|
கெளமாரம் என்றால் என்ன ?
ஸ்ரீ ஆதிசங்கரர் (சுமார் கி.பி. 8 ம் நூற்றாண்டு), பல துர்மதங்களைத் தள்ளி, இந்து மதத்தின் தூண்கள் என்று கருதப்படும் ஆறு (ஷண்) மதங்களை உணர்த்தி, பக்தியின் அடிப்படையில் வழிபாடுகளை அமைத்துத் தந்தார்.
அந்த ஷண்மதங்கள் என்பன:
காணாபத்யம் ... கணபதி வழிபாடு சைவம் ... சிவ வழிபாடு வைஷ்ணவம் ... விஷ்ணு வழிபாடு செளரம் ... சூரிய, அக்கினி வழிபாடு சாக்தம் ... அம்பிகை வழிபாடு கெளமாரம் ... முருக வழிபாடு
ஷண்மதங்களில் (ஆறு சமயங்களில்) ஒன்றான கெளமாரம் பிரும்ம வித்தை, ஆத்ம வித்தை, புருஷார்த்த சாதனம் என்ற மூன்று செல்வங்களை அறிய வழிகாட்டுவது. இந்த சுப்பிரமணிய உபாசனை சிவதத்துவத்தையே ஆதாரமாகக் கொண்டது. ஜோதி சுவருபமான நிர்க்குண பரப்பிரும்மத்திற்கு சுப்பிரமணிய சிவம் என்று பெயர்.
(திரு எஸ். நடராஜன் .. நஜன் .. எழுதிய .. முருக தரிசனம் .. நூலிலிருந்து ... பிரதிபா பிரசுரம்).
முருக வழிபாடு பெரும்பாலும் தென்னிந்திய மக்களிடம் பிரபலமாக உள்ளது. கந்தனை மிகப் பாசத்துடன் முருகன் என்று அழைக்கிறோம். குமரன் என்றால் இளைஞன். முருகன் என்றால் அழகன். என்றும் இளமையும் அழகும் நிறைந்த முருகக் கடவுளை மூலஸ்த்தான தெய்வமாக வழிபடுகிறோம்.
முருகனுக்குரிய இலக்கியங்களையும், பாடல்களையும், கட்டுரைகளையும் பக்தர்களுக்கிடையே பிரபலம் செய்வதற்காகவும் பக்தர்களின் அனுபவங்களை எல்லோரும் தெரிந்துகொள்வதற்காகவும் அமைக்கப்பட்டதே இந்த ... கெளமாரம் ... இணைய மையம். | |