திருப்புகழ் 190 முருகுசெறி குழலவிழ  (பழநி)
Thiruppugazh 190 muruguseRikuzhalavizha  (pazhani)
Thiruppugazh - 190 muruguseRikuzhalavizha - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தனதனன தனதனன தனதனன
     தனதனன தனதனன ...... தனதான

......... பாடல் .........

முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு
     முறுவல்தர விரகமெழ ...... அநுராகம்

முதிரவச மறவிதரி யெழுகைவளை கலகலென
     முகநிலவு குறுவெயர்வு ...... துளிவீச

அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக
     அகமகிழ இருகயல்கள் ...... குழையேற

அமளிபடு மமளிமல ரணையின்மிசை துயிலுகினும்
     அலர்கமல மலரடியை ...... மறவேனே

நிருதனொடு வருபரியு மடுகரியும் ரதநிரையும்
     நெறுநெறன முறியவிடும் ...... வடிவேலா

நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமர
     நெடியநெடு ககனமுக ...... டுறைவோனே

வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற
     மதுவினிரை பெருகுவளி ...... மலைமீதே

வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு
     மருவிமகிழ் பழநிவரு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முருகு செறி குழல் அவிழ முலை புளகம் எழ நிலவு முறுவல்
தர விரகம் எழ அநுராகம் முதிர வசம் அற இதரி எழு கை
வளை கல கல் என
... மணம் நிறைந்த கூந்தல் அவிழவும், மார்பகங்கள்
புளகாங்கிதம் கொள்ள, நிலவின் ஒளியை பற்கள் வீச, காம உணர்ச்சி
உண்டாக, ஆசை வளர்ந்து பெருக, தன்வசம் அழிய, அசைந்து நிலை
பெயரும் கை வளையல்கள் கலகல் என்று ஒலிக்க,

முக நிலவு குறு வெயர்வு துளி வீச அரு மதுர மொழி பதற
இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கல் குழை
ஏற
... முகமாகிய சந்திரன் சிறு வியர்வைத் துளிகளை வீச, அருமையான
இனிய சொற்கள் பதற்றத்துடன் வர, வாயிதழினின்று வரும் ஊறலாகிய
அமுதத்தை உண்டு மிகவும் உள்ளம் களிப்பு அடைய, இரு கயல் மீன்
போன்ற கண்கள் காதளவும் பாய,

அமளி படும் அமளி மலர் அணையின் மிசை துயில் உகினும்
அலர் கமல மலர் அடியை மறவேனே
... அமர்க்களப் படும் படுக்கை
மலர் அணையில் மேல் நான் துயில் கொண்டாலும், விரிந்த உனது
தாமரைத் திருவடிகளை மறவேன்.

நிருதனோடு வரு பரியும் அடு கரியும் ரத நிரையும் நெறு
நெறு என முறிய விடும் வடிவேலா
... அசுரர்களோடு வந்த
குதிரைகளும், கொல்லும் தன்மை கொண்ட யானைகளும், தேர்
வரிசைகளும் நெறு நெறு என முறிந்து விழவும் செய்த கூரிய
வேலாயுதனே,

நிகழ் அகள சகள குரு நிருப குரு பர குமர நெடிய நெடு
ககன முகடு உறைவோனே
... அமைந்துள்ள அருவமாகியும்
உருவமாகியும் உள்ள குருராஜனே, குருபரனே, குமரனே, நீண்ட
பெரிய வானத்து உச்சியில் உறைபவனே,

வரும் அருவி நவ மணிகள் மலர் கமுகின் மிசை சிதற
மதுவின் நிரை பெருகு வ(ள்)ளி மலை மீதே வளர் குறவர்
சிறுமி இரு வளர் தனமும் இரு புயமும் மருவி மகிழ் பழநி
வரு பெருமாளே.
... வரும் அருவிகளில் நவ மணிகளும் மலர்களும்
கமுக மரத்தின் மேல் சிதற தேன் ஒழுக்கம் பெருகும் வள்ளி
மலையில் வாழும் குறப் பெண்ணாகிய வள்ளியின் இரண்டு பூரிக்கும்
மார்பகங்களையும், இரண்டு புயங்களையும் அணைத்து
மகிழ்கின்றவனே, பழனி மலையில் எழுந்தருளிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.458  pg 1.459 
 WIKI_urai Song number: 189 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 190 - muruguseRi kuzhalavizha (pazhani)

murukucheRi kuzhalavizha mulaipuLaka mezhanilavu
     muRuvalthara virakamezha ...... anurAkam

muthiravasa maRavithari yezhukaivaLai kalakalena
     mukanilavu kuRuveyarvu ...... thuLiveesa

arumathura mozhipathaRa ithazhamuthu parukimika
     akamakizha irukayalkaL ...... kuzhaiyERa

amaLipadu mamaLimala raNaiyinmisai thuyilukinum
     alarkamala malaradiyai ...... maRavEnE

niruthanodu varupariyu madukariyum rathaniraiyum
     neRuneRana muRiyavidum ...... vadivElA

nikazhakaLa sakaLaguru nirupaguru parakumara
     nediyanedu kakanamuka ...... duRaivOnE

varumaruvi navamaNikaL malarkamukin misaisithaRa
     mathuvinirai perukuvaLi ...... malaimeethE

vaLarkuRavar siRumiyiru vaLarthanamu mirupuyamu
     maruvimakizh pazhanivaru ...... perumALE.

......... Meaning .........

muruku cheRi kuzhal avizha mulai puLakam ezha nilavu muRuval thara virakam ezha anurAkam muthira vasam aRa ithari ezhu kai vaLai kala kal ena: Their fragrant hair came loose; their breasts were exhilarated; their teeth radiated moonlight; passion was ignited, and desire grew up uncontrollably; whenever their bangles changed position, a jingling sound was produced;

muka nilavu kuRu veyarvu thuLi veesa aru mathura mozhi pathaRa ithazh amuthu paruki mika akam makizha iru kayalkal kuzhai ERa: on their moon-like face, beads of perspiration appeared; their dear and sweet words of speech faltered; imbibing the nectar of saliva oozing from their lips, my heart was filled with tremendous delight; their two kayal-fish-like eyes jumped right up to the ears;

amaLi padum amaLi malar aNaiyin misai thuyil ukinum alar kamala malar adiyai maRavEnE: although I have been sleeping on their flowery bed creating a ruckus, I shall never forget Your wide and hallowed lotus feet, Oh Lord!

niruthanOdu varu pariyum adu kariyum ratha niraiyum neRu neRu ena muRiya vidum vadivElA: The armies of horses that accompanied the demons, along with murderous elephants and rows of chariots, were all knocked down with a bang when You wielded the sharp spear, Oh Lord!

nikazh akaLa sakaLa guru nirupa guru para kumara nediya nedu kakana mukadu uRaivOnE: You are a combination of shapelessness and a specific form, Oh Master-King, You are the Supreme Master, Oh KumarA! You reside at the zenith of the long and wide sky!

varum aruvi nava maNikaL malar kamukin misai sithaRa mathuvin nirai peruku va(L)Li malai meethE vaLar kuRavar siRumi iru vaLar thanamum iru puyamum maruvi makizh pazhani varu perumALE.: The waterfalls, in this mountain VaLLimalai, bring forth nine precious gems and flowers that scatter over the betelnut trees, spilling honey; here lives the damsel of the kuRavAs; and You hug with relish the two exhilarated breasts and shoulders of that VaLLi, Oh Lord! You have Your abode in Mount Pazhani, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 190 muruguseRi kuzhalavizha - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]