிய இலக்கண நிபுணனாம்
சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே,

விகாரமுறு சூரன் ... மாறுபட்ட குணமுடைய சூரனின்

பகாரமுயிர் வாழ்வும் விநாசமுற ... பகட்டான வாழ்வும் உயிரும்
அழியும்படியாக

வேல் அங்கு எறிவோனே ... அவ்விடத்தில் வேலாயுதத்தை
விடுத்தவனே,

தொடாதுநெடு தூரந் தடாது ... தொட முடியாத காற்றாகவும்,
நெடுந்தூரம் தடைபடாமல்

மிக வோடுஞ் சுவாசமதுதான் ... விடாமல் ஓடுகின்றதுமான
பிராணவாயுவையும்,

ஐம்புலனோடுஞ் சுபானமுறு ... ஐந்து புலன்களையும் நன்றாக
யோகமுறையால் உள்ளே அடக்கவல்ல

ஞானந் தபோதனர்கள் சேரும் ... ஞானத் தவசிகள் கூடுகின்ற

சுவாமிமலை வாழும் பெருமாளே. ... சுவாமிமலையில்
எழுந்தருளியுள்ள பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.491  pg 1.492 
 WIKI_urai Song number: 202 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 208 - kadAvinidai (SwAmimalai)

kadAvin idai veerang kedAmal inidhERung
     kadAvi nigarAgum ...... samanArung

kadAvi vidu dhUthan kedAdha vazhi pOlung
     kanAvil viLaiyAdung ...... kadhai pOlum

idAdhu pala thEdung kirAdhar poruL pOl in
     girAmal uyir kOl ...... ingidhamAgum

idhAmen iru pOdhum sadhA in mozhiyAl in
     driyAnum unai Odhum ...... padi pArAy

vidAdhu nata nALum pidAri udan Adum
     viyAkaraNa eesan ...... peru vAazhvE

vikAramuRu sUran pagAram uyir vAzhvum
     vinAsamuRa vEl ...... angeRivOnE

thodAdhu nedu dhUran thadAdhu miga Odum
     suvAsamadhu thAn ...... aimpulan Odum

subAnamuRu nyAnan thapOdhanargaL sErum
     suvAmimalai vAzhum ...... perumALE.

......... Meaning .........

kadAvin idai veerang kedAmal inidhERum: One who mounts the buffalo bravely with pleasure

kadAvi nigarAgum samanArum: and has the dark buffalo's complexion is Yaman (Death-God);

kadAvi vidu dhUthan kedAdha vazhi pOlum: he has commanded his messenger to take my life, and he never misses his way.

kanAvil viLaiyAdung kadhai pOlum: Just like the play in the dream fizzles out when one wakes up,

idAdhu pala thEdung kirAdhar poruL pOl: and just like the disappearance of the wealth amassed by misers who seek so many things without giving alms,

ingirAmal uyir kOl ingu: life in this world is very transient and temporary;

idhamAgum idhAmena: and I delude myself that this life is a lasting pleasure!

iru pOdhum sadhA in mozhiyAl: Day and night, I should always praise You with the choicest words,

indriyAnum unai Odhum padi pArAy: and You must see to it that from today I sing Your Glory!

vidAdhu nata nALum pidAri udan Adum: He dances continuously everyday along with KALi;

viyAkaraNa eesan peru vAazhvE: He is Lord SivA, an authority on the art of dancing; and You are His son!

vikAramuRu sUran pagAram uyir vAzhvum: The demented SUran lost his pride, prestige and life

vinAsamuRa vEl angeRivOnE: when You threw Your spear to destroy that demon.

thodAdhu nedu dhUran thadAdhu miga Odum: Their inhaled air is untouchable, runs unhindered long and deep inside,

suvAsamadhu thAn aimpulan Odum subAnamuRu: and they control the five sensory organs through Yogic exercises of breathing.

nyAnan thapOdhanargaL sErum: The destination of those wise and evolved souls is

suvAmimalai vAzhum perumALE.: SwAmimalai, which is Your abode, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 208 kadAvinidai - swAmimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]