பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/779

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

772 - முருகவேள் திருமுறை (10-திருமுறை 5. (மன்) நிலைபெற்று விளங்கும் (நான்முகம்) பிரமனது நான்கு முகங்களையும் பெறுவர். (நான்முகன் ஏறும்) அன்ன வாகன்த்தின் மீது ஏறப் பெறுவர் ஏறும் பர்க்கியத்தைப் பெறுவர். (வாண்) (பிரமன் தழுவும்)சர்ஸ்வதி தேவியைத் தழுவப் பெறுவர்-(பிரமனுட்ைய பதவியைப் பெறுவர் என்றவாறு). 6. (மகராலயம்) மகர மீன்கள் உலவுதற்கு இடமான கடலை இடமாகப் பெறுவர் (வருணதேவனுடைய பதவியைப் பெறுவர்), (உவணம்) கருடவாகனத்தில் ஏறப் பெறுவர்; (வாரிச மடந்தை) தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமியுடன் வாழும்படியான 7. (அந் நாயகம்) அந்தத் தலைமைப் பதவியைப் பெறுவர்.(திருமாலின் பதவியைப் பெறுவர் என்றபடி): அயிராவதம் - ஐராவதம் என்னும் வெள்ளை யானையின்மீது ஏறப்பெறுவர் (இந்திரபதவியை அடைவர்) (என்றபடி), அமுதாசனம் பெறுவர் அமுத அசனம் - அமுத உணவைப் பெறுவர் (தேவர்களாவர் என்றபடி) மேல் - பின்னும் 8. (ஆயிரம் பிறை தொழுவர்) சதாபிஷேகம் செய்து கொள்ளும் பாக்கியத்தைப் ப்ெறுவர், (சீர்பெறுவர்) சகல நன்மைகளைப் பெறுவர், (பேர்பெறுவர்) புகழ்பெறுவார்கள், (அழியா வரம்) என்றும் அழியாத வீட்டின்ப வரத்தைப் பெறுவார்கள். (க.உ.) அருணகிரிநாதன் பாடின இம் மயில் விருத்தத்தைப் படிப்பவர்கள் சகல பத்விகளையும், அழியா ன்பத்தையும் பெறுவர். (கு.உ.) இம் மயில் விருத்தம் திருத்தணிகையிற் பாடப்பெற்றது என்பது ಘೀ பல ப்ாடல்களில் வருவதால் விள்ங்குகின்றது. (1) நீல மலர் எந்நாளும் திருத்தணியில் மலர்வது - கடவுள் நீலம் மாறாத தணிகை - என்ற திருப்புகழிற காண்க (பாட்டு 272, பக்கம் 178-179 கீழ்க்குறிப்பு). (8) ஆயிரம் பிறை தொழுவர் (சதாபிஷேகத்துக்கு உரிய வராவர்) சிதாபிஷேகம் என்பது-எண்பது வயதுக்கு மேற்பட்டு வாழ்ந்து ஆயிரம் பிறை கண்ட்வர்க்குச் செய்யும் சட்ங்கு. - O -