Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அநுபூதி
51 செய்யுட்கள்

Sri AruNagirinAthar's
Kandhar AnubUdhi
51 verses

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  -    முன்னுரை
 
Kandhar Anuboothi Preface by Thiru S. NatarajanThiru S Nadarajan    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை'
    திரு சு. நடராஜன் (சென்னை)

   Meanings in Tamil by
   'Thiruppugazh Adimai'
   Thiru S Nadarajan (Chennai)

 PDF வடிவத்தில் 

previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

கந்தர் அநுபூதி

முன்னுரை

...... ஏழை தனக்கு மநுபூதி
   ராசி தழைக்க அருள்வாயே ......

அருணகிரிநாதருக்கு 16,000 பாடல்கள் பாடியும் போதும் என்கிற
உணர்வு வரவில்லை. அவருக்கு மேலும் மேலும் இறைவனைப் பாட ஆசை.

   .. ஆசைகூர் பக்தனேன் .. உனது பவள நிற பாதத்தில்
   அழகிய மாலையைச் சூட்ட விருப்பப் பட்டு ...
   புஷ்ப மாலை கோல பிரவாள பாதத்தில் அணிவேனோ ...

  திருப்புகழ் - பாடல் 1212 'ஆசைகூர் பத்தன்' (பொதுப்பாடல்கள்)

... என்கிறார்.

மலர் மாலை வாடிவிடும். வாடாத சொல் மாலையை அணிவிக்கவேண்டும்.
அதில் மனம் எனும் தாமரையை நடுவில் வைத்து அன்பெனும் நூலால்
சொல் எனும் புஷ்பங்களை வைத்து சொல் மாலை கட்டி அவைகளில்
ஞான மணம் வீசச் செய்யவேண்டும். குற்றமற்ற துறந்தோராகிய
வண்டுகள் இந்த மாலையை நுகர்ந்து பாடவேண்டும். மாத்ருகா
அட்சரங்கள் 51 என்கிற கணக்கில் பாடல் அமைய வேண்டும்.

   ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
   மானபூ வைத்து ...... நடுவேயன்

   பானநூ லிட்டு நாவிலே சித்ர
   மாகவே கட்டி ...... யொருஞான

   வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
   மாசிலோர் புத்தி ...... யளிபாட

   மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
   வாளபா தத்தி ...... லணிவேனோ

  திருப்புகழ் - பாடல் 1212 'ஆசைகூர் பத்தன்' (பொதுப்பாடல்கள்)

இப்படிப் பாடியதே அநுபூதி நூலாகும்.

முருகப் பெருமானின் சிறந்த நாமங்களில் ஒன்று கந்தன். ஸ்கந்தன்
என்பது வடமொழிச் சொல். பகைவர்களின் உட்பகை புறப்பகை ஆற்றலை
வற்றச் செய்பவன் என்பது இதன் பொருளாகும். கந்தன் என்கிற தமிழ்ச்
சொல்லுக்கு ஒரு அருமையான கருத்தைக் காணலாம். கந்துழி
என்றால் பழந்தமிழில் நிலையான பற்றுக்கோடு என்று பொருளாகும்.

ஜீவாத்மாக்களுக்கு நடுநிலையான பற்றுக்கோடாக இருப்பவன் கந்தன்.
நம்முடைய எல்லாப் பற்றுக்களையும் போக்கிக்கொள்ள நாம்
உறுதியாகப்பற்ற வேண்டியது கந்தனையே.

கந்தனிடத்தில் ஈடுபட்டு, பிரபஞ்சம் முழுவதையும் கந்த லோகமாகக்
கண்டு, காரண காரியங்கள் ஒடுங்கி, எல்லாவற்றையும் கந்த ரூபமாகக்
காணும் அநுபூதி நிலையே கந்தர் அநுபூதி. இதைச் சித்தரிக்கும் இந்நூல்
அளவுக்கு மிஞ்சிய நிலைக்கு, 'நம்மை அநுபூதி நிலைக்கு', கொண்டு
போய்ச் சேர்க்கவல்லது. இது நித்யப் பாராயணம் செய்யப்படவேண்டிய
நூலாகும்.

இந்த நூலில் உள்ள சில பாடல்களில், தாம் பிரபஞ்ச மாயையில்
கட்டுண்டதைப் போல் ஏன் பாடி இருக்கிறார் என்ற கேள்வி எழலாம்.
கூண்டிலிருந்து விடுபட்ட கிளி ஆகாசத்தில் பறந்துகொண்டே மற்ற
விடுபடாத கிளிகளுக்காக வருத்தப்பட்டு, கருணை வள்ளலான
அருணகிரியார், தாம் அநுபூதி ஞானம் அடைந்தபின் நம்மைப்
போன்றவர்களுக்காக பாடப்பட்டவைகளே இப்பாடல்களாகும்.
go to top
 51 செய்யுட்கள்  51 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
52-101 செய்யுட்கள்  52-101 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
 51 verses - English Transliteration   51 verses (with audio)
 52-101 verses - English Transliteration   52-101 verses (with audio)
 அகரவரிசைப் பட்டியலுக்கு   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 For Alphabetical List   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar Anuboothi - Preface by Thiru S. Nadarajan

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]