Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 46 - செருக்கும் பராக
தமிழில் பொருள் எழுதியது
  'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன், சென்னை, தமிழ்நாடு  


Kandhar andhAdhi - serukkum barAga
Meanings in Tamil by
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan, Chennai, Tamil Nadu

'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents numerical index complete song  PDF  search
previous page next page
இச் செய்யுளின் ஒலிவடிவம்

audio recording of this poem
Ms Revathi Sankaran பாடலைப் பதிவிறக்க 

 to download 


பாடல் 46 ... செருக்கும் பராக   (ஸ்திர தன்மை பெற)

......... பாடல் .........

      செருக்கும் பராக வயிராவ தத்தெய்வ யானைமணஞ்
      செருக்கும் பராக தனந்தோய் கடம்ப செகமதநூல்
      செருக்கும் பராக மநிரு பனந்தந் தெளிவியம்பு
      செருக்கும் பராகம் விடுங்கடை நாளுந் திடம்பெறவே ...... 46

......... சொற்பிரிவு .........

செரு கும்ப ராக அயிராவத தெய்வயானை மணம்

செருக்கும் பராக தனம் தோய் கடம்ப செக மதநூல்

செருக்கும் பர ஆகம நிருபன அந்தம் தெளிவி

(அம்பு) செர் உக்கு உம்பர் ஆகம் விடும் கடை நாளும் திடம் பெறவே.

......... பதவுரை .........

செரு ... போர் புரியும் திறமும்,

கும்ப ... மத்தகமும்,

ராக ... கோபமும் உடைய,

அயிராவத ... அயிராவதம் என்ற யானையால் வளர்க்கப்பட்ட,

தெய்வயானை ... தேவசேனையின்,

மணம் ... மணம் வீசுவதும்

செருக்கும் ... இறுமாப்பும்,

பராக ... பூந்தாதுகளும் உடைய,

தனம் ... தன பாரத்தில்,

தோய் ... மூழ்கும்,

கடம்ப ... கடப்ப மாலை அணிந்த முருகனே,

செக ... இவ்வுலகத்தில் (வினையால் ஏற்படும்),

மதநூல் செருக்கும் ... பிற சமய நூல்களின் கர்வத்தை,

பர ... வெல்லுகின்ற,

ஆகம ... வேதாகம நூல்களை,

நிருபன ... சிருஷ்டித்தவனே,

அம்பு சேர் ... தாமரை மலர்களில் உதித்த பிரம்மாக்களும்,

உக்கு ... அழிந்து,

உம்பர் ... தேவர்களின்

ஆகம் விடும் ... சரீரத்தை விடுகின்ற,

கடை நாளிலும் ... உகாந்த காலத்திலும்,

திடம் பெறவே ... நான் நித்யத்வம் அடையும் பொருட்டு,

அந்தம் தெளிவி ... இப்பிரபஞ்சத்தில் முடிவான பொருள் எது என்பதை எனக்கு உபதேசிக்க வேண்டும்.

......... பொழிப்புரை .........

தேவயானை மணாளனே, பிற சமயங்களில் நான் மயக்கம் அடையாதபடியும் யுகமுடிவில் நான் அழிவு அடையாதபடியும் நித்யப் பொருளை நீ எனக்கு தெரிவிக்க வேண்டும்.

கந்தர் அந்தாதி - 46 - செருக்கும் பராக
Kandhar andhAdhi - serukkum barAga
 அட்டவணை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - serukkum barAga

Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
Kaumaram.com uses dynamic fonts.
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 

... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

 ஆரம்பம்   அட்டவணை   மேலே   தேடல் 
 பார்வையாளர் கருத்துக்கள்   உங்கள் கருத்து   பார்வையாளர் பட்டியலில் சேர 
 home   contents   top   search   sign guestbook   view guestbook   join our mailing list 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[fbk]   [xhtml] .
 [css]