திருப்புகழ் 175 பாரியான கொடை  (பழநி)
Thiruppugazh 175 pAriyAnakodai  (pazhani)
Thiruppugazh - 175 pAriyAnakodai - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தானதனத் தந்த தானன
     தான தானதனத் தந்த தானன
          தான தானதனத் தந்த தானன ...... தனதான

......... பாடல் .........

பாரி யானகொடைக் கொண்ட லேதிரு
     வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு
          பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக ...... அபிராம

பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்
     சீல ஞாலவிளக் கின்ப சீவக
          பாக சாதனவுத் துங்க மானத ...... எனவோதிச்

சீர தாகஎடுத் தொன்று மாகவி
     பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை
          சீறு வார்கடையிற் சென்று தாமயர் ...... வுறவீணே

சேய பாவகையைக் கொண்டு போயறி
     யாம லேகமரிற் சிந்து வார்சிலர்
          சேய னார்மனதிற் சிந்தி யாரரு ...... குறலாமோ

ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு
     வாயி னேர்படவுற் றன்று மூலமெ
          னார வாரமதத் தந்தி தானுய ...... அருள்மாயன்

ஆதி நாராணனற் சங்க பாணிய
     னோது வார்களுளத் தன்பன் மாதவ
          னான நான்முகனற் றந்தை சீதரன் ...... மருகோனே

வீர சேவகவுத் தண்ட தேவகு
     மார ஆறிருபொற் செங்கை நாயக
          வீசு தோகைமயிற் றுங்க வாகன ...... முடையோனே

வீறு காவிரியுட் கொண்ட சேகர
     னான சேவகனற் சிந்தை மேவிய
          வீரை வாழ்பழநித் துங்க வானவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பாரியானகொடைக் கொண்டலே ... பாரியைப் போன்ற கொடை
மேகமே,

திரு வாழ் விசாலதொடைத் திண்புயா ... லக்ஷ்மி வாசம்செய்யும்
பெரிய மாலையை அணிந்த திண்ணிய தோளனே,

எழு பாரும் ஏறுபுகழ்க் கொண்ட நாயக அபிராம ... ஏழு
உலகிலும் மிக்க புகழ் கொண்ட நாயகனே, அழகனே,

பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள் ... புலவர்கள்
கூட்டத்திற்கு எப்போதும் வாழ்வை அருளும்

சீல ஞாலவிளக் கின்ப சீவக ... நல்லொழுக்கம் வாய்ந்த விளக்கே,
இன்பம் தரும் ஜீவகனே,

பாக சாதன உத்துங்க மானத எனவோதி ... இந்திரன் போன்று
உயர்ந்த அரசனே - என்றெல்லாம் கூறி,

சீரதாக எடுத்தொன்று மாகவி பாடி னாலும் ... சீராக
எடுத்தமைந்த ஒரு சிறப்பான பாடலைப் பாடினாலும்

இரக்கஞ்செயாதுரை சீறுவார் ... இரக்கம் காட்டாது வார்த்தைகளைச்
சீறிப் பேசுவோரது

கடையிற் சென்று தாமயர்வுற வீணே ... கடைவாயிலிற் சென்று
தாம் சோர்வு அடையும்படி வீணாக,

சேய பாவகையைக் கொண்டு போய் ... செம்மை வாய்ந்த பாமாலை
வகைகளைக் கொண்டு போய்

அறியாம லேகமரிற் சிந்து வார்சிலர் ... அறியாமலே சாக்கடையில்
கொட்டுவது போலக் கொட்டிச் சிந்துவார்கள் சிலர்.

சேய னார்மனதிற் சிந்தியார் அருகுறலாமோ ... இரப்பவர்க்குத்
தூரத்தில் நிற்பவர்கள், மனதில் சிறிதும் இரக்கத்தைச் சிந்தியாதவர்கள்
ஆகியோரின் அருகே நிற்கலாமோ?

ஆரு நீர்மைமடுக் கண்கரா நெடுவாயில் ... நிறைந்த நீருள்ளதான
கரிய சுனையின் மத்தியில் முதலையின் பெரும் வாயில்

நேர்படவுற் றன்று மூலமென ... நேராக அகப்பட்டு, அன்று
ஆதிமூலமே என்று

ஆர வாரமதத் தந்திதான் உ(ய்)ய அருள்மாயன் ... பேரொலி
செய்த மதயானையாகிய கஜேந்திரன் பிழைக்கும்வண்ணம் அருளிய மாயவன்,

ஆதி நாராணனற் சங்க பாணியன் ... ஆதிப் பரம்பொருளான
நாராயணன், பாஞ்சஜன்யம் என்ற சங்கைக் கரத்தில் ஏந்தியவன்,

ஓது வார்களுளத் தன்பன் ... அவனைத் துதிப்போர்களின்
உள்ளத்தில் இருக்கும் அன்பன்,

மாதவனான நான்முகன் நற் றந்தை சீதரன் மருகோனே ...
மகா தவனாகிய பிரமாவுக்கு நல்ல தந்தை, லக்ஷ்மியை மார்பில் தரித்த
திருமாலின் மருமகனே,

வீர சேவகவுத் தண்ட தேவகுமார ... வீரமும், பராக்கிரமும்,
உக்கிரமும் உள்ள தெய்வக் குழந்தையே,

ஆறிருபொற் செங்கை நாயக ... பன்னிரு அழகிய செங்கை
நாயகனே,

வீசு தோகைமயிற் றுங்க வாகனமுடையோனே ... வீசும் கலாப
மயிலாம் பெருமை வாய்ந்த வாகனத்தை உடையவனே,

வீறு காவிரியுட் கொண்ட சேகரனான சேவகன் ... விளங்கும்
காவிரியைத் தன்னிடத்தே கொண்ட கலிசையூர்த் தலைவனான*
பராக்ரமனின்

நற் சிந்தை மேவிய வீரை வாழ்பழநி ... நல்ல மனத்தில்
வீற்றிருக்கும் தலைவா, வீரை நகரிலும் பழநியிலும் வீற்றிருக்கும்
பெருமாளே,

துங்க வானவர் பெருமாளே. ... தூய்மையான தேவர்களின்
பெருமாளே.


* கலிசையூர்ச் சேவகன் பராக்ரமன் அருணகிரிநாதரின் நண்பன். அவனது
ஊரான வீரை திருப்பெருந்துறைக்கு மேற்கே 10 மைலில் உள்ளது.
பழநிமலை நாதரே வீரையிலும் இருப்பதாக ஐதீகம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.306  pg 1.307  pg 1.308  pg 1.309 
 WIKI_urai Song number: 123 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 175 - pAriyAna kodai (pazhani)

pAri yAnakodaik konda lEthiru
     vAzhvi sAlathodaith thiNbu yAezhu
          pAru mERupugazhk konda nAyaka ...... abirAma

pAva lOrgaLkiLaik kendrum vAzhvaruL
     seela nyAlaviLak kinba jeevaga
          pAka sAdhanauth thunga mAnadha ...... enavOdhi

seera dhAgaeduth thondru mAkavi
     pAdi nAlumirak kanse yAdhurai
          seeRu vArkadaiyil sendru thAmayar ...... vuRaveeNE

sEya pAvagaiyai koNdu pOyaRi
     iyAma lEkamaril sindhu vArsilar
          sEya nArmanadhil sindhi yAraru ...... guRalAmO

Aru neermaimaduk kaNka rAnedu
     vAyi nErpadavut RandRu mUlamen
          Ara vAramadha thandhi thAnuya ...... aruLmAyan

Adhi nAraNa aR changa pANiyan
     Othu vArkaLuLath thanpan mAthavan
          Ana nAnmuganat Randhai seedharan ...... marugOnE

veera sEvakauth thaNda dhEvaku
     mAra ARirupoR chenkai nAyaka
          veesu thOgaimayil thunga vAhanam ...... udaiyOnE

veeRu kAviriyuL koNda sEkaran
     Ana sEvakanaR chindhai mEviya
          veerai vAzhpazhani thunga vAnavar ...... perumALE.

......... Meaning .........

pAriyAna kodai kondalE: "You are a great alms-showering cloud, like PAri!

thiru vAzh visAla thodai thiNbuyA: You wear on Your broad shoulders a thick garland in which Goddess Lakshmi resides!

ezhu pArumERu pugazh konda nAyaka abirAma: Your fame extends to all the seven worlds, Oh handsome leader!

pAvalOrgaL kiLaik kendrum vAzhvaruL seela nyAla viLakkE: You always provide prosperous life to the entire clan of poets like the righteous lamp of the world!

inba jeevaga: You are full of exhilaration and life!

pAka sAdhana uththunga mAnadha enavOdhi: You are a famous king like IndrA!" - with these expressions,

seeradhAga eduththondru mAkavi pAdinAlum: even if they sing a great song with the choicest words,

irakkan seyAdhurai seeRuvAr: they are brawled at without mercy;

kadaiyil sendru thAmayar vuRa veeNE: going in vain to the doors of such people and getting exhausted,

sEya pAvagaiyai koNdu pOy: bringing exquisite compositions of different kinds,

aRiyAmalE kamaril sindhuvAr silar: some poets merely pour them into the drain without realizing what they are doing.

sEyanAr manadhil sindhi yAraru guRalAmO: Is it worth going near those whose mind is far away and inconsiderate?

Aru neermai madukkaN: In the midst of a pond, full of water,

karA neduvAyinEr padavutrandru mUlamena: he was caught in the large mouth of a crocodile; on that day, he screamed "Oh, the primordial Lord!"

AravAra madha thandhi thAnuya aruL mAyan: On hearing the outcry of that enraged elephant GajEndran, He, the Mystic One, came graciously to his rescue;

Adhi nAraNa naR sanga pANiyan: He is the pristine Lord NArAyanan and He holds in His hand the conch shell, PAnchajanyam;

Othu vArkaLuLath anpan: He is the dearest of those who pray to Him;

mADavan Ana nAnmuganaR thandhai seedharan marugOnE: He is the good father of the four-faced BrahmA, who has done great penance; and He holds Lakshmi in His heart; You are the nephew of that Vishnu!

veera sEvaka uththaNda dhEva kumAra: You are the Lord's Son with immence valour, prowess and strength .

ARiru por senkai nAyaka: You are the Lord with twelve beautiful reddish hands!

veesu thOgai mayil thunga vAhanam udaiyOnE: Your vehicle is the great peacock whose feathers unfold grandly!

veeRu kAviriyuL koNda sEkaranAna sEvaka naR: ParAkraman, the King and Protector of KalisaiyUr,* where the famous river KAveri flows,

sindhai mEviya: always thinks of You, Oh Lord!

veerai vAzh pazhani thunga vAnavar perumALE.: You reside in Veerainagar as well as in Pazhani! You are the Lord of the pure Celestials, Oh Great One!


* ParAkraman, the King of KalisaiyUr, is a friend of AruNagirinAthar. His town Veerainagar is 10 miles west of ThirupperunthuRai. It is believed that the Lord of Pazhani also resides in Veerainagar.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 175 pAriyAna kodai - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]