திருப்புகழ் 71 நிதிக்குப் பிங்கலன்  (திருச்செந்தூர்)
Thiruppugazh 71 nidhikkuppingkalan  (thiruchchendhUr)
Thiruppugazh - 71 nidhikkuppingkalan - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனம்
     தனத்தத் தந்தனம் ...... தனதான

......... பாடல் .........

நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
     நிறத்திற் கந்தனென் ...... றினைவொரை

நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
     றரற்றித் துன்பநெஞ் ...... சினில்நாளும்

புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்
     புகட்டிக் கொண்டுடம் ......பழிமாயும்

புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
     புணர்க்கைக் கன்புதந் ...... தருள்வாயே

மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
     மறத்திற் றந்தைமன் ...... றினிலாடி

மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்
     டமிழ்ச்சொற் சந்தமொன் ...... றருள்வோனே

குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்
     கொழித்துக் கொண்டசெந் ...... திலின்வாழ்வே

குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
     குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நிதிக்குப் பிங்கலன் ... செல்வத்துக்கு குபேரன் என்றும்,

பதத்துக்கு இந்திரன் ... நற்பதவிக்கு தேவேந்திரன் என்றும்,

நிறத்திற் கந்தனென்று ... பொன் போன்ற நிறத்துக்கு
கந்தப்பெருமான் என்றும்

இனைவொரை ... கொடுப்பதற்கு வருந்தும் செல்வந்தரிடம் சென்று,

நிலத்திற் றன்பெரும் பசிக்கு ... இந்த உலகத்தில் தன் பெரும்
பசியைப் போக்குதற்கு

தஞ்சமென்றரற்றி ... நீயே புகலிடம் என்று கூறி முறையிட்டு,

துன்பநெஞ்சினில் ... துயரம் மிகுந்த மனதில்

நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்து ... தினமும் புதுப்புதுச்
சொற்களின் கூட்டத்தால் ஒரு கவிதை பாடி,

சங்கடம் புகட்டிக் கொண்டு உடம்பழிமாயும் ... சங்கடத்தில்
சிக்கி உடம்பு அழிந்து மாய்கின்ற

புலத்திற் சஞ்சலங் குலைத்திட்டு ... புலன்களால் வரும்
துன்பங்களைத் தொலைத்து,

உன்பதம் புணர்க்கைக்கு ... உன் திருவடியைச் சேர்வதற்கு உரிய

அன்புதந்தருள்வாயே ... அன்பினை வழங்கி அருள்வாயாக.

மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும் ... மனத்தில் கருதி,
வலிய திரிபுரத்தை புன்னகை செய்தே எரித்த

மறத்திற் றந்தை ... வீரம் மிகுந்த தந்தையாரும்,

மன்றினிலாடி ... அம்பலத்தில் ஆனந்த நடனம் புரிந்தவரும்,

மழுக்கைக் கொண்டசங்கரர்க்குச் சென்று ... மழுவைக் கரத்தில்
ஏந்தியவருமான சங்கரற்கு குருவாகச் சென்று,

வண்டமிழ்ச்சொற் சந்தமொன்று அருள்வோனே ... வளமான
தமிழ்ச் சொற்களால் வேதப் பொருளை ஓதியவனே,

குதித்துக் குன்று இடந்து அலைத்து ... அலைகள் குதித்து,
குன்றுகளைத் தோண்டி அலைத்து,

செம்பொனுங் கொழித்துக் கொண்ட ... சிவந்த பொன்னையும்
கொழித்துத் தள்ளுகின்ற

செந்திலின்வாழ்வே ... திருச்செந்தூரின் செல்வமே,

குறப்பொற் கொம்பை ... குறவர்களின் பொன்னான குலக்கொடியாகிய
வள்ளியை

முன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே. ...
முன்பு தினைப்புனத்தில் செம்மையான கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.194  pg 1.195  pg 1.196  pg 1.197 
 WIKI_urai Song number: 77 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 71 - nidhikkup pingkalan (thiruchchendhUr)

nidhikkup pingalan padhathuk kindhiran
     niRaththil kandhanen ...... RinaivOrai

nilaththit Ranperum pasikkuth thanjamen
     RaratRith thunbanen ...... jinilnALum

pudhuchoR changamon dRisaiththuc chankatam
     pugattik kondudam ...... pazhimAyum

pulaththil sanchalang kulaiththit tunpadham
     puNarkkaik kanbuthan ...... dharuLvAyE

madhiththuth thiNpuram siriththuk kondRidum
     maRaththit Randhaiman ...... dRinilAdi

mazhukkaik koNdasan kararkkuc chendRuvaN
     thamizhcchol sandhamon ...... RaruLvOnE

kudhiththuk kundridan dhalaiththuc chemponum
     kozhiththuk koNdasen ...... dhilinvAzhvE

kuRappoR kombaimun punaththiR chenkarang
     kuviththuk kumbidum ...... perumALE.

......... Meaning .........

nidhikkup pingalan: "Your wealth is like KubEran's (God of Wealth);

padhathuk kindhiran: your high position is equal to that of IndrA;

niRaththil kandhan: and your complexion is as fair as that of Kanthan (Murugan)"

endru inaivOrai: with these words I used to praise stingy richmen!

nilaththiR thanperum pasikkuth thanjam: "On this earth you are my only refuge to remove my hunger"

endraratrith thunba nen jinil: so I used to cry with a heavy heart.

nALum pudhuchoR sangam ondrisaiththu: Everyday, I had to coin new words to compose poems on them!

sankatam pugattik kondudam pazhimAyum: Feeling miserable, I saw my body degenerating.

pulaththil sanchalang kulaiththitu: I want to put an end to the misery arising from my sensory organs.

unpadham puNarkkaik anbuthan dharuLvAyE: You must bless me with the love that I need to join Your feet!

madhiththu thiNpuram siriththuk kondridum: He contemplated in His mind and then burnt down the strong fortresses of Thiripuram by merely smiling at them!

maRaththiR thandhai man drinilAdi: He is Your brave Father and the eternal Cosmic Dancer!

mazhukkai koNda sankararkku sendru: He is Sankara, holding in His hand a pickaxe. You went to Him as Master and

vaNthamizhchol sandhamondr aruLvOnE: preached the essence of VEdAs (scriptures) in chaste Tamil words!

kudhiththu kundridan dhalaiththu semponum kozhiththuk koNda: On its shore, the waves jump about and roll mountains along with solid gold at

sendhilin vAzhvE: ThiruchchendhUr, and You are its Treasure!

kuRappoR kombaimun punaththiR: Once, in the millet field, You saw VaLLi, the damsel of the KuRavAs, and

senkarang kuviththuk kumbidum perumALE.: worshipped her with folded hands, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 71 nidhikkup pingkalan - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]