ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Kaumara Chellam
 முருகா முருகா முருகா ஓம்
MurugA MurugA MurugA Om
 
Poems Songs for Lord Murugan    

   
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

(முருகா முருகா முருகா ...... ஓம்
முருகா முருகா முருகா ...... ஓம்)

1. வள்ளி நாயக ஷண்முகனே
வடிவேல் ஏந்திடும் ஷண்முகனே

(...... முருகா)

2. வைத்தியநாதன் திருமகனே
வரமதை வழங்கிடும் குருபரனே

(...... முருகா)

3. தையல் நாயகி மகிழ் மகனே
ஐயன் எனையாள் ஆறுமுகனே

(...... முருகா)

4. வழிபடும் அடியவர் வாழந்திடவே
வழங்கிடுவாய் நல்ல அருள்தனையே

(...... முருகா)

5. குமரா முருகா குருபரனே
குறைகளை எல்லாம் தீர்ப்பவனே

(...... முருகா)

6. கருணையைப் பொழிந்திடும் கந்தனே வா
கதிதனைத் தந்திட வா வா வா

(...... முருகா)

7. பக்தியைத் தந்திட வா வா வா
பரமகுருபரனே வா வா வா

(...... முருகா)

8. ஆண்டருள் செய்வாய் ஆறுமுகா
ஆதரித் தருள்வாய் ஆறுமுகா

(...... முருகா)

9. பாடும் பணியே பணியாக
பார்த்தருள் புரிவாய் பரம்பொருளே

(...... முருகா)

10. தொழுவார் துயர்களைத் துடைத்திடவே
தோகை மயிலில் வந்திடுவாய்

(...... முருகா)

11. வறுமையும் பிணியும் வாட்டிடுவாய்
வாழ்வில் நலமே வழங்கிடுவாய்

(...... முருகா)

12. துன்பங்கள் எல்லாம் துடைத்திடுவாய்
இன்பங்கள் எல்லாம் ஈந்திடுவாய்

(...... முருகா)

13. ஆடிடும் மயிலில் அமர்ந்திடுவாய்
அமைதியும் இன்பமும் அருளிடுவாய்

(...... முருகா)

14. நாட்டில் நலங்கள் பெருகிடவே
நல்லருள் தன்னை நல்கிடுவாய்

(...... முருகா)

15. தெய்வ நலங்கள் பெருகிடவே
தெய்வமே நல்லருள் தந்திடுவாய்

(...... முருகா)

16. உன்னை வணங்கிடும் உத்தமர்கள்
உலகினில் உயர்ந்திடச் செய்திடுவாய்

(...... முருகா)

17. வாழ்ந்திடுவோரை வாழவைப்பாய்
வாழ்வில் நலமே பெருகவைப்பாய்

(...... முருகா)

18. சைவமதம் என்றும் வாழ்ந்திடவே
சைவமுதற் குரு அருள்புரிவாய்

(...... முருகா)

19. உன்னையே சிந்தனைச் செய்திடுவோர்
உலகினில் ஏனோ உழல்கின்றார்

(...... முருகா)

20. குமரா என்றுனைக் கும்பிடுவோர்
குடும்பம் தழைக்கச் செய்திடுவாய்

(...... முருகா)


English transliteration to come
go to top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

MurugA MurugA MurugA Om
@na@

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]