திருப்புகழ் 46 காலனார் வெங்கொடும்  (திருச்செந்தூர்)
Thiruppugazh 46 kAlanArvengkodum  (thiruchchendhUr)
Thiruppugazh - 46 kAlanArvengkodum - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானனா தந்தனம் தானனா தந்தனம்
     தானனா தந்தனம் ...... தனதான

......... பாடல் .........

காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
     காலினார் தந்துடன் ...... கொடுபோகக்

காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
     கானமே பின்தொடர்ந் ...... தலறாமுன்

சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
     சூடுதோ ளுந்தடந் ...... திருமார்பும்

தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந்
     தோகைமேல் கொண்டுமுன் ...... வரவேணும்

ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்
     தேவர்வா ழன்றுகந் ...... தமுதீயும்

ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
     தாதிமா யன்றனன் ...... மருகோனே

சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்
     சாரலார் செந்திலம் ...... பதிவாழ்வே

தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
     தாரைவே லுந்திடும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

காலனார் வெங்கொடுந் தூதர் ... யமனின் மிகக் கொடிய தூதர்கள்

பாசங்கொடு என்காலின்ஆர்தந்து ... பாசக்கயிற்றால் என்
மூச்சுக்காற்றுடன் சேர்த்துக் கட்டி

உடன்கொடுபோக ... எனது உயிரைத் தங்களுடன் கொண்டுபோக,

காதலார் மைந்தருந் தாயராரும் ... அன்பு நிறைந்த பிள்ளைகளும்,
தாயார் முதலிய அனைவரும்

சுடுங் கானமே பின்தொடர்ந்து ... சுடுகாடு வரை என்னுடலைப்
பின்தொடர்ந்து

அலறாமுன் ... வாய்விட்டுக் கதறி அழும் மரண அவஸ்தையை நான்
அடையும் முன்பே,

சூலம் வாள் தண்டு ... சூலாயுதம், வாளாயுதம், தண்டாயுதம்,

செஞ் சேவல் கோதண்டமும் ... அழகிய சேவற்கொடி, வில்
இவைகளை

சூடுதோளும் தடந்திருமார்பும் ... சூடியுள்ள புயங்களையும்,
அகன்ற திரு மார்பையும்,

தூயதாள் தண்டையுங் காண ... புனிதமான பாதங்களையும்,
அவைகளில் அணிந்த தண்டையும் காண

ஆர்வஞ்செயுந் தோகைமேல் கொண்டு முன்வரவேணும் ...
அன்புநிறை மயிலின் மீது ஏறி என்முன் வரவேண்டும்.

ஆலகாலம் பரன் பாலது ஆக ... ஆலகால விஷமானது
பரமசிவன்வசம் போய்ச் சேர்ந்தபின்பு,

அஞ்சிடுந் தேவர் வாழ ... அவ்விஷத்தைக் கண்டு பயந்தோடிய
தேவர்கள் உய்யும்படியாக

அன்று உகந்து அமுது ஈயும் ... அன்று மகிழ்ச்சியுடன் (மோகினி
அவதாரம் செய்து) அமுதைத் தந்தவரும்,

ஆரவாரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்து ... பெரும் ஒலி
உடையதான திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்பவருமான,

ஆதிமாயன்றன் நன் மருகோனே ... ஆதி மூர்த்தியாகிய
திருமாலின் சிறந்த மருமகனே,

சாலிசேர் சங்கினம் ... நெல்வயல்களில் சேர்ந்துள்ள சங்கினங்களும்,

வாவிசூழ் பங்கயம் ... தாமரைகள் சூழ்ந்து நிறைந்துள்ள தடாகங்களும்

சாரலார் செந்திலம்பதிவாழ்வே ... அருகே அமைந்த திருச்செந்தூர்ப்
பதியில் வாழ்கின்றவனே,

தாவுசூர் அஞ்சிமுன் சாய ... போர்க்களத்தில் தாவி வந்த சூரன்
முன்னாளில் பயந்து வீழுமாறு

வேகம்பெறுந் தாரை வேலுந்திடும் பெருமாளே. ... வேகமாக
கூரிய வேலைச் செலுத்திய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.116  pg 1.117 
 WIKI_urai Song number: 35 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 46 - kAlanAr vengkodum (thiruchchendhUr)

kAlanAr venkodun dUthar pAsankoden
     kAlinAr thandhudan ...... kodupOga

kAdhalAr maindharum thAyarArunj sudum
     kAnamE pinthodarndh ...... alaRAmun

sUlam vAL thaNdu senjsEval kOdhandamum
     sUdu thOLun thadan ...... thirumArbum

thUya thAL thaNdaiyung kANa Arvanj seyun
     thOgai mEl kondu mun ...... varavENum

AlakAlam paran pAlathA ganjidun
     dhEvarvA zhandrugandh ...... amudheeyum

AravAranj seyum vElaimEl kaN vaLarndh
     Adhi mAyandranan ...... marugOnE

sAli sEr sanginam vAvi sUzh pangaiyam
     sAralAr sendhilam ...... padhivAzhvE

ThAvusUran sAyaVe gampeRun
     thArai vEl undhidum ...... perumALE.

......... Meaning .........

kAlanAr venkodun dUthar pAsankodu: The cruel messengers of YamA (Death-God) come to me with the Rope of Bondage (PAsakkayiRu)

en kAlinAr thandhudan kodupOga: to bind my breath and to take my life along with them.

kAdhalAr maindharum thAyarArum: My loving children, mother and others

sudum kAnamE pinthodarndh alaRA: are following my body to the cremation ground, crying all the way.

mun sUlam vAL thaNdu senjsEval kOdhandamum: Before that event, (You must appear) with Your Trident, Sword, Rooster Staff and Bow

sUdu thOLun: adorning Your shoulders,

thadan thirumArbum: with Your broad-hallowed chest,

thUya thAL thaNdaiyung: and pure feet with victorious anklets attached to them;

kANa Arvanj seyun thOgai mEl kondu mun varavENum: and You must come in front of me on Your peacock that is so pleasing to behold.

AlakAlam paran pAlathAga: When the Poison from the Milky Ocean (AlakAlam) was imbibed of by SivA,

anjidun dhEvarvA zhandrugandh amudheeyum: the DEvAs were so scared that Vishnu decided to save them by distributing the Divine Nectar to them (in the guise of Mohini);

AravAranj seyum vElaimEl kaN vaLarndhu: He is the One in yogic sleep on a Serpent in the noisy Milky Ocean;

Adhi mAyandranan marugOnE: and that foremost Vishnu's favourite nephew is none but You!

sAli sEr sanginam vAvi sUzh pangaiyam: In the rice fields there are plenty of shells and the ponds are inundated with lotus flowers in

sAralAr sendhilam padhivAzhvE: the neighbouring ThiruchchendhUr, whose Treasure You are!

ThAvusUran sAya: To knock down the mighty and jumpy demon, SUran,

Ve gampeRun thArai vEl undhidum perumALE.: You sent out the forceful and sharp spear, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 46 kAlanAr vengkodum - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]