திருப்புகழ் 181 மருமலரினன்  (பழநி)
Thiruppugazh 181 marumalarinan  (pazhani)
Thiruppugazh - 181 marumalarinan - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த
     தனதனன தந்த தந்த ...... தனதான

......... பாடல் .........

மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி
     மதியொடுபி றந்து முன்பெய் ...... வதையாலே

வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த
     மதலையென வந்து குன்றின் ...... வடிவாகி

இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து
     இரவுபகல் கொண்டொ டுங்கி ...... யசடாகும்

இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து
     னிணையடிவ ணங்க என்று ...... பெறுவேனோ

திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை
     திகழெரியி டுங்கு ரங்கை ...... நெகிழாத

திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள்
     செறிவுடன றிந்து வென்ற ...... பொறியாளர்

பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
     பரமபத நண்ப ரன்பின் ...... மருகோனே

பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க
     பழநிமலை வந்த மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியொடு
பிறந்து
... நறு மணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் ஏவி
விட, செய்த வினையின் பயனை அனுபவிக்க, மாலை நேரத்து
சந்திரனைப் போன்ற வடிவத்துடன் (இவ்வுலகில்) பிறந்து,

முன்பு எய் வதையாலே வகை தனை மறந்து எழுந்து முலை
தனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி
...
முன் செய்த கொடு வினைகளால் வந்த வகையை மறந்து, எழுந்து
(தாயின்) முலைப் பாலைப் பருகி அழகிய குழந்தையாக வளர்ந்து, மலை
போல் வடிவை அடைந்து,

இரு மயல் கொடுந் துவண்டு பொதுவையர் அகம் புகுந்து
இரவு பகல் கொண்டு ஒடுங்கி அசடாகும்
... பெரிய காம
மயக்குடன் வாடி, பொது மகளிருடைய வீடுகளில் புகுந்து இரவும்
பகலும் அதே வேலையாயிருந்து, ஒடுங்கி அசடன் நான்

இரு வினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை
அடி வணங்க என்று பெறுவேனோ
... நல் வினை, தீ வினை
இரண்டும் சார்ந்த இந்தப் பிறப்பு, இறப்பு என்பவற்றை விட்டொழித்து
உனது இரண்டு திருவடிகளைத் தொழும் பேற்றை என்று அடைவேனோ?

திருவொடு பெயர்ந்து இருண்ட வனமிசை நடந்து இலங்கை
திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத திடம் உள முகுந்தர்
...
லக்ஷ்மியாகிய சீதையோடு (அயோத்தி நகரை விட்டு) நீங்கி இருள்
மிகுந்த காட்டில் நடந்து, இலங்கை நகரை விளங்கும் நெருப்புக்கு இட்ட
குரங்காகிய அனுமனைக் கை விடாத திடமான கருணை உள்ள ராமர்,

கஞ்சன் வர விடும் எல் வஞ்சகங்கள் செறிவுடன் அறிந்து
வென்ற பொறியாளர்
... கம்சன் அனுப்பிய நய வஞ்சகச் சூழ்ச்சிகளை
கூர்மையாக உணர்ந்து, அவைகளை வென்ற அறிவாளர் கிருஷ்ணர்,

பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற
பரம பத நண்பர் அன்பின் மருகோனே
... அன்புடன் மகிழ்ந்து
வணங்கும் மருத மரங்களின் இடையே தவழ்ந்து நின்றவரும்*, பரம
பதத்தில் இருக்கும் நண்பருமான திருமாலின் அன்பு மிகுந்த மருகனே,

பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க
பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே.
... தாமரையின் மீது
வண்டுகள் ஒலிக்கின்ற பல சுனைகள் விளங்குகின்ற பரிசுத்தமான
பழனி மலையில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே.


* குபேரன் புத்திரர்களான நளகூபரன், மணிக்ரீவன் என்ற இருவரும் மது
அருந்தி, ஜலக்ரீடை செய்து, நாரதர் முன் மரம் போல் நிற்க, அவர் நீங்கள்
மரமாகவே நிற்பீர் என்று சபித்தார். ஆகவே இருவரும் மருத மரங்கள்
ஆயினர். யசோதையால் உரலில் கட்டப்பட்ட கண்ணன் அவ்வுரலை
இழுத்துக் கொண்டு தவழ்ந்து மரங்களுக்கு இடையே செல்ல, மரங்கள்
முறிந்து விழுந்து, சாபம் நீங்கினர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.346  pg 1.347  pg 1.348  pg 1.349 
 WIKI_urai Song number: 143 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 181 - marumalarinan (pazhani)

marumalari nanthu ranthu vidavinaiya runtha anthi
     mathiyodupi Ranthu munpey ...... vathaiyAlE

vakaithanaima Ranthe zhunthu mulaithanaiya runthi yantha
     mathalaiyena vanthu kunRin ...... vadivAki

irumayalko dunthu vaNdu pothuvaiyara kampu kunthu
     iravupakal koNdo dungi ...... yasadAkum

iruvinaipo thintha intha jananamara Nanthu Ranthu
     niNaiyadiva Nanga enRu ...... peRuvEnO

thiruvodupe yarnthi ruNda vanamisaina danthi langai
     thikazheriyi dumku rangai ...... nekizhAtha

thidamuLamu kunthar kanjan varavidumel vanja kangaL
     seRivudana Rinthu venRa ...... poRiyALar

parivoduma kizhnthi Rainju maruthidaitha vazhnthu ninRa
     paramapatha naNpa ranpin ...... marukOnE

pathumamisai vaNda lampu sunaipalavi Langu thunga
     pazhanimalai vantha marntha ...... perumALE.

......... Meaning .........

maru malarinan thuranthu vida vinai aruntha anthi mathiyodu piRanthu: On the command of Lord Brahma, seated on a fragrant lotus, to experience the outcome of deeds in previous births, I was born in this world in the shape of the crescent moon of the evening;

munpu ey vathaiyAlE vakai thanai maRanthu ezhunthu mulai thanai arunthi antha mathalai ena vanthu kunRin vadivAki: due to my past bad deeds, I failed to remember the way I came into this world and woke up to imbibe my mother's breast-fed milk; I grew up into a gorgeous child, and eventually developed a physique like a mountain;

iru mayal kodun thuvaNdu pothuvaiyar akam pukunthu iravu pakal koNdu odungi asadAkum: I became obsessed with a debilitating passion and went to whore-houses to derive carnal pleasure day and night; I shrank into an absolute fool;

iru vinai pothintha intha janana maraNam thuRanthu iNai adi vaNanga enRu peRuvEnO: when will I be able to get rid of the cycle of birth and death governed by good and bad deeds and obtain the privilege of worshipping Your two hallowed feet?

thiruvodu peyarnthu iruNda vanamisai nadanthu ilangai thikazh eri idum kurangai nekizhAtha thidam uLa mukunthar: He is Lord RAmA who, accompanied by His consort Seethai, an incarnation of Goddess Lakshmi, left the city of AyOdhya and walked into the dark forest; He is filled with unremitting compassion for HanumAn whom he never forsakes and who is the great monkey that manifestly set fire to the city of LankA;

kanjan vara vidum el vanjakangaL seRivudan aRinthu venRa poRiyALar: He is the wise Lord, KrishNa, who anticipated sharply the treacherous ploys of Kamsan aimed towards Him and defeated them all;

parivodu makizhnthu iRainju maruthidai thavazhnthu ninRa parama patha naNpar anpin marukOnE: He, as a child, crawled in between the marutha trees* that worshipped Him with love and ecstasy; He is the great friendly Lord residing in the blissful heaven; and You are the love-filled nephew of that Lord VishNu!

pathumam misai vaNdu alampu sunai pala viLangum thunga pazhani malai vanthu amarntha perumALE.: In the several ponds of this holy mountain in Pazhani, lotus grows abundantly, swarmed by buzzing beetles; and You are seated here, Oh Great One!


* NaLakUbaran and MaNigreevan, both sons of Lord KubEran, were once inebriated due to excessive drinking; indulging in vulgar water-sports, they stood like trees before Sage NArathar; and the enraged Sage cursed them to become marutha trees. When as a little child Lord KrishNa was tied to a stone-barrel by His mother, YasOdhai, He crawled between the two marutha trees dragging the barrel with Him and knocked the trees down. KubEra's sons stood there in ecstasy worshipping KrishNa who removed their curse.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 181 marumalarinan - pazhani


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]