Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 6 - செவ்வந்தி நீல
Kandhar andhAdhi - sevvandhi neela
Kandhar andhAdhi - sevvandhi neela    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.157  pg 4.158 
 WIKI_urai Song number: 6 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 6 ... செவ்வந்தி நீல   (பொழுது கண்டு மயங்கல்)

......... பாடல் .........

      செவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற்
      செவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய்திங்கட் சேய்புனைந்த
      செவ்வந்தி நீலத் தொருபாகர் போன்ற தினிச்சிந்தியார்
      செவ்வந்தி நீலத்தி னீடுமுற் றாத திமிரமுமே ...... 6

......... சொற்பிரிவு .........

செவ்வந்தி நீலப் புயம் முருகா பத்தர் சித்த மெய்யில்

செவ்வு அந்தி நீ லத்தையுற்று அருள்வாய் திங்கட் சேய் புனைந்த

செவ்வந்தி நீலத்தொருபாகர் போன்றது இனி சிந்தியார்

செ வந்தி நீலத்தின் நீடும் முற்றாத திமிரமுமே.

......... பதவுரை .........

செவ்வந்தி ... சாமந்தி மாலையையும்,

நீலம் ... நீலோற்பல மாலையையும் புனைந்திருக்கும்,

புய முருகா ... புயங்களை யுடைய முருகனே,

பத்தர் ... உன் அடியார்களுடைய,

சித்த மெய்யில் ... இதயமாகிய உண்மை நிலையில்,

செவ்வு அந்தி ... மிகுதியாக பொருந்தி இருக்கும்,

நீ ... நீ,

லத்தை யுற்று ... க்ருபை கூர்ந்து,

அருள்வாய் ... அந்த மாலையை நீ கொடுத்து அருள வேண்டும்,

திங்கட் சேய் ... இளம் பிறையை,

புனைந்த ... அணிந்திருக்கும்,

செவ்வந்தி ... சிவந்த மாலைக்காலம்,

நீலத்தொருபாகர் ... பார்வதி பங்கராகிய பரமசிவனை,

போன்றது ... போல் விளங்குகிறது,

இனி ... இனிமேல் வரப்போகிறது,

சிந்தியார் ... உன்னைத் தியானிக்காதவர்கள் அடையும்,

செ ... ஜெனனமாகிய பிறப்பு,

வந்தி ... வருத்தத்தை விளைவிக்கும்,

நீலத்தின் ... அஞ்ஞான இருளைப் போன்று,

நீடும் ... நீடித்து நிற்கும்,

முற்றாத ... தொலையாத,

திமிரமும் ... இராக்காலம்.

......... பொழிப்புரை .........

பார்வதி பங்கராகிய சிவனைப் போல் பிறைச் சந்திரன் கூடிய மாலைப் பொழுது விளங்குகிறது .. இனி உன்னை நினைக்காதவர்கள் அடையும் ஜனனமாகிய இருளைப் போல இரவு தொடரப் போகிறது. அதனால் பக்தருடைய உண்மை நிலையை அறிகின்ற நீ என்னுடைய தாபத்தை அறிந்து நீ தரித்திருக்கும் மாலையை எனக்கு கொடுத்து அருள வேண்டும்.

கந்தர் அந்தாதி - 6 - செவ்வந்தி நீல
Kandhar andhAdhi - sevvandhi neela
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - sevvandhi neela

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]