திருப்புகழ் 105 அணிபட்டு அணுகி  (பழநி)
Thiruppugazh 105 aNipattuaNugi  (pazhani)
Thiruppugazh - 105 aNipattuaNugi - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

......... பாடல் .........

அணிபட் டணுகித் திணிபட் டமனத்
     தவர்விட் டவிழிக் ...... கணையாலும்

அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்
     தவன்விட் டமலர்க் ...... கணையாலும்

பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்
     பெறுமக் குணமுற் ...... றுயிர்மாளும்

பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்
     பெறுதற் கருளைத் ...... தரவேணும்

கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்
     கனியைக் கணியுற் ...... றிடுவோனே

கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்
     கருதிச் சிறைவைத் ...... திடுவோனே

பணியப் பணியப் பரமர்ப் பரவப்
     பரிவுற் றொருசொற் ...... பகர்வோனே

பவளத் தவளக் கனகப் புரிசைப்
     பழநிக் குமரப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அணிபட்டு அணுகித் திணிபட்ட மனத்தவர் ... வரிசையாக நின்று,
அருகில் வந்து, கல்நெஞ்சுடைய பொதுமாதர்

விட் டவிழிக் கணையாலும் ... என்னை மயக்கச் செலுத்தும்
விழிகளாகிய அம்புகளினாலும்,

அரிசுற் று கழைத் தவர்பெற்ற வளத்தவன் ... வண்டுகள் சுற்றி
மொய்க்கும் கரும்பு வில்லை உடைய செல்வந்தனாகிய மன்மதன்

விட்டமலர்க் கணையாலும் ... விடுத்த மலர் அம்புகளினாலும்,

பிணிபட்டு உணர்வற்று அவமுற்று ... மன நோய் அடைந்து,
அறிவு நீங்கி, கேடுற்று,

இயமற் பெறும் அக் குணமுற்று உயிர்மாளும் ... யமனையே
அடையச் செய்திடும் தீய குணங்கள் நிறைந்து, இந்த உயிரானது
மாண்டு போகும்

பிறவிக் கடல்விட்டு ... பிறவியாகிய சமுத்திரத்தை விடுத்து நீங்கி,

உயர்நற் கதியைப் பெறுதற்கு அருளைத் தரவேணும் ...
உயர்ந்த நன்முக்தியை நான் பெறுவதற்கு, நீ திருவருள் தந்தருள
வேண்டும்.

கணிநற் சொருபத்தை யெடுத்து ... வேங்கை மரத்தின் நல்ல
உருவை எடுத்து

மலைக் கனியைக் கணியுற்றிடுவோனே ... மலைக்கன்னியாகிய
வள்ளியை அடையக் கருதி அவளிடம் சென்றவனே,

கமலத்து அயனைப் ப்ரணவத்து உரையைக் கருதி ...
தாமரையில் அமரும் பிரமனை, பிரணவத்தின் உரையைச்
சொல்லமாட்டாத காரணத்திற்காக

சிறைவைத்திடுவோனே ... சிறைச்சாலையில் அடைத்தவனே,

பணி அப்பு அணி அப் பரமர்ப் பரவ ... பாம்பையும் கங்கை
நதியையும் சடையில் அணியும் அந்த சிவபிரான் துதிசெய்ய,

பரிவுற்று ஒருசொற் பகர்வோனே ... அவரிடம் அன்பு கொண்டு
ஒப்பற்ற பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்தவனே,

பவளத் தவளக் கனகப் புரிசை ... பவள நிறம், வெண்ணிறம்,
பொன்னிறம் உள்ள மதில்கள் சூழ்ந்த

பழநிக் குமரப் பெருமாளே. ... பழநியில் எழுந்தருளியுள்ள
குமரப் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.308  pg 1.309  pg 1.310  pg 1.311 
 WIKI_urai Song number: 124 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 105 - aNipattu aNugi (pazhani)

aNipat taNukith thiNipat tamanath
     thavarvit tavizhik ...... kaNaiyAlum

arisut Rukazhaith thavarpet RavaLath
     thavanvit tamalark ...... kaNaiyAlum

piNipat tuNarvat Ravamut RiyamaR
     peRumak kuNamut ...... RuyirmALum

piRavik kadalvit tuyarnaR kathiyaip
     peRuthaR karuLaith ...... tharavENum

kaNinaR sorupath thaiyeduth thumalaik
     kaniyaik kaNiyuR ...... RiduvOnE

kamalath thayanaip praNavath thuraiyaik
     karuthich siRaivaith ...... thiduvOnE

paNiyap paNiyap paramarp paravap
     parivuR RorusoR ...... pakarvOnE

pavaLath thavaLak kanakap purisaip
     pazhanik kumarap ...... perumALE.

......... Meaning .........

aNipat taNukith thiNipat tamanaththavar: The stone-hearted women line up in the street and accost me

vittavizhik kaNaiyAlum: casting enticing looks at me with arrow-like eyes.

arisut Rukazhaith thavarpet RavaLaththavan: Love God Manmathan with a sugarcane bow whose string is made of humming beetles

vittamalark kaNaiyAlum: keeps on shooting his flowery arrows to arouse me.

piNipattu uNarvatRu avamutRu: My mind gets sick, wisdom takes leave, and I feel miserable.

iyamaR peRumak kuNamutRu: My vices take over leading me to the Death-God.

uyirmALum piRavik kadalvittu: I am about to die; and I want to be liberated from the ocean of birth.

uyarnaR kathiyaip peRuthaR karuLaith tharavENum: Only You can show the grace to lead me to the exalted blissful state of self-realisation.

kaNinaR sorupath thaiyeduththu: You took the form of a neem tree

malaik kaniyaik kaNiyuRRiduvOnE: to woo VaLLi, the damsel of the mountain, and appeared before her.

kamalath thayanaip praNavath thuraiyaik: You asked BrahmA, seated on the lotus, to interpret the meaning of OM;

karuthich siRaivaith thiduvOnE: and when He failed to do so, You imprisoned Him.

paNi appu aNiyap paramarp parava: Lord SivA, who wears a serpent and River GangA on His tresses, paid obeisance to You

parivuR RorusoR pakarvOnE: when You kindly explained to Him the significance of OM.

pavaLath thavaLak kanakap purisai: The fortress walls are multi-coloured, coral, white and golden hues,

pazhanik kumarap perumALE.: at Pazhani, which is Your abode, KumarA, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 105 aNipattu aNugi - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]