Sri AruNagirinAtharKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's Thiruppugazh

Sri Kaumara Chellam
  Sri Gopala Sundaramடஸ்க்கீ அமைப்பு PDF அமைப்பு அகரவரிசை எண்வரிசை
கௌமாரம் இணையத்தில் தேடல்
in TSCII in PDF alphabetical index numerical index
search Kaumaram Website

தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram
திருப்புகழ் 165 தமரும் அமரும்  (பழநி)

Thiruppugazh 165 thamarum amarum  (pazhani)
 English 
 ஆலயம் 
 temple 
with notation
with mp3 audio
previous page
next page

தனன தனன தனன தனன
     தனன தனன ...... தனதான

......... பாடல் .........

தமரு மமரு மனையு மினிய
     தனமு மரசும் ...... அயலாகத்

தறுகண் மறலி முறுகு கயிறு
     தலையை வளைய ...... எறியாதே

கமல விமல மரக தமணி
     கனக மருவு ...... மிருபாதங்

கருத அருளி யெனது தனிமை
     கழிய அறிவு ...... தரவேணும்

குமர சமர முருக பரம
     குலவு பழநி ...... மலையோனே

கொடிய பகடு முடிய முடுகு
     குறவர் சிறுமி ...... மணவாளா

அமர ரிடரு மவுண ருடலு
     மழிய அமர்செய் ...... தருள்வோனே

அறமு நிறமு மயிலு மயிலு
     மழகு முடைய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தமரும் அமரு மனையும் ... சுற்றத்தாரும், அவர்கள் கூடி இருக்கும்
இல்வாழ்க்கையும்,

இனிய தனமும் அரசும் ... இனிமையான செல்வமும், ஆட்சியும்

அயலாக ... என்னை விட்டு விலகிப் போகும்படியாக,

தறுகண் மறலி முறுகு கயிறு ... கொடுமையான யமன் திண்ணிய
பாசக்கயிற்றைக் கொண்டு

தலையை வளைய எறியாதே ... தலையைச் சுற்றி வளைப்பதற்கு
எறியாமல் இருக்க,

கமல விமல மரகதமணி ... தாமரை போன்றும், பரிசுத்தமான,
மரகதமணி போலவும்,

கனக மருவும் இருபாதம் ... தங்கத்தைப் போலவும் விளங்கும்
உன்னிரு திருவடிகளை

கருத அருளி ... நான் நினைத்துக்கொண்டே இருக்குமாறு அருளி,

எனது தனிமை கழிய ... என் திக்கற்ற தனிமை நீங்கும்படி

அறிவு தரவேணும் ... அறிவைத் தந்தருள வேண்டும்.

குமர சமர முருக பரம ... குமரா, போர் வீரா, முருகா, பரமனே,

குலவு பழநி மலையோனே ... விளங்கும் பழனிமலை வாசனே,

கொடிய பகடு ... மதம் பிடித்த யானையை

முடிய முடுகு ... (வள்ளியை பயமுறுத்தி உன்னை
அணையவைக்கவேண்டும் என்ற) உன் கருத்து நிறைவேற
எதிரே வரச் செய்தவனே,

குறவர் சிறுமி மணவாளா ... குறப்பெண் வள்ளியின்
மணவாளனே,

அமரர் இடரும் அவுணர் உடலும் ... தேவர்களின் துன்பமும்,
அசுரர்களின் உடலும்

அழிய அமர் செய்தருள்வோனே ... ஒன்றாக அழியும்படி
போர் செய்து அருளியவனே,

அறமும் நிறமும் அயிலும் மயிலும் ... தர்மமும், செந்நிறமும்,
வேலும், மயிலும்,

அழகும் உடைய பெருமாளே. ... அழகும் உடைய பெருமாளே.

      இப்பாடலின் ஒலிப்பதிவு(கள்)   audio recording(s) for this song      
The Kaumaram Team பாடலைப் பதிவிறக்க 

 to download page 


Guruji Ragavan and Thiruppugazh Anbargal பாடலைப் பதிவிறக்க 

 to download page 


P. Shanmugam பாடலைப் பதிவிறக்க 

 to download page 


Pazhani ShaNmugasundara DhEsigar பாடலைப் பதிவிறக்க 

 to download page 


S. Sivakumar பாடலைப் பதிவிறக்க 

 to download page 


Song 165 - thamarum amarum (pazhani)

thamarum amarum manaiyum iniya
     dhanamum arasum ...... ayalAga

thaRukaN maRali muRugu kayiRu
     thalaiyai vaLaiya ...... eRiyAdhE

kamala vimala maraka thamaNi
     kanaka maruvum ...... irupAdham

karudha aruLi enadhu thanimai
     kazhiya aRivu ...... tharavENum

kumara samara muruga parama
     kulavu pazhani ...... malaiyOnE

kodiya pagadu mudiya mudugu
     kuRavar siRumi ...... maNavALA

amarar idarum avuNar udalum
     azhiya amarsey ...... dharuLvOnE

aRamu niRamum ayilu mayilum
     azhagum udaiya ...... perumALE.

......... Meaning .........

thamarum amarum manaiyum: My kith and kin living in my household,

iniya dhanamum arasum ayalAga: sweet wealth and my rule - all became distant to me when

thaRukaN maRali muRugu kayiRu: the cruel Death-God (Yaman) tightened the thick rope (PAsakkayiRu)

thalaiyai vaLaiya eRiyAdhE: and threw it around my head (to take my life).

kamala vimala marakatha maNi kanaka maruvum irupAdham: (To avoid that, I need) Your lotus feet, pure and sparkling like emerald and gold;

karudha aruLi: Your grace is needed to make me think of Your feet constantly.

enadhu thanimai kazhiya aRivu tharavENum: You also have to grant me the wisdom to get rid of my helpless loneliness.

kumara samara muruga parama: Oh KumarA, Oh Warrior, MurugA, and Supreme God,

kulavu pazhani malaiyOnE: You belong to this beautiful Pazhani Hill.

kodiya pagadu mudiya mudugu: You deliberately arranged to bring a wild elephant*

kuRavar siRumi maNavALA: and married VaLLi, the damsel of KuRavas.

amarar idarum avuNar udalum: The miseries of DEvAs and the bodies of asuras

azhiya amarsey dharuLvOnE: were both destroyed when You graciously fought!

aRamu niRamum ayilu mayilum: You possess DharmA (righteousness), reddish complexion, spear, peacock

azhagum udaiya perumALE.: and charm, Oh Great One!

* As VaLLi was afraid of elephants, Murugan, in the disguise of an old man, prays to GanEshA who comes like a wild elephant, and VaLLi, being scared, embraces Murugan.

திருப்புகழ் 165 தமரும் அமரும்  (பழநி)

Thiruppugazh 165 thamarum amarum  (pazhani)
 தமிழில் 
 ஆலயம் 
 temple 
with mp3 audio
previous page
next page

டஸ்க்கீ அமைப்பு PDF அமைப்பு அகரவரிசை எண்வரிசை
கௌமாரம் இணையத்தில் தேடல்
in TSCII in PDF alphabetical index numerical index
search Kaumaram Website

(#ref_code#)

Thiru AruNagirinAthar's Thiruppugazh 165 thamarum amarum - (pazhani)

Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
Kaumaram.com uses dynamic fonts.
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 

... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

 ஆரம்பம்   அட்டவணை   மேலே   தேடல் 
 பார்வையாளர் கருத்துக்கள்   உங்கள் கருத்து   பார்வையாளர் பட்டியலில் சேர 
 home   contents   top   search   sign guestbook   view guestbook   join our mailing list 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[fbk]   [xhtml] .
 [css]