பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க 14 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை இப் பாடலிற் கூறிய மயிலின் ஆற்றலுக்கு ஒப்பாக "நடக்கிற் படி (பூமி நடுங்கும்; நோக்கில் திசைவேகும் இடிக்கில் உலகனைத்தும் ஏங்கும்" - என பத்தின் ஆற்றலைக் காரைக்காலம்மையார் அற்புதத் திருவந்தா யில் (100) கூறுவதைக் காண்க 12. சேவலின் ஆற்றல் படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகையென்னுந் தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந் துடைபட்ட தண்ட கடாக முதிர்ந்த துடுபடலம் இடைபட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே. (பொ. உ படைகளுட் சிறந்ததான வேலை ஏந்திய முருகனிடம் வந்து சேர்ந்த (வாகைப் பதாகை வெற்றிக்கொடி என்னப்பட்ட ( பட்ட) போர் செய்யும் எண்ணத்துடன் வந்து அந்த எண்ணம் றைவேறாது, முருகன் அருட் கண்ணோக்கால் ஞான உணர்வு கெர்ன்ட் சேவல் (சிறகடிக் கொள்ள) தனது சிறகை அடிக்க (அந்த வேகத்தால்) சலதி கிழிந்து கடல் கிழிபட்டு (உடைபட்டது அன்டகடாகம்) அண்ட கோளத்தின்மேலோடு உடைபட்டது: (உதிர்ந்தது உடுபுட்லம்) நக்ஷத்திர கூட்டங்கள் உதிர்ந்தன. (இட்ைபட்ட) மத்தியிலிருந்த (குன்றங்களும்) மலைகளும் மகாமேரு மலையும் (இடிபட்டன) பொடியாயின. (சு உ) முருகவேளின் சேவல் சிறகடிக்கக் கடல் கிழிந்தது. அண்ட கோளஓடு உடைந்தது, நக்ஷத்திரங்கள் உதிர்ந்தன, மலைகள் பொடியாயின. (கு உ) வேல் பட்டு சூரன் சேவல் மயில் என இரு பிளவுகளாக ஆனதும், அவை பின்னும் போருக்கு எழுந்து வந்தன. அப்போது முருகனது அருட் பார்வை பெற்று அவை ஞான உணர்வு பெற்றன. சேவலு மயிலுமாகி சினங்கொடு. அமர்த் தொழில் கருதி வந்தான்", எந்தை அருள் கெழு நாட்டஞ் சேர்த்த ஆங்கவன் நீக்கித் தெருள்கெழு மனத்தனாகி நின்றனன்; அக்கணம் எம்பிரான் தன் அருளினால் உணர்வு சான்ற குக்குட உருவை நோக்கிக் கடிதில்நீ கொடியே ஆகி மிக்குயர் நமது தேரின் மேவினை ஆர்த்தி என்ன. "அண்டம் இடிபட உருமேறுட்க வன்னியும் வெருவ ஆர்த்து மற்றவன் உற்ற தன்றே" . கந்த புராணம் 413492, 495,497, 498 'வ்ர்ளகிரியைத் தனது தாளில் இடியப்பொருது வானகபுனை குக்குட பதாகை வேளைக்காரன் வகுப்பு 13. முருகன் பெருமை ஒருவறைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர் திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர்