திருப்புகழ் 106 அதல விதல  (பழநி)
Thiruppugazh 106 adhalavidhala  (pazhani)
Thiruppugazh - 106 adhalavidhala - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதனன தந்தத்த தந்ததன
     தனன தனதனன தந்தத்த தந்ததன
          தனன தனதனன தந்தத்த தந்ததன ...... தந்ததான

......... பாடல் .........

அதல விதலமுத லந்தத்த லங்களென
     அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
          அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு

அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
     அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
          அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம்

உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி
     ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி
          லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன்

உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
     மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்
          உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோ

ததத ததததத தந்தத்த தந்ததத
     திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
          தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி

சகக சககெணக தந்தத்த குங்கெணக
     டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
          தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம்

பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
     அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு
          பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ...... துங்ககாளி

பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு
     கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்
          பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

அதலம் விதலம் முதல் அந்தத் தலங்கள் என ... அதலம் விதலம்
முதலான அந்தக் கீழ்* ஏழு உலகங்கள் எனவும்,

அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என ... இப்பூமி
எனவும், தேவர்களின் அண்டங்களான மேல்* ஏழு உலகங்கள் எனவும்,

அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என ... சகல கடல்கள்
எனவும், எட்டுத் திசைகளிலுள்ள மலைகள் எனவும்,

அங்கி பாநு அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என ...
அக்கினி, சூரியன், குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரன் (என்னும்
முச்சுடர்கள்) எனவும், ஒன்றோடு ஒன்று சந்தித்து ஒற்றுமைப்பட்ட
மந்திரங்கள் எனவும்,

அறையும் மறை என அரும் தத்துவங்கள் என ... சிறப்பாக
ஓதுகின்ற வேதம் எனவும், அருமையாகச் சொல்லப்படும் (96) தத்துவப்
பொருள்கள்** எனவும்,

அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம் ...
அணுவுக்குள் அணு எனவும், இங்ஙனம் எங்கும் நிறை பொருளாய்
நின்றுள்ள ஒரு பேருண்மை,

உதயம் எழ இருள் விடிந்து அக்கணம் தனில் ... எனது உள்ளத்தில்
தோன்றி விளங்கவும், அஞ்ஞானம் என்ற இருள் ஒழிந்து அந்தக் கணமே

இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து உணர்வில் உணரும்
அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன் உதவ
...
இதயத் தாமரை எனப்படும் மொட்டு அங்கே கட்டு நீங்கி, உணர்விலே
உணரப்படும்படியான அநுபவ ஞானத்தை நான் பெற்றிடும் வகையை
நீ முன்பு வந்து உதவி அருள,

இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என ... இடைவிடாத
அன்பால் அருமையான இனிய சொற்களால் ஆன நூலாக,

மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ் உரிய ... இசை வடிவப்
பாக்களாகிய மதுர கவிகளில் மனம் ஆசை வைத்துத் திருப்புகழ்
என்னும் சந்தப் பாவால் பாடும் உரிமைப் பாக்கியத்தைப் பெற்ற

அடிமை உனை அன்றிப் ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ ...
அடிமையாகிய நான் உன்னை அல்லால் இவ்வுலக வாழ்வினை
நம்ப மாட்டேன்.

ததத ததததத தந்தத்த தந்ததத
 திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
  தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி
   சகக சககெணக தந்தத்த குங்கெணக
    டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
     தகக தகதகக தந்தத்த தந்தகக என்றுதாளம்
... என்ற
சந்தத்துக்கேற்ற தாளத்தில்

பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக ... பதலை திமிலை
முதலிய பறைகள், தம்பட்டம் இவை ஒலிகளை எழுப்ப,

அகில நிசிசரர் நடுங்கக் கொடும் கழுகு பரிய குடர் பழு
எலும்பைப் பிடுங்க
... எவ்விடத்திலும் உள்ள அசுரர்கள் நடுக்கம்
கொள்ள, கொடிய கழுகுகள் (பிணங்களின்) பருத்த குடல்களையும்
விலா எலும்புகளையும் பிடுங்க,

ரண துங்க காளி பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி
இட
... போர்க்களத்து வெற்றிக் காளி களி நடனம் புரிய, நரிகள்
ஊளையிட, பருந்துகளின் சிறகுகள் சாமரம் வீச,

இகலை வென்று சிகண்டி தனில் பழநி மலையின் மிசை
வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே.
... போரை வென்று
மயிலின் மேல் பழனி மலை மீது வந்து அமர்ந்துள்ள, தேவர்களின்
பெருமாளே.


* கீழ் உலகங்கள் ஏழு:

அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்.


** மேல் உலகங்கள் ஏழு:

பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம்,
சத்திய லோகம்.


*** 96 தத்துவங்கள் பின்வருமாறு:

36 பரதத்துவங்கள் (அகநிலை):
ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை):
மண், தீ, நீர், காற்று, வெளி.

ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.380  pg 1.381  pg 1.382  pg 1.383 
 WIKI_urai Song number: 157 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 106 - adhala vidhala (pazhani)

athala vithalamutha lanthaththa langaLena
     avani yenaamarar aNdaththa kaNdamena
          akila salathiyena eNdikkuL viNduvena ...... angibAnu

amutha kathirkaLena anthiththa manthramena
     aRaiyu maRaiyenaa runthaththu vangaLena
          aNuvi laNuvenani Rainthittu ninRathoru ...... samprathAyam

uthaya mezhairuLvi dinthakka Nanthanili
     ruthaya kamalamuki zhangatta vizhnthuNarvi
          luNaru manupavama nampetRi dumpadiyai ...... vanthuneemun

uthava iyaliniyal senchoRpra panthamena
     mathura kavikaLilma nampatRi runthupukazh
          uriya adimaiyunai yanRippra panchamathai ...... nampuvEnO

thathatha thathathathatha thanthaththa thanthathatha
     thithithi thithithithithi thinthiththi thinthithithi
          thakuku thakuthakuku thanthaththa thanthakuku ...... thinthithOthi

sakaka sakakeNaka thanthaththa kungeNaka
     dididi dididididi diNditti diNdididi
          thakaka thakathakaka thanthaththa thanthakaka ...... enRuthALam

pathalai thimilaithudi thampatta mumperuka
     akila nisisararna dungakko dunkazhuku
          pariya kudarpazhuve lumpaippi dungaraNa ...... thungakALi

pavuri yidanaripu lampappa runthiRaku
     kavari yidaikalai venRucchi kaNdithanil
          pazhani malaiyinmisai vanthutRa inthirarkaL ...... thambirAnE.

......... Meaning .........

athalam vithalam muthal anthath thalangaL ena: All the seven lower worlds* including athalam, vithalam and others,

avani ena amarar aNdaththu akaNdam ena: this earth, all the seven upper worlds* of the celestials,

akila salathi ena eN thikku uL viNdu ena: all the oceans, all the mountains in the eight cardinal directions,

angi pAnu amutha kathirkaL ena anthiththa manthram ena: the Fire God, the Sun and the Moon with cool radiation (the Three Effulgences), the ManthrAs that mutually intermingle,

aRaiyum maRai ena arum thaththuvangaL ena: the VEdAs that are chanted impressively, the rare tenets** (96 ThathvAs)

aNuvil aNu ena niRainthittu ninRathu oru samprathAyam uthayam ezha iruLvi dinthu: and an atom within an atom; - likewise, It is something omnipresent; in order that such a Principle of Truth emerges in my heart, destroying the darkness of ignorance,

akkaNam thanil iruthaya kamalam mukizham kattu avizhnthu uNarvil uNarum anupavam manam petRidumpadiyai: and at that very moment, for the lotus bud of my heart to blossom, and to enable me to attain enlightenment that can be experienced only inwardly,

vanthu nee mun uthava: You have to manifest before me graciously to help so that

iyalin iyal sem sol prapantham ena: a work of art is composed with sweet words of love,

mathura kavikaLil manam patRirunthu pukazh uriya: rendered in the form of musical poems, with utmost devotion, in lilting meters, to be known as Thiruppugazh (Glory of the Lord); having obtained Your blessings for such a great honour,

adimai unai anRip prapancham athai nampuvEnO: will this servant of Yours ever trust in any other aspect of this world excepting You?

thathatha thathathathatha thanthaththa thanthathatha
 thithithi thithithithithi thinthiththi thinthithithi
  thakuku thakuthakuku thanthaththa thanthakuku thinthithOthi
   sakaka sakakeNaka thanthaththa kungeNaka
    dididi dididididi diNditti diNdididi
     thakaka thakathakaka thanthaththa thanthakaka enRuthALam:
To (this) meter,

pathalai thimilai thudi thampattamum peruka: various drums such as pathalai, thimilai, hand-drum and thampattam were beaten making a lot of noise;

akila nisisarar nadungak kodum kazhuku pariya kudar pazhu elumpaip pidunga: the demons who were scattered everywhere began to shake with fear; wild eagles plucked with their beaks fat tissues of intestines and rib bones (of the corpses);

raNa thunga kALi pavuri ida nari pulampa parunthu iRaku kavari ida: KALi, the triumphant deity of the battlefield, danced ecstatically; the jackals yelled; and the vultures blew their feathers as if they were gently swaying the royal hand-fans;

ikalai venRu sikaNdi thanil pazhani malaiyin misai vanthu utRa inthirarkaL thambirAnE.: when You won the war and mounted the peacock heading towards Pazhani, where You are seated as the Lord of the celestials, Oh Great One!


* The lower seven worlds are:

athalam, vithalam, suthalam, tharAthalam, mahAthalam, rasAthalam and pAthAlam.


** The upper seven worlds are:

bUlOgam, bhuvalOgam, suvalOgam, janalOgam, thabOlOgam, mahAlOgam and sathyalOgam.


*** The 96 thathvAs (tenets) are as follows:

36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5.

5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos.

35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 106 adhala vidhala - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]