Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 99 - தீவினை யற்ற
Kandhar andhAdhi - theevinai yatRa
Kandhar andhAdhi - theevinai yatRa    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.272  pg 4.273 
 WIKI_urai Song number: 99 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 99 ... தீவினை யற்ற

(ஞானதீபம் ஏற்றுவாருக்கு குக சாயுச்யம் கிடைக்கும்)

......... பாடல் .........

      தீவினை யற்ற சினந்தீ ரகத்துண்மெய்த் தீபநந்தந்
      தீவினை யற்ற வநந்தா தெடுத்தனஞ் செந்தினைமேல்
      தீவினை யற்ற புனமான் கொழுநன் செழுங்கனகத்
      தீவினை யற்ற வடியார்க் கருள்பெறுஞ் செல்வனுக்கே ...... 99

......... சொற்பிரிவு .........

தீ வினையற்ற சினந்தீர் அகத்துள் மெய் தீபம்

(நம்தம்) தீவினை அல் தவ நந்தாது எடுத்தனம் செம் தினை மேல்

தீ வினையற்ற புன மான் கொழுநன் செழும் கனக

தீவினை அற்ற அடியார்க்கு அருள் பெறும் செல்வனுக்கே.

......... பதவுரை .........

தீ ... அக்னியானது,

வினையற்ற ... தனது இயல்பாகிய எரிக்கும் தன்மையை விட்டது போல்,

சினந்தீர் ... கோபத்தை அடியோடு ஒழித்த,

அகத்துள் ... உள்ளத்துள்,

மெய்த்தீபம் ... சத்யம் என்கிற ஞான விளக்கை,

நந்தாது ... அணைந்து விடாமல் எப்போழுதும் பிரகாசிக்கும்படி,

நம்தம் ... நம்முடைய,

தீ வினை ... தீ வினையாகிய,

அல் ... இருள்,

தவ ... நீங்கும்படி,

எடுத்தனம் ... ஏற்றி வைத்தோம்,

செம் தினைமேல் ... வளமையான தினைப் புனத்தில்,

தீ வினையற்ற ... தீர்ந்து போகாமல் எப்போழும் பசுமையாகவே இருக்கும்,

புன ... தினைப்புனத்தில் வாழும்,

மான் ... மான் போன்ற வள்ளி நாயகியின்,

கொழுநன் ... மணாளனும்,

அற்ற அடியாருக்கு ... உலக பசு பாச தொந்தங்களை அடியோடு நீக்கின அடியார்களுக்கு,

செழுங் கனகத் தீவினை ... செழுமையான பொன் போல் பிரகாசிக்கும் மோட்ச வீட்டை,

அருள் ... வரமாகக் கொடுக்கும்,

பெறும் செல்வனுக்கே ... முக்திச் செல்வனான முருகப்பெருமானுக்கு

(மெய்த் தீபம் எடுத்தனம்).

......... பொழிப்புரை .........

வள்ளியை ஆட்கொண்டவனும் பந்த பாசங்களை அறுத்த மெய் அடியாருக்கு சாயுச்சியப் பதவியைக் கொடுப்பவரான முத்தி முதலாளியாகிய முருகப் பெருமானுக்கு நமது உள்ளத்தில் வெகுளி ஒழியும்படியும் மாயை இருள் நீங்கவும் அணையாத ஞான தீபத்தை ஏற்றிவைத்தோம்.

கந்தர் அந்தாதி - 99 - தீவினை யற்ற
Kandhar andhAdhi - theevinai yatRa
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - theevinai yatRa

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]