Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 31  பொக்கக் குடிலில்
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 31  pokkak kudilil
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 31 ... பொக்கக் குடிலில்

பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்
   செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து
      கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக்
         கக்கக் கிரியுரு வக்கதிர் வேல்தொட்ட காவலனே.

......... சொற்பிரிவு .........

பொக்கக் குடிலில் புகுதா வகை புண்டரீகத்தினும்
   செக்கச் சிவந்த கழல் வீடுதந்து அருள்; சிந்து வெந்து
      கொக்குத் தறிபட்டு எறிபட்டு உதிரம் குமுகுமு எனக்
         கக்கக் கிரி உருவக் கதிர்வேல் தொட்ட காவலனே.

......... பதவுரை .........

பொய்யான இந்த உடல் என்னும் குடிசையில் இனி அடியேன் புகாதபடி,
செந்தாமரை மலரினினும் மிகவும் சிவந்த தேவரீரது திருவடியாகிய
வீட்டை [முத்திப்பேற்றை] அடியேனுக்குத் தந்தருள்வீராக!
கடலானது வெதும்பி மாமரவடிவாகி நின்ற சூரபன்மன் இரு பிளவாக
முறிந்து எறியப்பட்டு குமுகுமுவென இரத்தத்தை உமிழவும்
கிரௌஞ்சமலையை ஊடுருவிச் செல்லவும் ஒளியுடைய வேலாயுதத்தை
செலுத்திய காவலனே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.38 
 WIKI_urai Song number: 31 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 31 - pokkak kudilil

pokkak kudilil pugudhA vagai puNdareegaththinum
   sekkach chivandha kazhal veeduthandhu aruL; sindhu vendhu
      kokkuth thaRipattu eRipattu udhiram kumumu enak
         kakkak giri uruvak kadhirvEl thotta kAvalanE.

O' Lord, please grant me the grace of attaining liberation by reaching Your Sacred Feet which are more reddish than the lotus-flower, so that I shall not re-enter this hut which is my false illusory body. O' Lord, when the demon SUrapanman assumed the guise of a mango-tree after the sea, wherein he was hiding, had become too hot to bear, You hurled Your glittering lance to penetrate the demon as well as the krauncha-hill and split the demon's body into two halves, which were thrown away, causing thereby the shedding a great deal of gushing blood.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 31 - pokkak kudilil

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]