திருப்புகழ் 97 வந்து வந்து முன்  (திருச்செந்தூர்)
Thiruppugazh 97 vandhuvandhumun  (thiruchchendhUr)
Thiruppugazh - 97 vandhuvandhumun - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்த தந்த தந்த தந்த
     தந்த தந்த தந்த தந்த
          தந்த தந்த தந்த தந்த ...... தனதான

......... பாடல் .........

வந்து வந்து முன்த வழ்ந்து
     வெஞ்சு கந்த யங்க நின்று
          மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ...... ழந்தையோடு

மண்ட லங்கு லுங்க அண்டர்
     விண்ட லம்பி ளந்தெ ழுந்த
          செம்பொன் மண்ட பங்க ளும்ப ...... யின்றவீடு

கொந்த ளைந்த குந்த ளந்த
     ழைந்து குங்கு மந்த யங்கு
          கொங்கை வஞ்சி தஞ்ச மென்று ...... மங்குகாலம்

கொங்க டம்பு கொங்கு பொங்கு
     பைங்க டம்பு தண்டை கொஞ்சு
          செஞ்ச தங்கை தங்கு பங்க ...... யங்கள்தாராய்

சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு
     மந்த ரஞ்செ ழுங்க ரும்பு
          கந்த ரம்பை செண்ப தங்கொள் ...... செந்தில்வாழ்வே

தண்க டங்க டந்து சென்று
     பண்க டங்க டர்ந்த இன்சொல்
          திண்பு னம்பு குந்து கண்டி ...... றைஞ்சுகோவே

அந்த கன்க லங்க வந்த
     கந்த ரங்க லந்த சிந்து
          ரஞ்சி றந்து வந்த லம்பு ...... ரிந்தமார்பா

அம்பு னம்பு குந்த நண்பர்
     சம்பு நன்பு ரந்த ரன்த
          ரம்ப லும்பர் கும்பர் நம்பு ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

வந்து வந்து முன்தவழ்ந்து ... மீண்டும் மீண்டும் என்முன் வந்து,
தவழ்ந்து,

வெஞ்சுகந் தயங்க நின்று ... விரும்பத்தக்க இன்பத்தை அளித்து
நின்று,

மொஞ்சி மொஞ்சி யென்றழுங் குழந்தையோடு ... பால் வேண்டும்
வேண்டும் என்று அழுகின்ற குழந்தையும்,

மண்டலங் குலுங்க அண்டர் விண்தலம் பிளந்தெழுந்த ... இந்தப்
பூமியே குலுங்குமாறு பெரிதாய், வானுலகம் வரை வளர்ந்து நிற்கும்

செம்பொன் மண்டபங்களும் பயின்றவீடு ... செம்பொன்
மண்டபங்கள் நிறைந்த வீடும்,

கொந்து அளைந்த குந்தளம் தழைந்து ... பூங்கொத்துக்கள்
தரித்த கூந்தல் தழையத் தழைய,

குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி ... குங்குமம் அப்பிய மார்புகளும்
வஞ்சிக்கொடி போன்ற இடையும் உடைய மனைவியும்,

தஞ்ச மென்று மங்குகாலம் ... எனக்கு ஆதரவு என்று இருந்த என்
அறிவு மங்கி நான் இறக்கும் சமயத்தில்,

கொங்கு அடம்பு கொங்கு பொங்கு பைங்கடம்பு ... கோங்குப்பூ,
அடம்புப் பூ, வாசம் மிகுந்த பசும் கடப்பமலர்,

தண்டை கொஞ்சு செஞ்சதங்கை தங்கு பங்கயங்கள்தாராய் ...
தண்டைக்கழல், கொஞ்சுவதுபோல ஒலிக்கும் செவ்விய சதங்கைகள்
- இவை தங்கும் தாமரைபோன்ற உன் பாதங்களைத் தந்தருள்வாயாக.

சந்து அடர்ந்தெழுந்த ரும்பு மந்தரம் ... சந்தன மரம், அடர்த்தியாக
அரும்புவிடும் மந்தாரம்,

செழுங்கரும்பு கந்தரம்பை செண்பதங்கொள் செந்தில்
வாழ்வே
... செழிப்பான கரும்பு, குலை தள்ளிய வாழை - இவையெல்லாம்
வானம்வரை வளர்ந்த திருச்செந்தூர் தலத்தில் வாழ்பவனே,

தண்கடம் கடந்து சென்று ... குளிர்ந்த காட்டைக் கடந்து சென்று

பண்கள் தங்கு அடர்ந்த இன்சொல் ... இசைப்பண்கள் யாவும்
கூடிச்சேர்ந்தது போன்ற இனிமையான குரலுடைய வள்ளியின்

திண்புனம்புகுந்து கண்டு இறைஞ்சுகோவே ... செழிப்பான
தினைப்புனத்தை அடைந்து அவளைக் கண்டு, பின்பு கும்பிட்ட
தலைவனே,

அந்தகன்கலங்க வந்த ... யமன் அருகே வருவதற்கு கலங்கி
அஞ்சும்படியாக,

கந்தரம் கலந்த சிந்துரம் ... (உன் அடியார்களின் இதயமாகிய)
குகையில் விருப்புற்றுக்கலந்த குங்கும அழகி தேவயானை

சிறந்து வந்து அலம் புரிந்தமார்பா ... சிறப்பாக வந்து
மகிழ்ச்சியோடு அணைக்கும் திருமார்பனே,

அம்புனம்புகுந்த நண்பர் ... அழகிய தினைப்புனத்தில்
உன்பொருட்டுச் சென்ற உன் நண்பர் நாரதரும்,

சம்பு நன்புரந்த ரன்தரம்பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே. ...
சிவபிரான், நல்ல இந்திரன், தகுதிபெற்ற வேறு பல தேவர்கள்,
கும்பமுனி அகஸ்தியர் இவர்கள் யாவரும் உன்னை நம்பித் தொழும்
தம்பிரானே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.240  pg 1.241  pg 1.242  pg 1.243  pg 1.244  pg 1.245 
 WIKI_urai Song number: 96 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Sambandam Gurukkal
திரு சம்பந்தம் குருக்கள்

Thiru P. Sambandam Gurukkal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 97 - vandhu vandhu mun (thiruchchendhUr)

vandhu vandhu muntha vazhndhu
     vensu gantha yanga nindRu
          monji monji endRa zhungku ...... zhandhaiyOdu

manda lamku lunga aNdar
     vinda lampi Landhe zhundha
          sempon manda panga Lumpa ...... yindRaveedu

kondha Laindha kuntha Lantha
     zhaindhu kungu mantha yangu
          kongai vanji thanja mendRu ...... mangukAlam

kongka dambu kongu pongu
     paingka dambu thaNdai konju
          chencha dhangai thangu panga ...... yangaLthArAy

sandha darndhe zhundha rumbu
     mandha ramche zhungka rumbu
          kandha rambai seNpa dhangkoL ...... sendhilvAzhvE

thaNka dangka dandhu sendru
     paNka dangka darndha insol
          thiNpu nampu gundhu kaNdi ...... RainjukOvE

antha kanka langa vandha
     kandha rangkalandha sindhu
          ramchi Randhu vandha lampu ...... rindhamArbA

ampu nampu gundha naNbar
     sambu nanpu randha rantha
          rampa lumbar kumbar nambu ...... thambirAnE.

......... Meaning .........

vandhu vandhu mun thavazhndhu: Coming to me again and again, he crawls and

ven sugan thayanga nindru: gives me immense pleasure;

monji monji endrazhung ku zhandhaiyOdu: he repeatedly cries for milk; - he is my child.

mandalam kulunga: It is so huge that its sheer weight causes tremor on the earth,

aNdarvindalam piLandh ezhundha sempon mandapangaLum payindra veedu: and its gold-laden halls are tall, piercing the skies; - it is my house.

kondha Laindha kunthaLan thazhaindhu: Her hair, adorned with bunches of flowers, unfurls loosely and

kunguman thayangu kongai vanji: her bosom is splashed with vermilion; - she is my dear wife with a vanji (rattan reed) creeper-like waist.

thanjam endru mangukAlam: I have been thinking that these are my permanent support. At the time of my death, when my consciousness fades,

kong kadambu kongu pongu paing kadambu thaNdai konju sen sadhangai thangu pangayangaL thArAy: kindly bless me with Your lotus feet, adorned with pollen (kongu) of flowers of fragrant and fresh kadambu, and lilting anklets and reddish ornaments of the ankles (sadhangai).

sandhadarndh ezhundh arumbu mandharanj sezhung karumbu: There are sandalwood trees, manthAram trees with rich blossoms, ripe sugarcanes,

kandha rambai seN padhang koL sendhil vAzhvE: and plantains with bunches of fruits that have grown skyhigh in ThiruchchendhUr, which is Your abode.

thaNkadang kadandhu sendru paNkadang kadarndha insol: You went across the cool forest to VaLLi, whose sweet words sound like a symphony of rich melodies;

thiN punam pugundhu kaNdi Rainju kOvE: You entered the rich millet-field to see and beseech her, Oh Lord!

anthakan kalanga vandha kandharang kalandha: She comes to the aid of Your devotees to the consternation of Yaman (God of Death) and resides graciously in the caves of their hearts;

sindhuranj siRandhu vandhalam purindha mArbA: She has the complexion of vermilion; She is DEvayAnai who hugs Your broad chest with ecstatic relish, Oh Lord!

am punam pugundha naNbar: Naradha, Your friend, who went to the beautiful millet-field (for Your sake),

sambu nan purandharan tharampal umbar kumbar: Lord SivA, the good celestial king IndrA, many worthy celestials and Agasthya, the sage who emerged from a pot,

nambu thambirAnE.: always rely on You, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 97 vandhu vandhu mun - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]