Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri Subramaniar Aalayam - Kolam Ayer (JB), Malaysiaஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம்
குளம் ஆயர், ஜோகூர்பாரு ஜோகூர் மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Sri Subramaniar Aalayam  Flag of Johor State
Kolam Ayer (JB) Johor Malaysia
history address timings special events previous-other names location map

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple

ஆலய வரலாறு

ஜோகூர் பாரு, பொதுப்பயனீட்டு இலாகாவில் சாதாரணக் குழாய் நீர் பழுதுபார்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்துவந்த ஸ்ரீலஸ்ரீ சங்கரன் சுவாமிகளால் 1944-ஆம் ஆண்டுமுதல், தான் வசித்துவந்த குளம் ஆயர் பொதுப்பயனீட்டுத் துரையில் பணிபுரிவோர் தங்கும் விடுதியில் அருள்மிகு சுப்பிரமணியர் இறைவனை நிறுவி வழிபட்டு வந்தார். இவருடைய பக்தியில் நம்பிக்கையும் வழிபாடு செய்வதில் ஆர்வமும் சுற்றுவட்டார மக்களிடையே பெருகவே கோவில் ஒன்று கட்ட திட்டமிட்டுள்ளார் ஸ்ரீலஸ்ரீ சங்கரன் சுவாமிகள்.

தற்பொழுது ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ள இடத்தில் முன்னாள் ம.இ.கா. தேசியத் தலைவர் துன் வீ.தி. சம்பந்தன் அவர்களால் முறைப்படி அடிக்கல் நாட்டப்பட்டது. இக் கோவிலைக் கட்டும் பணி 25-8-1968-ல் தொடங்கப்பெற்று 5-1-1969-ல் செவ்வனே முடிவுற்றது. இக்கோவிலைக் கட்டிமுடிக்க அன்றைய நிலவரப்படி ஏறக்குறைய 80,000 வெள்ளி செலவாயிற்றாம். கடந்த 20-1-1969-ல் முதலாவது திருக்குட நன்னீராட்டு விழா (கும்பாபிஷேகம்) மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீலஸ்ரீ சங்கரன் சுவாமிகளின் அயராத முயற்சியினால் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு கடந்த 1-6-1962-ல் இக் கோவினுள்ளே பரிவாரம் அமைத்தார்.

கடந்த 5-11-1982-ல் இக்கோவிலின் இரண்டவது திருக்குட நன்னீராட்டு விழா (கும்பாபிஷேகம்) நடைபெறும் முன் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்குப் பரிவாரக் கோவிலொன்றும், ஏற்கெனவே அமைக்கப்பெற்றிருந்த ஸ்ரீ துர்க்கையம்மன் பரிவாரக்கோவிலைத் திருத்தியும், கோவிலின் முற்பகுதி பிரகாரத்திற்கு மொசைக் கற்களைப் பதித்தும் திருப்பணி செய்யப்பட்டது.

ஸ்ரீலஸ்ரீ சங்கரன் சுவாமிகளின் மறைவு கடந்த 2-5-1984-ல் நிகழுமுன் இரு மாதங்களுக்கு முன் இக்கோவிலின் சுற்றுப்பிரகாரம் முழுமைக்கும் மொசைக்கல் பதிக்கப்பட்டு ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ கிருஷ்ணர் ஆகிய பரிவாரக் கோவில்களின் கூரைப்பகுதி நீட்டிக்கப்பட்டது.

நமது கோவிலின் திருமண மண்டபம் கடந்த 1990-லும் அதன்பின்னார் 1994-லும் சீரமைப்புச் செய்யப்பட்டது. கடந்த 1994-ல் நடைபெற வேண்டிய நமது கோவிலின் மூன்றாவது திருக்குட நன்னீராட்டு விழா (கும்பாபிஷேகம்) சில தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்க வேண்டியதாயிற்று. இதற்குக் காரணம் நமது கோவில் கட்டப்பட்டு 1/4 நூற்றாண்டு (25 ஆண்டுகள்) ஆகின்றபடியால் கோவில் அமைப்பில் பல முக்கிய சீரமைப்புக்களைச் செய்ய வெண்டிய அவசியம் ஏற்பட்டது. அதாவது, கோவிலின் ஈரடுக்குக் கோபுரம் மிகப் பழமையானபடியாலும் இன்னும் சில ஆண்டுகளுக்கே அக்கோபுரம் தாக்குப் பிடிக்கும் என பிரதான ஸ்தபதி கூறியபடியால், அந்தக் கோபுரத்தை அகற்றிவிட்டு புதிய மூன்றடுக்கு கோபுரம் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாகக் கீழ்க்கண்டுள்ளபடி புதிய பரிவாரக் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1. ஸ்ரீ விநாயகருக்குப் புதிய பரிவாரக் கோவில்
2. ஸ்ரீ சிவலிங்கருக்குப் புதிய பரிவாரக் கோவில்
3. ஸ்ரீ துர்க்கைக்குப் புதிய பரிவாரக் கோவில்
4. ஸ்ரீ கிருஷ்ணருக்குப் புதிய பரிவாரக் கோவில்
5. ஸ்ரீ நாகராஜருக்குப் புதிய பரிவாரக் கோவில்
6. ஸ்ரீ இடும்பனுக்குப் புதிய பரிவாரக் கோவில்
7. எழுந்தருளிய தெய்வங்களுக்குப் புதிய வசந்த மண்டபம்
8. ஸ்ரீ நவக்கிரகங்களுக்குப் புதிய பரிவாரக் கோவில்
9. மேலும் கோவிலின் அர்த்த மண்டபத்தில் (முன் மண்டபம்) அமைந்துள்ள, புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள துண்களில் கீழ்க்காணும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன:

    1. ஸ்ரீ விநாயகர்
    2. ஸ்ரீ சுப்பிரமணியர்
    3. ஸ்ரீ சங்கரநாராயணர்
    4. ஸ்ரீ விஷ்ணு
    5. ஸ்ரீ தண்டாயுதபாணி (பழனி முருகன்)
    6. ஸ்ரீ அர்த்த நாரீஸ்வரர்
    7. ஸ்ரீ துர்க்கை அம்மன்
    8. ஸ்ரீ இடும்பன்

10. கோவிலின் கருவறையைச் சுற்றியுள்ள மூன்று பக்க சுவர்களில் முறையே பிரம்மா, விஷ்ணு, தக்ஷணா மூர்த்தி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
11. கோயிலின் அர்த்த மண்டபக் கூரைப் பகுதியின் முன்பக்க முகப்பில் (இராஜாகோபுரம்) நாடுவில் சிவ குடும்பமும் இரு பக்கங்களிலும் முறையே மகாலட்சுமி சிலையும், சரஸ்வதி சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.
12. கோயில் ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ சங்கர சுவாமிகளின் ஆசிரமம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இக் கோவில் பக்தர்களின் முழுமையான ஒத்துழைப்பினாலும் எம்பெருமான் முருகக் கடவுளின் கடாட்சத்தாலும் திருப்பணிகள் யாவும் செம்மையாகச் செய்யப்பட்டு - மே திங்கள் முதலாம் நாள் (1-5-1996) நமது கோவிலின் மூன்றாவது திருக்குட நன்னீராட்டு விழா (கும்பாபிஷேகம்) எவ்வித இடர்பாடுமின்றி நடைபெற்று எல்லாம் வல்ல எம்பெருமான் முருகன் திருவருள் பாலித்துள்ளார்.

"இன்பமே சூழ்க! நல்லோர் வாழ்க!!"

The History of our Temple

The temple was initiated in 1994 at J.K.R. quarters, Jalan Kolam Air by a plumber who was later well-known as Sri Sankaran Swami. In the early days, many devotees who had faith in him and his healing powers attended predawn prayers at his humble residence. As the devotees increased in number, Sri Sankaran Swami felt the need to build a temple.

The foundation of the temple was laid by the M.I.C. National President Tun V.T. Sambanthan on 25-8-1968, an auspicious day. It cost about Eighty thousand Ringgit to complete the building and the Kumbabishegam was done on 20-1-1969 on a grand scale. With his perseverence and initiative, Srilas Sri Sankaran Swami also succeeded in installing the statue of the deity Sri Krishna Bagavan and renovation for Sri Durga Devi sanctum was done. The flooring around the temple was changed to mosaic tiles; a few days before Srilas Sri Sankaran Swami's demise on 2-5-1984. The Wedding hall was built in 1990 and improvements were done in 1994. Due to some unforeseen circumstances, it was not feasible to carry out the third Kumbabishegam as planned. As a quarter of a century has passed since the temple was first erected, certain improvements and renovation have to be made for the maintenance of the temple and its premises, especially the "Kopuram" which may collapse if not attended to.

Due to the request and generous donations of the devotees it has been possible to have individual structures for the deities as follows:-

1. A new sanctum for Sri Vinayagar Swami
2. A new sanctum for Sri Sivalinga Swami
3. A new sanctum for Sri Durkai Amman
4. A new sanctum for Sri Krishna Swami
5. A new sanctum for Sri Nagaraja Swami
6. A new sanctum for Sri Edumban Swami
7. A new sanctum for Navvakiragangal
8. A new Vasantha Mandapam for the Idols that are taken around during festivals.
9. The temple pillars have been redecorated with statues of the following:-

    1. Sri Vinayagar
    2. Sri Subramaniar
    3. Sri Sankaran Narayanar
    4. Sri Vishnu
    5. Sri Thandapani (Palani Murugan)
    6. Sri Arthanariswarar
    7. Sri Durkai Amman
    8. Sri Edumban

10. Around the outer walls of Karuvarai (Main Temple) the following statues have been inbuilt that is Sri Brammah, Sri Vishnu and Sri Thatchanamurthi.
11. The temple's outward facade has been inbuilt with statues of "Siva Family" and both sides standing are Mahaletchumi and Sri Saraswathy.
12. Renovation has been done for the Srilasri Sankaran Asramam.

Due to untiring efforts of the devotees, the Committee Members and with God's grace our Temple's Third Kumbabishegam has been made possible on 1-5-1996.

"May Lord Muruga shower His blessings on all of us".

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

தமிழ்ப் புத்தாண்டு (சித்திரை 1)
Tamil New Year (Chithirai 1)


ஆலய நேரங்கள்

temple timings

5:30 am – 12 noon
5:30 pm – 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Subramanian Temple,
Jalan Kolam Air,
Johor Bahru,
Johor,
MALAYSIA
Postcode: 80100
Telephone: +6 07 223 4567
Telephone: +6 07 223 4569


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
1.474399, 103.736731

Sri Subramaniar Aalayam - Kolam Ayer (JB), Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri Subramaniar Aalayam - Kolam Ayer (JB), Johor, Malaysia
(kdcmyb25)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]