Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Murugan Thirukkundram Singaporeமுருகன் திருக்குன்றம்
புக்கிட் பாஞ்சாங் சிங்கப்பூர்

Flag of Singapore  Murugan Thirukkundram
Bukit Panjang Singapore

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

Bukit Panjang

ஆலயத்தைப் பற்றி
About the temple


ஆலய வரலாறு - விவரங்கள்

முருகன் திருக்குன்றம், 1962 ல் ஆர்.ஏ.எப். தண்ணீர் விநியோகத் தொழிலாளியான திரு. சண்முகம் அவர்களால் 'லாம் சான்' கிராமத்தில் தொடங்கப்பட்டது. இவர் ஸ்ரீ முனீஸ்வரர் போன்ற ஒரு தெய்வச் சிலையை, ஓரு கிராமத்தில் கண்டெடுத்தார். இதைப்பற்றி தொழிற்சங்கக் கூட்டத்தின் போது தன் நண்பர்களிடம் தெரிவித்தார். இன்றைய கோவில் தலைவரான திரு. நாகலிங்கம், அன்று ஓர் உருப்பினராக இருந்தார்.


Thiru Nagalingam
திரு. நாகலிங்கம்
Thiru Nagalingam



1962 ஆம் ஆண்டு, அக்கிராம மக்கள் மற்றும் ஆர்.ஏ.எப். ஊழியர்கள் உதவியுடன் முதல் பூஜை நடைபெற்றது. ஒரு வருடம் கழித்து சுற்று வட்டாரத்தை சுத்தப்படுத்தும்போது பக்கத்துக் குடியிருப்புகளுக்குத் தீ பரவி விட்டது. நிலச் சொந்தக்காரர் செய்த புகாரின் பேரில், ஆலய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

இவ்வேளையில், ஒரு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் திரு நாகலிங்கத்தின் கனவில் வெண்ணிற ஆடையணிந்த முதியவர், கதவைத் தட்டி, "கோவிலுக்குப் போய் எப்பொழுதும் போல் விளக்கேற்றி பூஜை நடத்து. உனக்கு நன்மை உண்டாகும்" , என்று கூறினார். அதன்படி திரு நாகலிங்கமும் அவரது நண்பர் திரு. பாப்பையா நாயுடுவும் அங்கிருந்த குடியிருப்பாளர்கள் உதவியுடன் மறுபடியும் பூஜைகள் செய்தனர். 1969 ல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டான் சி ச்சின் அவர்களின் உதவியால் தற்காலிக அனுமதி கிடைத்தது.

ஆனால் மீண்டும் தீ பரவியதால் அக்குடிசை இரையானது. மீண்டும் திரு. நாகலிங்கத்தின் கனவில் சிவந்த மேனியுடைய ஒருவர் வந்து ஆலயத்தை நிர்மாணம் செய்யும்படி தூண்டினார். ஆனால் வீடமைப்பு வளர்ச்சிக் கழக பொறியாளர் அனுமதி கொடுக்கத் தயங்கினார். ஆனால் பிறகு மனம் மாறினார்.இம்மாறுதல், இறைவன் செயல் என்று கூறப்பட்டது. இக்கோயில், அருள்மிகு முருகனைப் பிரதிஷ்டை செய்தபின் முருகன் கோவிலானது. ஜொகூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் குருக்களின் ஆலோசனையும் இதற்குக் காரணம்.

1973 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி, சுமார் 2000 சதுர அடிபரப்பில் கோவிலுக்குத் தற்காலிக அங்கீகாரம் கிடைத்தது. அடுத்த மாதமே, 9 சுங்கை தெங்கா சாலை, சுவா சு காங், 12 1/2 வது மைல் என்ற முகவரியில் "முருகன் திருக்குன்றம்" என்ற பெயரில் கோவில் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டது. 1974 ஆம் ஆண்டு திரு பாப்பையா நாயுடு சாங்கி ஆர். ஏ. எப். க்கு மாற்றப்பட்டதால் திரு. நாகலிங்கம் தலைமைப் பொறுப்பேற்றார்.

1983 ஆம் ஆண்டு திரு. காங் ஆ சூ, கட்டிட நிர்மாண பொறியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் கட்டிட வேலை தொடங்குவதற்கான அனுமதி தாமதமானது. பல மனுக்கள் அனுப்பியபின், ஈராண்டுகள் கழித்து பதில் வந்தது. அது தற்போது உள்ள இடத்திலிருந்து காலி செய்ய வேண்டும் எனும் கட்டளையாகும்.

வேறொரு இடத்தைப் பெறுவதற்குப் பல இன்னல்கள் நேரிட்டாலும், கோயில் செயலவை தன் நம்பிக்கையை இழக்கவில்லை. இறுதியில் அப்பர் புக்கிட் தீமா சாலை, 16 வது கிலோ மீட்டரில் தற்போதைய இடம் 455,273 வெள்ளிக்கு வாங்கப்பட்டது. ஆனால் கோவில் நிர்மாணத்திற்கு இன்னும் 1.5 மில்லியன் வெள்ளி தேவைப்பட்டது. சை ஹியாப் கட்டிட நிறுவனம் மாதத்தவணையாக 50,000 வெள்ளி பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது. மெய்யன்பர்கள் தாராளமான நன்கொடையையும் பேராதரவையும் தொடர்ந்து தரும்படி கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.

திரு. காங் அவர்களும் பல வகைகளில் உதவி செய்தார். செவ்வாய் .. வெள்ளிக்கிழமைகளிலும் கோவிலுக்கு வந்த சுமார் 200 மெய்யன்பர்கள் நன்கொடை கொடுத்தனர். 1994 ல் கோவில் கட்டுமான வேலை தொடாங்கியது. அவ்வேளையில் பழைய செயலவைக்குழு மாறியது.

புதிய ஆலயம் ஒரு மாறுபட்ட தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. கீழ்த்தளத்தில் திருமண மண்டபமும் மேல் மாடியில் கோவிலும் அமைந்திருக்கிறது. முருகன், விநாயகர் மற்றும் சிவசக்தி ஆகிய கடவுளர்க்கு மூலஸ்தானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களோடு துர்க்கை, முனீஸ்வரன், மாரியம்மன், பெரியாச்சி அம்மன், லஷ்மி-நாராயணன், நாகர், பைரவர், இடும்பன், முனியாண்டி, நவக்கிரகங்கள் மற்றும் சீனக் கடவுளான குவான் இம் ஆகிய கடவுளர் இருக்கிறார்கள்.

1962 லிருந்து பல மாற்றங்களுக்குள்ளாகி, 1998 ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் முருகன் திருக்குன்றம் பூர்த்தியானது.



Chief Priest Sivasri Parameswara Gurukkal
தெண்டி சிவஸ்ரீ எம். பரமேஸ்வர குருக்கள்
தலைமை அர்ச்சகர் - முருகன் திருக்குன்றம் (1998)

Sivasri Parameswara Gurukkal


ஆலய அமைப்பு

முருகன் திருக்குன்றம் ஆலயம் அப்பர் புக்கிட் தீமா சாலையில் 16 கீ.மீட்டரில் அமைந்துள்ளது. இவ்வாலயம் 2000 சதுர அடி பரப்பில் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் சிறப்பு - முருகப் பெருமானின் ஆறு படை வீடுகள் எவ்வாறு மலைமீது அமையப்பட்டுள்ளனவோ, அதேபோல் அமைந்துள்ளது. ஆலயத்தின் கீழே திருமண மண்டபமும் மேலே ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ காசி விஸ்வநாதர் (சிவ-சக்தி) சன்னிதி அமையப்பட்டுள்ளது. ஆலய நுழை வாயிலில் ராஜகோபுரம் பக்தர்களை வரவேற்கிறது. அதன் கீழ்புறத்தில் மூலவர் சன்னிதியில் உள்ளதுபோல் வள்ளி தெய்வானை சமேதராக முருகப் பெருமான் காட்சி அளிக்கிறார். ராஜ கோபுரத்தின் நான்கு புறங்களிலும் நம்மை எல்லாம் கவரும் வண்ணமாக விநாயகர், தண்டாயுதபாணி, பைரவர், சிவன், சக்தி, நடராஜப்பெருமான், தெட்சணா மூர்த்தி, சரஸ்வதி, நாரதர், ரிஷிகள், வடிவேலு தம்பதியர், துவாரபாலகர், துவார சக்தி, மஹா விஷ்ணு, ரூத்ர தாண்டவர், மயூரதம், வேடன், தெய்வானை திருமணக்கோலம் போன்ற வடிவங்கள் நம்மை மகிழ்விக்கும் வகையில் அமைந்துள்ளன.

பிரகாரத்தின் தென்புறத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயணரும் அருகில் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ராகவேந்திரரும், கன்னி மூலையில் ஸ்ரீ துர்கை அம்மனும் உள்ளனர். வாயுமூலையில் ஸ்ரீ நாகராஜருக்கு தனிச்சன்னிதி அமையப்பட்டுள்ளது. வடபுறத்தில் பெரியாச்சி அம்மனும் காளியம்மனும், சனி மூலையில் ஸ்ரீ முனீஸ்வரர் மேற்கு முகமாகவும் அமையப்பட்டுள்ளனர். இவ்விதமாக வழிபட்டுச் சென்று முருகப்பெருமான் சன்னிதியைக் காண வருக வருக என அழைக்கும் வகையாக தென்புறத்திலும் வடபுறத்திலும் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. அவற்றில் ஏறி, ராஜகோபுர நுழைவாயில் வழியாக உள் பிரகாரம் வலம் வந்து, ஸ்ரீ விநாயகர் சன்னிதியில் வழிபட்டபின், ஸ்ரீ முருகனை வழிபடவேண்டும். அதன் பின் சிவன் .. சக்தியை வணங்கியப்பிறகு, நவக்கிரக வழிபாடு, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ இடும்பன் சன்னிதிகள், கொலுமண்டபத்தின் உற்சவ மூர்த்திகளை வணங்கவேண்டும்.

உற்சவ மூர்த்திகளின் கண்கொள்ளாக் காட்சியைக் காணும்போது அகமகிழும். ஸ்ரீ முருகன் சன்னிதியில் சிறிது நேரம் தியானம் செய்யும் பொழுது நம்மை மகிழ்விக்கும் வகையில், (த்வஜஸ்தம்பம்) என்று சொல்லக் கூடிய கொடிமரம் பொன்னால் செய்யப்பட்டு, நம்மை இறைவழிபாட்டில் எந்நேரமும் ஈடுபடுத்திக் கொள்ள வகையூட்டுகிறது.

விநாயகர் விமானம் கோஷ்டத்தில் விநாயகர் ஆவதாரங்களும், விநாயகர் சன்னிதியின் மேற்குப்புறத்தில் யானைகள் இருபுறமிருக்க, நடுவில் லட்சுமி சிற்பம் உள்ளது. முருகனுடைய விமானத்தின் நான்கு புறங்களிலும் ஆறுபடைவீட்டின் அமைப்புகள் போல அழகுற செய்யப்பட்டுள்ளன. சன்னிதி நிலை மேலே யானைகள் இருபுறமிருக்க, லட்சுமியும் கோஷ்டத்தின் தென்புறத்தில் தெட்சணாமூர்த்தியும் மேற்குப்புறம் மஹா விஷ்ணுவும் வடக்குப்புறம் பிரம்மாவும் அமைந்துள்ளனர்.

முருகன் சன்னிதியில் தைப்பூச விழாவன்று பக்தர்கள் பாலாபிஷேகம் கண்டு உய்க்கும் வண்ணம், பொன்னால் செய்யப்பட்ட வேல் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது. அடுத்து சிவசக்தி சன்னிதியின் நிலைக்குமேல், யானைகள் இருபுறமிருக்க, தனலட்சுமி சிற்பம் காட்சியளிக்கிறது. விமானத்தில் சிவசக்திக்குரிய ரிக்ஷப வாகனமும் மற்றும் பூதங்களும் அமைந்துள்ளன. சன்னிதியின் தென்புறத்தில் கொடுங்களூர் பகவதி அம்மனும், மேற்குப்புறத்தில் அர்த்தநாரீஸ்வரரும், வடக்கில் துர்க்கையும் அமைந்துள்ளனர்.


Temple History & Information

Shanmugam - it was him who initially started Murugan Hill Temple at Lam San Village. He was a plumber attached to the RAF. He spotted a small divine structure that resembled a shrine of Sri Muneeswaran and related the discovery at a local Staff Union's meeting. Mr. Nagalinggam, the present President of the temple, was also a member then.

In 1962, with the support of villagers and RAF employees, the first pooja was offered to mark the founding of the shrine. A year later, while clearing the surrounding area, a fire that was started spread to neighbouring huts. A report was made by the landowner and all activities centered around the shrine ceased. No prayers were held and it fell into a state of neglect.

One Tuesday at dawn, Mr. Lingam had a dream. An elderly man dressed in white, knocked at his door and uttered "Go and light up the shrine and offer prayers as usual. It will be good for you". Thus came the rebirth of the temple. Mr. Lingam, with his friend, Mr. Pappaiya Naidu, and the villagers, began to offer prayers once again. In 1969, with the help of MP Mr. Tang See Chin, the temple was given a temporary permit. A remarkabel transformation was about to take place.

Yet another fire broke out and burnt out the hut. Again, Mr. Lingam had a dream, in which a "reddish man" prompted him to rejuvenate the place with the installation of another deity. An enginner from the HDB was reluctant to allow any change to the present situation until further notice. However, some time later, he changed his mind. What had brought about this change of heart? In their hearts the devotees know, and they thanked the Lord.

What was a shrine dedicated to Sri Muneeswaran soon became an abode for Murugan. It was also the urging of the priest from the Sri Maha Mariamman Temple in Johore (Malaysia) that this change was undertaken.

On 21st February 1973, the temple was given a temporary license for an area of 2000 sq. feet on lot 106. The temple was officially registered a month later as "Murugan Hill Temple" of 9V, Sungei Tengah Road, 12 1/2 miles off Chua Chu Kang. Among Hindus, it was called Murugan Thirukkundram. Panguni Uthiram saw thousands of devotees trudging up the hill to seek blessings. In 1974, Mr. Pappaiya Naidu, the committee president, was transferred to Changi RAF, and in due course, Mr. Lingam took over the helm.

Things went smoothly until 1983, when urbanisation caught up with the Chua Chu Kang area. The temple site was acquired by the Parks and Recreation Board. While architect - Mr. Kang Auh Chew - had already been appointed, permission was slow in coming for the development of the temple. Numerous appeals were made to the Board, the Land Office, HDB, and MPs. For two years, uncertainty ruled. Finally, an answer: "No. Prepare to vacate Lot 106." The hunt for an alternative site began.

First, the temple was to be situated next to a Buddhist temple near the Chua Chu Kang MRT station. The Land Office rescinded its decision two weeks later. Then, it was to be in Terrace Estate. The location was hardly desirable: it was next to a sewage treatment facility. But it was soon discovered that it was privately owned and the chances of getting that lot was slim. It was the Lord's way of testing the committee's faith. Then, in 1991, the last choice was given. The present location at 16km, Upper Bukit Timah Road, was bought at a cost of 5,273. Another .5 million was needed and Mr. Kang continued to be the architect. Chye Hiap Construction graciously agreed to monthly payments of ,000.

In 1992, the temple moved from its rustic surroundings. Since then, it has been an uphill endeavour. Funds were always "just nice" or "just in time". Appeals after appeals were made to the public and well wishers. Mr. Nagalinggam, as President, made untold sacrifces. Mr Kang the architect, now a friend of 20 years, helped in numerous ways. In May 1993, a "Balastapanam" (a mini consecration ceremony) was held. On Tuesdays and Fridays, about 100 to 200 devotees frequent the temple and they made whatever contributions the could. In 1994, piling works began. The old committee threw up its hands and a new one had to be formed. But through it all, the Divine has been with the key members of the committee.

The new temple has an unique structure, quite unlike any other temple in Singapore:

There is a basement doubling up as a wedding hall while the upper floor contains the temple proper. A small pond will also be constructed in front of the temple. There are three sanctums: for Murugan, Vinayagar and Siva-Shakti. Other deities are: Durga, Muneeswaran, Mariamman, Periyachi, Lakshmi-Narayanan, Nagar, Bairavar, Idumban, Muniandy, and The Navagrahas. There is even the Chinese Deity Kuan Im.

The temple went through dramatic changes since 1962. In 1998 January, the temple was consecrated and the Divine Lord took His place upon this Murugan Hill Temple.

சிறப்புக் கவிதை

Special Poem

  
 பதிவிறக்க    to download 
Thiru L. Vasanthakumar M.A.


சிங்கப்பூர் - புக்கிட் பாஞ்சாங், திருக்குன்றம்
முருகன் துதிமாலை
(இயற்றிப் பாடியவர்: எல். வசந்த குமார், எம். ஏ.)

                           உ

திருமுருகன் உறைகின்ற திருத்தலமாம் திருக்குன்றம்
   அருள்பெருகி நிறைகின்ற அன்பான உளத்தோடு
      உருகித் தொழுவார்க்கு உள்ளத்து துயர்தீர்த்து
         மருள் நீக்கி மண்ணகத்தே மலர்விக்கும் தேவதேவே.         ... 1

மடல்சூழ்ந்த தாமரையின் மத்தியிலே தவழ்ந்தமைபோல்
   கடல்சூழ்ந்த வங்கத்திரு நாடாம்சிங்கப் பதிதனிலே
      அடல்சூழ்ந்த மலையான அழகான திருக்குன்றில்
         இடஞ்சூழ்ந்து இருபுறமும் வள்ளியோடு அருள்பவனே.         ... 2

முருகன்திருக் குன்றென்ற முத்தித் திருநாமம்
   பருகும் அடியவர்க்கு பரசுக இருள்நீக்கி
      தருகும் தவஞானத் தத்துவ நிலைகாட்டிப்
         பெருகும்பேரின்ப நிலைதந்த பெம்மான்எம் முருகவேளே.         ... 3

திருக்குன்றம் என்றிடத் தீவினைகள் அகன்றிடுமே
   திருக்குன்றம் என்றிடத் திருப்பங்கள் ஏற்படுமே
      திருக்குன்றம் என்றிட விருப்பங்கள் மேற்படுமே
         திருக்குன்றம் என்றிடச் சிறப்புடன் அருளிடுமே.         ... 4

ஓடும்பரி யேறியொரு வாசகனை ஆண்டதுபோல்
   ஆடும்பரி யேறிஅருணை முனியை ஆட்கொண்டு
      நாடுமிடமாக நம்திருக்குன்றம் அமர்ந்தவனைப்
         பாடும்பணி யென்றும் பதமலர் காட்டிடுமே.         ... 5



A song in praise of Murugan at Thirukkundram
(Singapore - Bukit Panjang)
(composed and sung by: L. Vasantha Kumar, M.A.)

                  (English transliteration)

thirumurugan uRaigindra thiruththalamAm thirukkundRam
   aruLperugi niRaigindra anbAna uLaththOdu
      urugith thozhuvArkku uLLaththu thuyartheerththu
         maruL neekki maNNagaththE malarvikkum dhEvadhEvE.         ... 1

madalsUzhndha thAmaraiyin madhdhiyilE thavazhndhamaipOl
   kadalsUzhndha vangkaththiru nAdAmsingkap padhidhanilE
      adalsUzhndha malaiyAna azhagAna thirukkundRil
         idanjchUzhndhu irupuRamum vaLLiyOdu aruLbavanE.         ... 2

muruganthiruk kundRendRa muththith thirunAmam
   parugum adiyavarkku parasuga iruLneekki
      tharugum thavanjAnath thaththuva nilaikAttip
         perugumpErinba nilaithandha pemmAn em murugavELE.         ... 3

thirukkundRam endRidath theevinaigaL agandRidumE
   thirukkundRam endRidath thiruppangkaL ERppadumE
      thirukkundRam endRida viruppangkaL mERppadumE
         thirukkundRam endRidach siRappudan aruLidumE.         ... 4

Odumpari yERiyoru vAsaganai AaNdadhupOl
   Aadumpari yERiaruNa muniyai AatkoNdu
      nAdumidamAga namthiruk kundRam amarndhavanaip
         pAdumpaNi yendRum padhamalar kAttidumE.         ... 5

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple



ஆலய நேரங்கள்

temple timings

5:30 am - 12 noon
6 pm - 9 pm
(Tues: 3 pm - 9 pm)



ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Murugan Hill Temple
931 Upper Bukit Timah Road,
SINGAPORE
Postcode: 678207
Telephone: +65 6769 5784
Telephone: Fax: +65 6769 9003
E-Mail: murugantemple@singnet.com.sg


ஆலயம் இருக்கும் இடம்   (கூகள் மேப்ஸ்க்கு நன்றி)
temple location   (courtesy of Google Maps)
1.377152, 103.761830



For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Murugan Thirukkundram - Bukit Panjang, , Singapore
(kdcsga01)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]