திருப்புகழ் 25 அருணமணி மேவு  (திருச்செந்தூர்)
Thiruppugazh 25 aruNamaNimEvu  (thiruchchendhUr)
Thiruppugazh - 25 aruNamaNimEvu - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தானன தனதனன தான தானன
     தனதனன தான தானன
          தந்தத் தந்தத் ...... தனதான

......... பாடல் .........

அருணமணி மேவு பூஷித ம்ருகமதப டீர லேபன
     அபிநவவி சால பூரண
          அம்பொற் கும்பத் ...... தனமோதி

அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென
     அறவுமுற வாடி நீடிய
          அங்கைக் கொங்கைக் ...... கிதமாகி

இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி
     லிழைகலைய மாத ரார்வழி
          யின்புற் றன்புற் ...... றழியாநீள்

இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
     இணையடிகள் பாடி வாழஎ
          னெஞ்சிற் செஞ்சொற் ...... றருவாயே

தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய
     சதுர்மறையி னாதி யாகிய
          சங்கத் துங்கக் ...... குழையாளர்

தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி
     தனைமுழுதும் வாரி யேயமு
          துண்டிட் டண்டர்க் ...... கருள்கூரும்

செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
     தெளிவினுடன் மூல மேயென
          முந்தச் சிந்தித் ...... தருள்மாயன்

திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
     ஜெயசரவ ணாம னோகர
          செந்திற் கந்தப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அருணமணி மேவு பூஷித ... சிவந்த மணிகளால்
அலங்கரிக்கப்பட்டதாய்,

ம்ருகமத படீர லேபன ... கஸ்தூரி, சந்தனம் இவற்றின் கலவையைப்
பூசியதாய்,

அபிநவ விசால பூரண ... புதுமை வாய்ந்ததும், அகன்றதும்,
நிறைந்ததுமான

அம்பொற் கும்பத் தனமோதி ... அழகிய பொற்குடம் போன்ற
மார்பில் பட்டு,

அளிகுலவு மாதர் லீலையின் முழுகி ... ஆசை மொழி பேசிக்
கொஞ்சும் மாதர்களின் சரசலீலைகளில் மூழ்கி,

அபி ஷேக மீதென அறவுமுறவாடி நீடிய ... திருமஞ்சனம்
இதுதான் என்று அவர்களோடு மிகவும் கலந்து பொழுதைக் கடத்தி,

அங்கைக் கொங்கைக்கு இதமாகி ... அவர்களின் கைகளிலும்
மார்பிலும் இன்பம் பெறுபவனாய்,

இருள் நிறை அம் ஓதி மாலிகை ... கருமை நிறைந்த அழகிய
கூந்தலில் உள்ள மாலையானது,

சருவி யுறவான வேளையில் ... தழுவி உறவு கொள்ளும் வேளையில்,

இழைகலைய மாத ரார்வழி ... நகைகளோடு சேர்ந்து கலைய, அம்
மாதர்களின் வசத்தே

யின்புற் றன்புற்றழியா ... இன்பம் கொண்டும், அன்பு கொண்டும்
அழிந்து,

நீள் இரவுபகல் மோக னாகியெ ... நெடும் போது இரவும் பகலும்
மோகம் கொண்டவனாய்,

படியில்மடி யாமல் யானுமுன் இணையடிகள் பாடி வாழ ... இப்
பூமியில் இறவாமல், நானும் உன் இணையடிகளைப் பாடி வாழ்வுற,

எனெஞ்சிற் செஞ்சொற் றருவாயே ... என் நெஞ்சிலே சிறந்த
உபதேசச் சொற்களைப் பதித்து அருள்வாயாக.

தருணமணி ஆடு அராவணி ... இளமையும், அழகும், ஆடலும்
உடைய பாம்புகளை அணிந்த

குடிலசடில ஆதி ... வளைந்த ஜடாமுடியை உடைய ஆதிப் பரம்
பொருள் ஆனவரும்,

ஓதிய சதுர்மறையி னாதி ஆகிய ... ஓதப்படும் வேதங்களின்
ஆதிப்பொருளானவரும் ஆகிய,

சங்கத் துங்கக் குழையாளர் தருமுருக ... வெண்சங்கைக்
குண்டலமாகத் தரித்த சிவனார் தந்தருளிய முருகனே,

மேக சாயலர் ... கார்மேக வண்ணத்தாரும்,

தமர மகர ஆழி சூழ்புவிதனை ... ஒலிக்கின்றதும் மகர மீன்கள்
நிறைந்ததுமான சமுத்திரம் சூழ்ந்த இந்த உலகம்

முழுதும் வாரி யேயமுதுண்டிட்டு அண்டர்க்கு அருள்கூரும் ...
முழுமையும் வாரி அமுதென ஒரே வாயில் உண்டு தேவர்களுக்கு
அருள் செய்தவரும்,

செருமுதலி மேவு ... போர்க்களத்தில் முதன்மையாளராக இருப்பவரும்,

மாவலி யதிமத கபோல மாமலை ... மிக்க வலிமையும், அதிக மதம்
பெருகும் கன்னங்களும், கொண்ட பெரிய மலை போன்ற கஜேந்திரன்
என்ற யானை

தெளிவினுடன் மூல மேயென ... தெளிந்த சிந்தையோடு ஆதிமூலமே
என்று அழைத்துச் சரணடைய,

முந்தச் சிந்தித் தருள்மாயன் திருமருக ... முன்னதாக உதவும்
சிந்தையோடு ஓடிவந்து அருளிய மாயனாம் திருமாலின் அழகிய மருகனே,

சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய ... சூரனது
மார்புடன், கிரெளஞ்ச மலையையும் உருவிச் செல்லும்படி வேலாயுதத்தைச்
செலுத்திய

ஜெயசரவ ணாம னோகர ... ஜெய சரவணனே, மனத்துக்கு
இனியவனே,

செந்திற் கந்தப் பெருமாளே. ... திருச்செந்தூரில் வீற்றிருக்கும்
கந்தப்பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.142  pg 1.143  pg 1.144  pg 1.145 
 WIKI_urai Song number: 48 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 25 - aruNamaNi mEvu (thiruchchendhUr)

aruNamaNi mEvu bUshitha mrugamadha
     pateera lEpana abinava visAla pUraNa
          ampoR kumbath ...... thanamOdhi

aLikulavu mAdhar leelaiyin muzhugiyabi shEka
     meedhena aRavumuRa vAdi neediya
          angai kongaik ...... kidhamAgi

iruNiRaiya mOdhi mAligai saruviuRa vAna vELaiyil
     izhaikalaiya mAdha rArvazhi
          inbut Ranbut ...... RazhiyAneeL

iravupagal mOha nAgiye padiyilmadi
     yAmal yAnumun iNaiyadigaL pAdi vAzhaen
          nenjil senchol ...... tharuvAyE

tharuNamaNi Ada rAvaNi kudilasadil Adhi Odhiya
     chathurmaRaiyin Adhi Agiya
          sangath thungak ...... kuzhaiyALar

tharumuruga mEga sAyalar thamaramaga rAzhi sUzhbuvi
     thanai muzhudhum vAri Eyamu
          thundit taNdark ...... karuLkUrum

serumudhali mEvu mAvali adhimadhaka pOla mAmalai
     theLivinudan mUla mEyena
          mundhac chindhith ...... tharuLmAyan

thirumaruga sUran mArbodu silaiyuruva vElai Eviya
     jeyasarava NAma nOhara
          sendhil kandhap ...... perumALE.

......... Meaning .........

aruNamaNi mEvu bUshitha: Adorned by precious gems,

mrugamadha pateera lEpana: wearing a paste of musk and sandalwood,

abinava visAla pUraNa ampoR kumbath thanamOdhi: their bosoms were fresh, large and full like beautiful pots; indulging in them,

aLikulavu mAdhar leelaiyin muzhugi: I drowned in the voluptuous and wooing ploys of the harlots;

abishEka meedhena aRavumuRa vAdi neediya: imagining that I was being sprinkled with holy water, I prolonged my relationship with those women,

angai kongaik kidhamAgi: deriving pleasure from their lovely hands and bosom.

iruNiRaiya mOdhi mAligai saruvi uRavAna vELaiyil: During our intimate relationship, the garland around their dark and beautiful hair broke

izhaikalaiya mAdharAr vazhi: along with delicate jewellery. I was completely dominated by those women,

inbutranbutr azhiyA: being destroyed by pleasure and passion.

neeL iravupagal mOha nAgiye padiyilmadiyAmal: I do not want to be consumed by lust during nights and days without end, leading ultimately to my death on this earth.

yAnumun iNaiyadigaL pAdi vAzha: In order that I survive by singing the glory of Your lotus feet,

ennenjil senchol tharuvAyE: will You please teach me the right words that I can cherish in my heart?

tharuNamaNi Ada rAvaNi kudilasadil Adhi: He is the primordial one with curly tresses on which He has arrayed young, pretty and dancing serpents;

Odhiya chathurmaRaiyin Adhi Agiya: He is also the Prime God described in the four VEdAs;

sanga thunga kuzhaiyALar: On His ears, He wears pure white conch shells as studs;

tharumuruga: and He is Lord SivA, who has delivered You to us, Oh MurugA!

mEga sAyalar: He has the complexion of dark cloud;

thamaramaga rAzhi sUzhbuvithanai muzhudhum vAri Eyamuthundittu: as if devouring nectar in one gulp, He swallowed the whole world surrounded by noisy oceans full of large fish;

aNdark aruLkUrum serumudhali mEvu: He is compassionate to all Celestials; He is in the forefront of the battlefield;

mAvali adhimadha kapOla mAmalai theLivinudan mUla mEyena: When the strong mountain-like elephant, GajEndran, with wild cheeks oozing with ferocity, screamed His name with a clear mind in complete surrender,

mundha sindhith tharuLmAyan thirumaruga: He thoughtfully rushed to his aid with compassion; You are the great nephew of that Mystic, Vishnu!

sUran mArbodu silaiyuruva vElai Eviya: You wielded the Spear to penetrate SUran's chest and Mount Krouncha;

jeyasaravaNA manOhara: Oh triumphant Saravanabhava! You are the sweetest One to my mind!

sendhil kandhap perumALE.: Oh KandhA, Your abode is ThiruchchendhUr, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 25 aruNamaNi mEvu - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]