Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Taiping Thanneermalai Sri Thandayuthapani Alayam - Taiping Thanneermalai, Malaysiaதைப்பிங் தண்ணீர்மலை ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம்
தைப்பிங் தண்ணீர்மலை பேராக் மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Taiping Thanneermalai Sri Thandayuthapani Alayam  Flag of Perak State
Taiping Thanneermalai Perak Malaysia

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple
... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple


ஆலய வரலாறு

(ஆலயத்தின் அர்ச்சகர் சிவஸ்ரீ ச. சரவணண் குருக்கள் அவர்கள் கூறியது).

சுமார்1800ல் இந்த ஆலயம் துவங்கப்பட்டது. அச்சமயம் இவ்வாலயத்தை சுவாமியார்களும் சன்னியாசிகளும் பராமரித்து வந்தனர். அப்பொழுது சன்னிதி நீர்வீழ்ச்சிக்கருகில் இருந்தது. அக்கால ஆளுனரான பிரிட்டிஷார், நீச்சல் குளம் தேவைப்பட்டதால் தற்சமயம் ஆலயம் இருக்கும் இடத்திற்கு சன்னிதியை மாற்றிக்கொடுத்தனர். 1907-லிருந்து இவ்வாலயம் தைப்பிங் ஸ்ரீ மாரியம்மன் ஆலய நிர்வாகத்தில் செயல்படுகிறது.

History of the Temple

(narrated by Sivasri Sa. Saravanan, priest of the temple).

The temple has existed since 1800. SanyAsis and SwAmiyArs took care of it at that time. In 1907 the British rulers wanted the use of the waterfall area as a swimming pool. The sannithi was re-located to its present place and was gazetted. Since then this temple is under the management of Sri Mariamman temple (in Taiping).

சிறப்புக் கவிதை

Special Poem

  
 பதிவிறக்க    to download 
Thiru L. Vasanthakumar M.A.


மலேசியா - பேராக் தைப்பிங் தண்ணீர்மலை முருகன் துதிமாலை
(இயற்றிப் பாடியவர்: எல். வசந்த குமார், எம். ஏ.)

                           உ

மைப்பூசு கண்டத்து மணிகண்டன் மைந்தர்க்கு
   தைப்பூசத் திருநாளாம் தைப்பிங்கின் பெருநாளாய்
      மெய்ப்பூசு வெண்ணீற்று வேற்படை வானவர்க்கு
         செய்ப்பூசைக் காவடித் திருவிழாத் தினமழகே.         ... 1

பாம்பனார் பகர்ந்த பகைகடிதல் தோத்திரத்தை
   நம்பிரானார் முருகவேற்கு நயமுடன் ஓதிடில்னீர்
      தம்பிரானாய் தைப்பிங்கின் தங்கவேலைத் தரிசித்து
         உம்பர்கோன் உலகத்தில் உறுதியாம் நிலைத்திடுவீர்.         ... 2

குமரகுரு தாசனார் அருள்செய்த குமாரஸ்தவமதனை
   அமருலகம் ஆள்வதற்கு அடையாள வாக்கியமாய்
      பரமகுரு பதமென்று பக்தியோடு பரவுவார்க்கு
         வரமருளும் வடிவேலோன் வந்தருள் செய்திடுவான்.         ... 3

பஞ்சாமிர்த வண்ணமாய் பாம்பனார் பகன்றவையை
   நெஞ்சார்ந்த நேசத்தோடு நித்தலும் நினைந்தேத்த
      வஞ்சமிலா வாழ்வருளி வளமாக்கும் - தைப்பிங்கின்
         குஞ்சரியாள் பாகத்தான் குருவடிகள் போற்றி! போற்றி!         ... 4

கூறுமடியார்கள் குற்றங்கள் தீர்த்தருளும் குமரனைப்போல்
   வேறுமொரு தெய்வந்தான் உண்டென்று வீண்நாள்போக்காது
      ஆறெழுத்து மந்திரத்தை ஆறுமுகற்கு அனுதினமோதியே
         பேறுபதின் ஆறினொடு பெருங்குணங்கள் பெற்றிடுவீர்.         ... 5



A song in praise of Taiping ThaNNeermalai Murugan (Perak, Malaysia)
(composed and sung by: L. Vasantha Kumar, M.A.)

                  (English transliteration)

maippUsu kaNdaththu maNikaNdan maindharkku
   thaippUsath thirunALAm thaippingkin perunALAi
      meippUsu veNNeetRu vERtpadai vAnavarkku
         seippUsaik kAvadith thiruvizAth dhinamazhagE.         ... 1

pAmbanAr pagarndha pagaikadidhal thOththiraththai
   nambirAnAr murugavERkku nayamudan Odhidilneer
      thambirAnAi thaippinggin thanggavElaith dharisiththu
         umbarkOn ulagaththil uRudhiyAm nilaiththiduveer.         ... 2

kumaraguru dhAsanAr aruLseidha kumArasthavamadhanai
   amarulagam AaLvathaRkku adaiyALa vAkkiyamAi
      paramaguru padhamendRu bakthiyOdu paravuvArkku
         varamaruLum vadivElOn vandharuL seidhiduvAn.         ... 3

panjAmirdha vaNNamAi pAmbanAr pagandRavaiyai
   nenjArndha nEsaththOdu niththalum ninaindhthEththa
      vanjamilA vAzhvaruLi vaLamAkkum - thaippinggin
         kunjariyAL bAgaththAn guruvadigaL pOtRi! pOtRi!.         ... 4

kURumadiyArgaL kutRangkaL theerththaruLum kumaranaippOl
   vERumoru dheivanthAn uNdendRu veeN nALpOkkAdhu
      AaRezhuththu mandhiraththai AaRumugaRkku anudhinamOdhiyE
         pERpadhin AaRinodu perungguNangkaL petRiduveer.         ... 5

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

1. பங்குனி உத்திரம் (3 நாட்கள்)
2. தைப்பூசம்

1. Panguni Uththiram (3 days festivities)
2. ThaipUsam



ஆலய நேரங்கள்

temple timings

6:45 am – 12 noon
3:45 pm – 7 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Thanneermalai Sri Thandayuthapani Alayam,
382 Waterfall Road,
Taiping,
Perak,
MALAYSIA
Postcode: 34000
Telephone: +6 05 807 9972


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
4.861733, 100.790570

Taiping Thanneermalai Sri Thandayuthapani Alayam - Taiping Thanneermalai, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Taiping Thanneermalai Sri Thandayuthapani Alayam - Taiping Thanneermalai, Perak, Malaysia
(kdcmyb11)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

-[W3]-