Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

kandha purANam by
Sri Kachiyappa SivAchAriyAr




Lord Murugan


      Kaumara_chellam   

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்


1. பாயிரம்

kandha purANam
1. pAyiram


 அகர வரிசையில் முதற்குறிப்புக்கு 
previous        செய்யுள் முதற்குறிப்புக்கு        next  திருத்தங்களின் பட்டியலுக்கு  
 view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க      .pdf அமைப்பில் (தமிழில்) பார்க்க




  1. பாயிரம்


விநாயகர் காப்பு

(திகட சக்கர)

திகட சக்கரச் செம்முக மைந்துளான்
     சகட சக்கரத் தாமரை நாயகன்
          அகட சக்கர வின்மணி யாவுறை
               விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். ...... 1

(உச்சியின் மகுட)

உச்சியின் மகுட மின்ன வொளிர்தர நுதலி னோடை
     வச்சிர மருப்பி னொற்றை மணிகொள் கிம்புரி வயங்க
          மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண் டுற்ற
               கச்சியின் விகட சக்ர கணபதிக் கன்பு செய்வாம். ...... 2

சுப்பிரமணியர் காப்பு

(மூவிரு முகங்கள்)

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
     ஏவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி
          மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
               சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி. ...... 3

நூற் பயன்

(இந்திர ராகி)

இந்திர ராகிப் பார்மே லின்பமுற் றினிது மேவிச்
     சிந்தையி னினைந்த முற்றிச் சிவகதி யதனிற் சேர்வர்
          அந்தமி லவுணர் தங்க ளடல்கெட முனிந்த செவ்வேற்
               கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோது வோரே. ...... 4

வாழ்த்து

(வான்முகில் வழாது)

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
     கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
          நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
               மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம். ...... 5

ஆகத் திருவிருத்தம் - 5




  1. பாயிரம்



 அகர வரிசையில் முதற்குறிப்புக்கு 
previous        செய்யுள் முதற்குறிப்புக்கு        next திருத்தங்களின் பட்டியலுக்கு  
 view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க      .pdf அமைப்பில் (தமிழில்) பார்க்க

azhagi

azhagi

www.kaumaram.com ...... The website for Lord Murugan's Devotees
   இப் பக்கத்தை உங்கள் நண்பருக்கு அறிமுகப்படுத்த          recommend this page to your friend   

Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions 

download Azhagi software and Free Tamil fonts (SaiIndira)
download free Tamil fonts only (SaiIndira)

counter
0605090155