திருப்புகழ் 141 கனக கும்பம்  (பழநி)
Thiruppugazh 141 kanagakumbam  (pazhani)
Thiruppugazh - 141 kanagakumbam - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தந்தன தந்த தானன
     தனன தந்தன தந்த தானன
          தனன தந்தன தந்த தானன ...... தந்ததான

......... பாடல் .........

கனக கும்பமி ரண்டு நேர்மலை
     யெனநெ ருங்குகு ரும்பை மாமணி
          கதிர்சி றந்தவ டங்கு லாவிய ...... முந்துசூதம்

கடையில் நின்றுப ரந்து நாடொறு
     மிளகி விஞ்சியெ ழுந்த கோமள
          களப குங்கும கொங்கை யானையை ...... யின்பமாக

அனைவ ருங்கொளு மென்று மேவிலை
     யிடும டந்தையர் தங்கள் தோதக
          மதின்ம ருண்டுது வண்ட வாசையில் ...... நைந்துபாயல்

அவச மன்கொளு மின்ப சாகர
     முழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழி
          தருப தங்கதி யெம்பி ரானருள் ...... தந்திடாயோ

தனத னந்தன தந்த னாவென
     டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை
          தகுதி திந்திகு திந்த தோவென ...... வுந்துதாளந்

தமர சஞ்சலி சஞ்ச லாவென
     முழவு டுண்டுடு டுண்டு டூவென
          தருண கிண்கிணி கிண்கி ணாரமு ...... முந்தவோதும்

பணிப தங்கய மெண்டி சாமுக
     கரிய டங்கலு மண்ட கோளகை
          பதறி நின்றிட நின்று தோதக ...... என்றுதோகை

பவுரி கொண்டிட மண்டி யேவரு
     நிசிச ரன்கிளை கொன்ற வேலவ
          பழநி யங்கிரி யின்கண் மேவிய ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

கனக கும்பம் இரண்டும் நேர் மலை என நெருங்கு குரும்பை
மா மணி கதிர் சிறந்த வடம் குலாவிய முந்து சூதம்
... இரண்டு
பொன் குடத்துக்கு ஒப்பான மலைக்கு நிகர் என்று கூறும்படி
நெருங்கியுள்ள இள நீர் குரும்பைப் போன்று, அழகிய மணிகள் ஒளி
சிறந்த மாலைகளில் விளங்கினவாய், முற்பட்ட சூதாடு கருவிகளைப்
போன்ற மார்பகங்களுடன்,

கடையில் நின்று பரந்து நாள் தொறும் இளகி விஞ்சி எழுந்த
கோமள களப குங்கும கொங்கை யானையை இன்பமாக
அனைவரும் கொளும் என்றுமே விலை இடும் மடந்தையர்
...
வீட்டு வாயிலில் நின்று யாரை வசப்படுத்தலாம் என்ற பரபரப்பு
கொண்டு, ஒவ்வொரு நாளும், இளகி மேல் எழுந்துள்ள அழகிய
கலவைச் சாந்து அணிந்த குங்குமம் விளங்கும் யானையைப் போன்ற
மார்பகங்களை இன்பத்துடன் எல்லாரும் கொள்ளுங்கள் என்று
விலைக்கு விற்கும் விலைமாதர்களுடைய

தங்கள் தோதகம் அதின் மருண்டு துவண்டு அ(வ்)வாசையில்
நைந்து பாயல் அவசம் மன் கொளும் இன்ப சாகர(ம்) முழுகும்
வஞ்சக நெஞ்சையே ஒழி தரு(ம்) பதம் கதி எம்பிரான் அருள்
தந்திடாயோ
... மாய்மாலச் செயலில் மயங்கி வாடி, உள்ளம் நசுங்கி,
படுக்கையில் பரவசம் போன்ற மயக்கத்தை அதிகமாகக் கொள்ளும்
இன்பக் கடலில் முழுகும் வஞ்சக மனத்தைத் தொலைக்கவல்ல உனது
திருவடியாகிய புகலிடத்தை, எம்பிரானே, நீ அருளமாட்டாயோ?

தனதனந்தன தந்தனாவென டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை
தகுதி திந்திகு திந்த தோவென உந்து தாளம் தமர சஞ்சலி
சஞ்சலா என
... பேரிகை தனதனந்தன தந்தனா டிகுகு டிங்குகு
டிங்கு என்று முழங்க, வீச்சுடன் தாளவாத்தியங்கள் தகுதி திந்திகு
திந்த தோவென்று சப்திக்க, டமருகம் என்ற வாத்தியம் சஞ்சலி
சஞ்சலா என்று ஒலிக்க,

முழவு டுண்டுடு டுண்டு டூவென தருண கிண்கிணி கிண்கிண்
ஆரமு(ம்) முந்த ஓதும்
... முரசு டுண்டுடு டுண்டு டூவென்று
அடிக்கப்பட, சிறிய சதங்கை கிண்கிண் என்று முற்பட்டு ஒலிக்க,

பணி பதம் கயம் எண் திசாமுக கரி அடங்கலும் அண்ட
கோளகை பதறி நின்றிட நின்று தோ தக என்று தோகை
பவுரி கொண்டிட
... பாம்பைத் தனது பாதத்தில் பூண்டதாய், எட்டு
திசைகளில் உள்ள யானைகள் யாவும், உருண்டை வடிவமான
அண்டங்களும் நடுங்கி நிற்கவும், தோகை மயில் தோ தக என்ற
ஒலிக் குறிப்புடன் நடனம் புரிய,

மண்டியே வரும் நிசிசரன் கிளை கொன்ற வேலவ பழநி அம்
கிரியின் கண் மேவிய தம்பிரானே.
... நெருங்கி வந்த அசுரனாகிய
சூரனது கூட்டத்தைக் கொன்ற வேலவனே, அழகிய பழனி மலையில்
எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.420  pg 1.421  pg 1.422  pg 1.423 
 WIKI_urai Song number: 175 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 141 - kanaga kumbam (pazhani)

kanaka kumpami raNdu nErmalai
     yenane runguku rumpai mAmaNi
          kathirsi Ranthava dangu lAviya ...... munthucUtham

kadaiyil ninRupa ranthu nAdoRu
     miLaki vinjiye zhuntha kOmaLa
          kaLapa kunguma kongai yAnaiyai ...... yinpamAka

anaiva rumkoLu menRu mEvilai
     yiduma danthaiyar thangaL thOthaka
          mathinma ruNduthu vaNda vAsaiyil ...... nainthupAyal

avasa mankoLu minpa sAkara
     muzhukum vanjaka nenjai yEyozhi
          tharupa thangathi yempi rAnaruL ...... thanthidAyO

thanatha nanthana thantha nAvena
     dikuku dinguku dingu pErikai
          thakuthi thinthiku thintha thOvena ...... vunthuthALan

thamara sanjali sanja lAvena
     muzhavu duNdudu duNdu dUvena
          tharuNa kiNkiNi kiNki NAramu ...... munthavOthum

paNipa thangaya meNdi sAmuka
     kariya dangalu maNda kOLakai
          pathaRi ninRida ninRu thOthaka ...... enRuthOkai

pavuri koNdida maNdi yEvaru
     nisisa rankiLai konRa vElava
          pazhani yangiri yinkaN mEviya ...... thambirAnE.

......... Meaning .........

kanaka kumpam iraNdum nEr malai ena nerungu kurumpai mA maNi kathir siRantha vadam kulAviya munthu cUtham: Their mountain-like breasts look like two golden pots, baby coconuts and gambling dice, displaying bright strands of beautiful gems;

kadaiyil ninRu paranthu nAL thoRum iLaki vinji ezhuntha kOmaLa kaLapa kunguma kongai yAnaiyai inpamAka anaivarum koLum enRumE vilai idum madanthaiyar: standing restlessly, each and every day, at their door-step, they look for those they could entice; offering their soft, erect and elephant-like bosom, smeared with a nice paste of vermillion, these whores bargain for a price;

thangaL thOthakam athin maruNdu thuvaNdu a(v)vAsaiyil nainthu pAyal avasam man koLum inpa sAkara(m) muzhukum vanjaka nenjaiyE ozhi tharu(m) patham kathi empirAn aruL thanthidAyO: lured by their magical spell and with a dismayed and bruised heart, I indulge in excessive love-making on their bed; kindly grant me the only solace, namely, Your hallowed feet that alone could destroy my treacherous mind sinking in the sea of delusory bliss, Oh Lord!

thanathananthana thanthanAvena dikuku dinguku dingu pErikai thakuthi thinthiku thintha thOvena unthu thALam thamara sanjali sanjalA ena: As the large drum (bErikai) made the sound "thanathananthana thanthanA dikuku dinguku dingu", percussion instruments in full swing were beaten to the meter "thakuthi thinthiku thintha thO"; the instrument damarukam made a clinging noise "sanjali sanjalA",

muzhavu duNdudu duNdu dUvena tharuNa kiNkiNi kiNkiN Aramu(m) muntha Othum: the drums were beaten to the meter "duNdudu duNdu dU" and the little anklets prominently jingled to the tune of "giNgiN";

paNi patham kayam eN thisAmuka kari adangalum aNda kOLakai pathaRi ninRida ninRu thO thaka enRu thOkai pavuri koNdida: Your peacock with its plume, holding a serpent in the grip of its feet, danced to the beat "thOthaka" scaring away the elephants in all the eight directions and the spherical worlds into a state of shudder!

maNdiyE varum nisisaran kiLai konRa vElava pazhani am kiriyin kaN mEviya thambirAnE.: You destroyed the confronting armies of the demon SUran by wielding Your spear, Oh Lord! You are seated in the beautiful Mount Pazhani, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 141 kanaga kumbam - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]