திருப்புகழ் 76 படர்புவியின் மீது  (திருச்செந்தூர்)
Thiruppugazh 76 padarpuviyinmeedhu  (thiruchchendhUr)
Thiruppugazh - 76 padarpuviyinmeedhu - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தான தந்தன
     தனதனன தான தான தந்தன
          தனதனன தான தான தந்தன ...... தந்ததான

......... பாடல் .........

படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
     வியனினுரை பானு வாய்வி யந்துரை
          பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி ...... சங்கபாடல்

பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை
     திருவளுவ தேவர் வாய்மை யென்கிற
          பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் ...... சந்தமாலை

மடல்பரணி கோவை யார்க லம்பக
     முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்
          வகை வகையி லாசு சேர்பெ ருங்கவி ...... சண்டவாயு

மதுரகவி ராஜ னானென் வெண்குடை
     விருதுகொடி தாள மேள தண்டிகை
          வரிசையொடு லாவு மால கந்தைத ...... விர்ந்திடாதோ

அடல்பொருது பூச லேவி ளைந்திட
     எதிர்பொரவொ ணாம லேக சங்கர
          அரஹர சிவாம ஹாதெ வென்றுனி ...... அன்றுசேவித்

தவனிவெகு கால மாய்வ ணங்கியு
     ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம
          அதிபெல கடோர மாச லந்தர ...... னொந்துவீழ

உடல்தடியு மாழி தாவெ னம்புய
     மலர்கள்தச நூறு தாளி டும்பக
          லொருமலரி லாது கோவ ணிந்திடு ...... செங்கண்மாலுக்

குதவியம கேசர் பால இந்திரன்
     மகளைமண மேவி வீறு செந்திலி
          லுரியஅடி யேனை யாள வந்தருள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

படர் புவியின் மீது மீறி வஞ்சர்கள் ... பரந்துள்ள இப்பூமியில்
அளவுக்கு மிஞ்சி வஞ்சனை உள்ள லோபியர்களிடம்

வியனில் உரை பானுவாய் வியந்து உரை ... (பொருள் பெறுதற்கு
அவர்களைச்) சிறப்பாக சூரியனே என்று பாராட்டிக் கூறியும்,

பழுது இல் பெரு சீல நூல்களும் ... குற்றம் இல்லாத பெரிய
ஒழுக்க நூல்களையும்,

தெரி சங்க பாடல் ... தெரியவேண்டிய சங்க நூல் பாடல்களையும்,

பனுவல் கதை காவ்யமாம் எண் எண் கலை ... வரலாற்று
நூல்களையும், கதைகளையும், காப்பியங்களையும், அறுபத்து நான்கு
கலை நூல்களையும்,

திருவ(ள்)ளுவ தேவர் வாய்மை என்கிற பழமொழியை ஓதியே
உணர்ந்து
... திருவள்ளுவ தேவர் அருளிய பொய்யாமொழி ஆகிய
திருக்குறள் முதலிய பழமொழி நூல்களை ஓதியும் உணர்ந்தும்,

பல் சந்த மாலை மடல் பரணி கோவையார் ... பலவகையான
சந்த மாலைச் செய்யுட்கள், மடல், பரணி, கோவையார்,

கலம்பகம் முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும்
வகைவகையில்
... கலம்பகம் முதலான கோடிக்கணக்கான
பிரபந்தங்களை வகைவகையாய்ப் பாடி,

ஆசுசேர் பெரும் கவி சண்டவாயு மதுரகவி ராஜன் நான்
என்(று)
... பெருமைமிக்க ஆசுகவி, சண்டமாருதன், மதுரகவிராஜன்
நான் என்று (புலவர்கள் தம்மைத் தாமே கூறிக்கொண்டு),

வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை ... வெண்
குடை, வெற்றிக் கொடி, தாளம், மேளம், பல்லக்கு முதலான

வரிசையொடு உலாவு மால் அகந்தை தவிர்ந்திடாதோ ...
சிறப்புச் சின்னங்களோடு உலவி வரும் மயக்க அறிவும், அகங்காரமும்
அவர்களை விட்டு நீங்காவோ?

அடல் பொருது பூசலே விளைந்திட ... (ஜலந்தராசுரனுடன்)
வலிமையுடன் போர் செய்து பெரிய ஆரவாரம் உண்டாக

எதிர் பொர ஒணாமல் ஏக ... அவனுடன் எதிர் நின்று போர் செய்ய
முடியாமல் புறந்தந்து (திருமால்) சென்று,

சங்கர அரஹர சிவா மஹா தேவ என்று உ(ன்)னி அன்று
சேவித்து
... சங்கரா, அரகர சிவா மகா தேவா என்று தியானித்து
அன்று ஆராதனை புரிந்து,

அவனி வெகு காலமாய் வணங்கி உள் உருகி ... மண்ணுலகில்
வெகு காலமாகத் தொழுது, மனம் உருகி,

வெகு பாச கோச சம்ப்ரம அதி பெல கடோர மா சலந்தரன்
நொந்து வீழ
... கொடிய பாசக் கயிறு, கவசம் முதலிய சிறப்பான
ஆயுதங்களும், மிக்க வலிமையும் கொடுமையும் உள்ள பெரும்
ஜலந்தரன் வருந்தி விழுமாறு

உடல் தடியும் ஆழி தா என ... அவனுடைய உடலைப்
பிளக்கவல்ல சக்கரத்தைத் தந்தருள்வீர் என்று வேண்டி,

அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் ... தாமரை
மலர்கள் ஆயிரம் கொண்டு (சிவனுடைய) திருப்பாதங்களில்
பூஜித்து வந்த அந்த நாட்களில் (ஒரு நாள்),

ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம் கண் மாலுக்கு ...
ஒரு மலர் இல்லாது குறைந்துபோக, (அதற்கு ஈடாகத் தன்)
கண்ணையே எடுத்து அர்ச்சித்த சிவந்த கண்ணுடைய திருமாலுக்கு

உதவிய மகேசர் பால ... அந்தச் சக்ராயுதத்தையே உதவி அருளிய*
மகா தேவருடைய குழந்தையே,

இந்திரன் மகளை மணம் மேவி ... இந்திரன் பெண்ணாகிய
தேவயானையை திருமணம் செய்து கொண்டு,

வீறு செந்திலில் உரிய அடியேனை ஆள வந்து அருள்
தம்பிரானே.
... பெருமை நிறைந்த திருச்செந்தூரில் (உன்னிடம்)
உரிமை பூண்ட அடியேனாகிய என்னை ஆட்கொள்ளும் பொருட்டு
வந்தருளிய பெரும் தலைவனே.


திருமால் ஆகிய தேவர்களை வென்ற பின், வலிமை வாய்ந்த ஜலந்திரன் என்னும்
அசுரன் சிவ பெருமானையும் வெல்ல கயிலைக்குச் சென்றான். சிவன் ஒரு
மறையவனாகத் தோன்றி, ஒரு சக்கரத்தை அமைத்து, நீ அந்த சக்கரத்தைத்
தாண்டி வந்தால் கயிலைக்குப் போகலாம் என்றார். அவன் அதை எடுக்கப்
போனபோது கழுத்து அறுபட்டு மாண்டான். அந்தச் சக்கரத்தை அடைய திருமால்
சிவனை தினமும் ஆயிரம் மலர்களால் அர்ச்சித்துப் பூஜித்தார். ஒரு நாள் ஒரு பூ
குறையவே தன் கண்ணையே மலராக இட்டுப் பூஜித்தார். பின்னர் சுதர்ஸன
சக்கரத்தையும் சிவனிடமிருந்து பெற்றார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.202  pg 1.203  pg 1.204  pg 1.205 
 WIKI_urai Song number: 80 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 76 - padarpuviyin meedhu (thiruchchendhUr)

padarbuviyin meedhu meeRi vanjargaL
     viyaninurai bAnu vAyvi yandhurai
          pazhudhilperu seela nUlga Lumtheri ...... sangapAdal

panuval kadhai kAvya mAme NeNkalai
     thiruvaLuva dhEvar vAymai engiRa
          pazhamozhiyay Odhi yEu Narndhupal ...... sandhamAlai

madalbaraNi kOvai yArka lambaga
     mudhaluLadhu kOdi kOLpra bandhamum
          vagaivagaiyil Asu sERpe rungkavi ...... chandavAyu

madhurakavi rAja nAnen veNkudai
     virudhukodi thALa mELa thaNdigai
          varisaiyodu lAvu mAla gandhaitha ...... virndhidAdhO

adalporudhu pUsa lEvi Laindhida
     edhirporavo NAma lEga sankara
          arahara sivA mahAdhev endruni ...... andrusEviththu

avanivegu kAla mAy vaNangiyuL
     urugivegu pAsa kOsa samprama
          adhibelaka tOra mAja landharan ...... nondhuveezha

udalthadiyum Azhi thAve nambuya
     malargaLdhasa nURu thALi dumpagal
          orumalari lAdhu kOva Nindhidu ...... sengaNmAluk

kudhaviyama gEsar bAla indhiran
     magaLaimaNa mEvi veeRu sendhilil
          uriyaadi yEnai ALa vandharuL ...... thambirAnE.

......... Meaning .........

padarbuviyin meedhu meeRi vanjargaL: Approaching treacherous misers in this vast earth,

viyaninurai bAnu vAyvi yandhurai: people praise them saying "Oh, Great Sun!", (seeking some charity);

pazhudhilperu seela nUlga Lumtheri sanga pAdal: They have studied blemishless great works about ethics and noteworthy Sangam literature;

panuval kadhai kAvyamAme NeNkalai: historic treatises, stories, epics and all the sixty-four arts;

thiruvaLuva dhEvar vAymai engiRa pazhamozhiyay OdhiyE uNarndhu: the ancient work of ThiruvaLLuvar entitled "Eternal Truth" (ThirukkuRaL) has been chanted and assimilated by them;

pal sandhamAlai madalbaraNi kOvai yAr kalambaga: several rhythmic garlands of compositions such as madal, baraNi, kOvaiyAr, kalambagam etc.,

mudhaluLadhu kOdi kOL prabandhamum: numbering millions, all those minor epics;

vagai vagaiyil Asu sEr perungkavi chandavAyu madhurakavi rAja nAn: and diverse literatures have been mastered by them; they declare themselves as "the Great Bard", "Poetic Hurricane" and "the Emperor of sweet poetry", and so on.

en veNkudai virudhukodi thALa mELa thaNdigai varisaiyodulAvu: They roam about pompously with white umbrellas, medallions, cymbals, percussion instruments and palanquins;

mAl agandhai tha virndhidAdhO: Will the delusory and ornate display of their arrogance ever come to an end?

adalporudhu pUsalE viLaindhida: When Vishnu fought with the demon, Jalandharasuran, there was a lot of tumult;

edhirporavo NAma lEga: being unable to fight the demon face to face, Vishnu retreated from the battlefield

sankara arahara sivA mahAdhev endruni andrusEviththu: and prayed meditating on Lord SivA saying "Oh Sankara, HaraharA, SivA and MahadevA!"

avanivegu kAla mAy vaNangiyuL urugi: Vishnu stayed for many days on this earth and prostrated before Lord SivA with utmost devotion;

vegu pAsa kOsa samprama adhibela katOra mA jalandharan nondhuveezha udalthadiyum Azhi thAvena: He prayed for the grant of a disc that could destroy the rope of bondage and shield of the strong, mighty and malicious demon, Jalandharan and that could knock him down by piercing his body.

ambuya malargaLdhasa nURu thALi dum pagal: Vishnu offered a thousand lotus flowers at the feet of SivA daily;

orumalari lAdhu kOva Nindhidu sengaNmAlukku: one day, as the flowers fell short by one, (to make up for that) Vishnu, the lotus-eyed Lord, offered His own eye*;

udhaviyama gEsar bAla: Lord SivA presented to that Vishnu the great disc (Sudharsana ChakrA), and You are the child of that SivA!

indhiran magaLaimaNa mEvi: You wedded DEvayAnai, the daughter of IndrA,

veeRu sendhilil uriya adi yEnai ALa vandharuL thambirAnE.: and came to this famous place, ThiruchchendhUr, to take charge of me, having a special entitlement with You, Oh Great One!


* The powerful demon, Jalandharan, conquered all the celestials, including Vishnu, and decided to proceed to Mount KailAsh to challenge Lord SivA. SivA took the disguise of a brahmin and set up a disc daring Jalandharan to cross it before he could enter KailAsh. Jalandharan tried to cross the disc and was killed. Seeking that disc, Vishnu ardently prayed at Thiruveezhimizhalai offering 1000 lotus flowers every day to SivA. One day, the total count of flowers fell short by one, and Vishnu plucked His own lotus-eye and offered it to SivA. In appreciation of His devotion, SivA presented the disc (Sudharsana ChakrA) to Vishnu - Thiruveezhimizhalai PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 76 padarpuviyin meedhu - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]