Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri Subramaniar Temple - Gerik, Malaysiaஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம்
கிரீக் பேராக் மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Sri Subramaniar Temple  Flag of Perak State
Gerik Perak Malaysia
history address timings special events previous-other names location map

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple

கிரீக் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வரலாறு
(26-11-1993 இன் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலரிலிருந்து)

19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியர்கள் கிரீக் நகரில் குடியேறினர். 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற ஔவை மொழியைக் குருதியிலே குடியேற்றிய இந்துக்களுக்கு இங்கு அன்றாடம் வழிபடக்கூடிய ஓர் ஆலயம் அமையாதிருந்தது பெருந் தவக் குறைவாகவே இருந்து வந்தது. இக்குறையை நீக்கி வெள்ளி மாநிலப் பெருநதியாம் பேராக் நதியருகில் கிரீக் நகரில் ஓர் ஆலயத்தை எழுப்பினர்.

1920 அளவில் இக் கோயிலை நல்ல முறையில் புதுப்பித்தனர். இதற்கான நிலத்தை அந்நாளைய மாவட்ட அதிகாரி கேப்டன் எச். பெர்கிலி என்ற ஆங்கிலேயப் பெருமகனார் பெருமனதுடன் தந்தருளினார்கள். அன்னவரின் அளப்பரிய திருப்பணியை நாம் மறக்க முடியாது.

அமரர் வீ. இராமசாமி நாயக்கர் அவர்களின் சீரிய தலைமைகொண்ட செயற்குழுவினர் இத் திருப்பணியைச் செய்து முடித்தனர். இவருடன் அமரர் வீரப்பா, அமரர் சுப்பையா மற்றும் அமரர் நடேசன் போன்ற தொண்டர் பெருமக்கள் ஆற்றிய தன்னலமற்ற தொண்டுகள் பாராட்டுக்குரியனவாகும்.அமரர் வீ. இராமசாமி நாயுடு அவர்கள் அக்காலக்கட்ட இந்தியர்களின் வர்த்தக வழிகாட்டியாக விளங்கினார்கள். ஓர் அஞ்சலக ஊழியராகத் தம் தொழிலைத் தொடங்கியவர், பின்னர் தம் சொந்த நிலத்தில் சாலைக் கல் தயாரிக்கும் (குவாரி) தொழிலை இயக்கினார். (அதன் பிறகு பொதுப்பணித் துறைக் குத்தகையாளராகவும், 'லாவின்' மற்றும் 'ஆயர்காலா' என்ற இடத்தில் புதிய சாலைக் கல் தயாரிக்கும் நிருவனத்தையும் உருவாக்கினார்கள்).

இவரால் புதிப்பிக்கப்பட்ட கோவில், 1929 ஏப்ரல் 23 இல் முறையாக பதிவு செய்யப்பெற்றது. அரசு ஆவணத்திலும் (கேசட்) பதிவு பெற்றது. இதே நன்நாளில் இக்கோவிலின் குடமுழுக்கும் நிகழ்வுற்றது. அதன் பின்னர் 1938 பிப்ருவரி 11 இல் மீண்டும் ஒரு குடமுழுக்கு நடபெற்றது. அமரர் திருமிகு செல்லம் அவர்களால் பேராக் நதியை நோக்கி ஒரு நடைபாதை உருவாக்கப்பெற்றது. பெரும்பாலும் மாலை வேளையில் மக்கள் அதிகமானோர் நதியில் நீராடிவிட்டு வழிபாட்டை தொடங்கியுள்ளனர்.

அதன் பிறகு கோவில் குறித்த விவரங்கள் சரிவரக் கிடைக்கவில்லை. இருப்பினும் 1950, 1970-ஆம் ஆண்டுகளில் உயர்திரு பி. சுப்பையா ஜே. பி. அவர்களும் பின்னர் உயர்திரு வீ. சுப்பையா ஜே. பி. அவர்களும் ஆலய பொறுப்பேற்று பணியாற்றி, பிறகு 1979 இல் குடமுழுக்கு நடைபெற்றது.

ஆதாரங்கள்:

1. 1957 இன் கிரீக் ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் கணக்கறிக்கையும், குறிப்புக்களும் திரு. ஆர். முத்துசாமி அவர்களால் அளிக்கப்பெற்றது.

2. கோலாலம்பூர் திருமிகு வரதராஜூ (அமரர் வீ. இராமசாமி நாயுடுவின் மகனார்).

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

வைகாசி விசாகம் (10 நாட்கள்)
இரத ஊர்வலம்

VaigAsi VisAgam (10 days festivities)
Chariot Procession



ஆலய நேரங்கள்

temple timings

7 am – 9 am
7 pm – 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Subramaniar Temple,
Gerik,
Perak,
MALAYSIA
Postcode: 33300


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
5.424660, 101.127549

Sri Subramaniar Temple - Gerik, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri Subramaniar Temple - Gerik, Perak, Malaysia
(kdcmya23)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]