Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 44  தோலால் சுவர்
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 44  thOlAl suvar
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 44 ... தோலால் சுவர்

தோலாற் சுவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
   காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
      பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
         வேலாற் கிரிதொளைத் தோனிரு தாளன்றி வேறில்லையே.

......... சொற்பிரிவு .........

தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி இரு
   காலால் எழுப்பி வளைமுதுகு ஓட்டி கைநாற்றி நரம்-
      பால் ஆர்க்கை இட்டு தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
         வேலால் கிரி தொளைத்தோன் இருதாளன்றி வேறில்லையே.

......... பதவுரை .........

தோலினால் சுவரெழுப்பி பத்து வகை வாயுக்களால் தாங்கவைத்து
இரண்டு கால்களாகிய தூண்மீது நிற்கச்செய்து வளைந்த முதுகெலும்பை
அமைத்து இரு கரங்களாகிய கைகளைத் தொங்கவிட்டு நரம்புகளால்
கட்டித் தசையால் மூடிச் செய்த இந்த உடம்பாகிய வீட்டைவிட்டு உயிர்
பிரியும்போது வேலால் கிரௌஞ்சமலையைத் தொளைத்தருளிய
திருமுருகப்பெருமானின் இரு திருவடிகளைத்தவிர வேறு புகலிடம்
இல்லை.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.49   pg 4.50 
 WIKI_urai Song number: 44 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 44 - thOlAl suvar

thOlAl suvar vaiththu nAlARu kAlil sumaththi iru
   kAlAl ezhuppi vaLaimudhugu Otti kainAtRi naram-
      bAl Arkkai ittu thasaikoNdu mEindha agampirindhAl
         vElAl giri thoLaiththOn iruthALandRi vERillaiyE.

The walls [of the body] are raised by means of skin, supported by ten kinds of winds; they are erected on two legs as pillars; a curved back-bone is formed with two hands hanging, tied with sinews and enclosed by muscle. When the soul leaves such a home, there is no other refuge except the twin Sacred Feet of Lord, Who pierced through the krauncha-hill with His lance.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 44 - thOlAl suvar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]